Andra Style Vazhakai Bajji : வேர்கடலையுடன் செய்யப்படும் ஆந்திரா ஸ்டைல் வாழைக்காய் பஜ்ஜி எப்படி செய்வது?
Andra Style Vazhakai Bajji : வேர்கடலையுடன் செய்யப்படும் ஆந்திரா ஸ்டைல் வாழைக்காய் பஜ்ஜி எப்படி செய்வது?
ஆந்திரா ஸ்டைல் வாழைக்காய் பஜ்ஜி செய்ய தேவையான பொருட்கள்
வேர்கடலையை வறுக்க
எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
வேர்கடலை – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
ஃபில்லிங் செய்ய
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி இலை - கைப்பிடியளவு பொடியாக நறுக்கியது
சாட் மசாலா தூள் – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
எலுமிச்சைபழச்சாறு – 2 ஸ்பூன்
பஜ்ஜி செய்ய
வாழைக்காய் – 1
கடலை மாவு – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
ஓமம் – ஒரு ஸ்பூன்
பேக்கிங் சோடா – சிறிதளவு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை -
கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வேர்கடலையை சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கலந்து இறக்கவேண்டும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, உப்பு, மிளகாய் தூள், சாட் மசாலா தூள் சேர்த்து கலந்து வைக்கவேண்டும்.
பின்னர் மற்றொரு பாத்திரத்தில் கடலை மாவு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், ஓமம் சேர்த்து கலந்து, பின்னர் கொஞ்சம், கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கலந்து, பின்னர் பேங்கிங் சோடா சேர்த்து கலக்கவேண்டும்.
வாழைக்காயை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிகொள்ளவேண்டும். அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கிக்கொள்ள வேண்டும்.
பின்பு வாழைக்காயை மாவில் தோய்த்து சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவேண்டும்.
பிறகு பஜ்ஜியை பாதியாக நறுக்கி அதில் தயார் செய்த வெங்காய கலவையை வைத்து அதன் மேல் எலுமிச்சைபழச்சாறு சேர்த்து பின்னர் வறுத்த வேர்கடலையை வைத்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவேண்டும்.
சுவையான ஆந்திரா ஸ்டைல் வாழைக்காய் பஜ்ஜி தயார்.
நன்றி – ஹேமா சுப்ரமணியன்.
இதற்கு தொட்டுக்கொள்ள தனியாக சட்டினிகள் எதுவும். தேவையில்லை. இதிலே நிறைய மசாலாக்கள் உள்ளது.
குழந்தைகளுக்கு இது மிகவும் பிடிக்கும். வழக்கமான வாழைக்காய் பஜ்ஜிபோல் இல்லாமல் மசாலாக்கள் கலந்திருப்பதால், தனிச்சுவையுடன் இது நன்றாக இருக்கும்.
வாழைக்காயின் நன்மைகள்
வாழைக்காயில் நார்ச்சத்து மற்றும் மாவுச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அது குடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்னைகளில் இருந்து உங்களை விடுவிக்கிறது. இதை தொடர்ந்து உணவில் சேர்த்து வர செரிமானம் மண்டலம் சிறப்பாக செயல்பட உதவும்.
வாழைக்காய் மலச்சிக்கலை நீக்கி, வயிறுதொடர்பான பிரச்னைகளையும் சரிசெய்கிறது. வாழைக்காயில் பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீசு, வைட்டமின் பி6 மற்றும் சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
இதிலுள்ள பொட்டாசியம் உங்களது சிறுநீரகத்துக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
இதில் குறைந்த டயட் அளவுகள் கொண்ட நார்ச்சத்து நிரம்பியிருப்பதால் வயிறு நிரம்பிய உணர்வை உண்டாக்குகிறது. இதனால் அதிகம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் கட்டுப்படுத்தப்பட்டு, உடல் எடை அதிகரிக்க செய்யாமல் பார்த்துக்கொள்கிறது.
டாபிக்ஸ்