Andra Nalla Karam Podi : ஆந்திராவின் நல்ல காரம் பொடி! இட்லி, தோசையை அடுக்கிக்கொண்டே போகலாம்! அருமையானது!
Andra Nalla Karam Podi : ஆந்திராவின் நல்ல காரம் பொடி! இட்லி, தோசையை அடுக்கிக்கொண்டே போகலாம்! அருமையானது!
தேவையான பொருட்கள்
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
கடலை பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒன்றரை டேபிள் ஸ்பூன்
வர கொத்தமல்லி – 4 ஸ்பூன்
வர மிளகாய் – 10 – 15 (உங்கள் கார அளவுக்கு ஏற்ப அதிகம் அல்லது குறைவாக்கிக்கொள்ளலாம்)
சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன்
புளி – எலுமிச்சை அளவு
(உங்களுக்கு புளிப்பு சுவை பிடிக்கும் என்றால் எலுமிச்சை அளவு சேர்த்துக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் குறைவாகவோ அல்லது தவிர்க்கவோ கூட செய்யலாம். ஆனால் புளி சேர்த்து செய்யும்போது சுவை நன்றாக இருக்கும்)
பூண்டு – 12 பல்
கல் உப்பு – தேவையான அளவு
செய்முறை
கடாயில் எண்ணெயை சூடாக்கி அதில் கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து நன்றாக வறுக்கவேண்டும். இரண்டும் சிவந்து வந்த பின்னர், வர மல்லி மற்றும் வர மிளகாயை சேர்க்கவேண்டும். அடுத்து சீரகத்தை சேர்த்து நன்றாக மணம் வரும் வரை வறுக்கவேண்டும்.
அனைத்து பொருட்களும் பச்சை வாசம் போகும் அளவு வறுக்கவேண்டும். பின்னர் புளியை சேர்த்துக்கொள்ளவேண்டும். அதையும் சிறிது வதக்கிய தனியாக ஒரு தட்டில் கொட்டி ஆறவைக்கவேண்டும்.
பூண்டை வறுக்கவேண்டும். வறுத்த பூண்டை மட்டும் தனியாக தட்டி எடுத்துக்கொள்ளவேண்டும். மற்ற ஆறிய பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவேண்டும். அதில் தட்டிய பூண்டை சேர்த்து கலந்துவிடவேண்டும்.
இதனுடன் நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து இட்லி மற்றும் தோசைக்கு தொட்டுக்கொள்ள சிறந்தது. ஆந்திரா நல்ல காரம் பொடி அனைவரும் விரும்பும் ஒன்றாக இருக்கும்.
ஆந்திரா சில உணவு வகைகளுக்கு பிரபலமானது. அதில் ஆந்திரா நல்ல காரம் பொடியும் ஒன்று ஆகும். இட்லி பொடிகளில் வழக்கமாக வரமல்லியை சேர்த்து செய்ய மாட்டார்கள். மிளகாய் மட்டுமே சேர்க்கப்படும்.
இவையிரண்டும்தான் இதில் முக்கியமான உட்பொருட்கள் ஆகும். பொதுவாகவே ஆந்திரா சமையலில் பொடி வகைகள் அதிகம் இருக்கும். குறிப்பாக அவற்றில் கார சுவையும் அதிகம் இருக்கும்.
இந்தப்பொடிக்கு கருப்பு உளுந்தை சேர்ப்பது நல்லது. கருப்பு உளுந்தை சேர்த்து வறுக்கும்போது, அது வறுபட்டுவிட்டதை அறிவது கடினம். எனவே அதனுடன் சிறிது வெள்ளை உளுந்தையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
அப்போது வெள்ளை உளுந்து வறுபட்டு வரும் நேரத்தில் கருப்பு உளுந்து வறுபட்டு இருக்கும். கருப்பு உளுந்தை எதற்கு வறுத்தாலும் இந்த ஒரு டிப்ஸ் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
குறிப்புகள்
வரமல்லியை வறுக்கும்போது நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் அதன் பச்சை வாசம் மிகவும் பொடியை கெடுத்துவிடும்.
வெறும் உளுந்து அல்லது கடலை பருப்பு அல்லது இரண்டும் சேர்த்து என எப்படி வேண்டுமானாலும் இந்தப்பொடியை தயாரிக்கலாம்.
பூண்டை வறுக்கும்போதும் சிறிது பொடித்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் அது நன்றாக வறுபடும். அதை கடைசியாக மிக்ஸியில் சேர்த்தும் அரைக்கலாம் அல்லது அதை நன்றாக ஒன்றிரண்டாக தட்டியும் சேர்க்கலாம்.
வழக்கமான இட்லிபொடிகளைவிட இது மிகவும் வித்யாசமானது. இதன் சுவையும் அலாதியாக இருக்கும். வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
ஒருமுறை ருசித்தால், மீண்டும் மீண்டும் செய்து சாப்பிட தூண்டும் சுவையைக்கொண்டது இந்த ஆந்திரா நல்ல காரம் பொடி. எனவே இந்தப்பொடியை மீண்டும், மீண்டும் ருசித்து சாப்பிட்டு மகிழுங்கள்.
டாபிக்ஸ்