Amla Thuvayal : மணக்க மணக்க நெல்லிக்காய் துவையல்; சூடான சாதத்தில் நெய்யுடன் சுவை அள்ளும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Amla Thuvayal : மணக்க மணக்க நெல்லிக்காய் துவையல்; சூடான சாதத்தில் நெய்யுடன் சுவை அள்ளும்!

Amla Thuvayal : மணக்க மணக்க நெல்லிக்காய் துவையல்; சூடான சாதத்தில் நெய்யுடன் சுவை அள்ளும்!

Priyadarshini R HT Tamil
Aug 25, 2024 11:39 AM IST

Amla Thuvayal : மணக்க மணக்க நெல்லிக்காய் துவையல்; சூடான சாதத்தில் நெய்யுடன் சுவை அள்ளும்!

Amla Thuvayal : மணக்க மணக்க நெல்லிக்காய் துவையல்; சூடான சாதத்தில் நெய்யுடன் சுவை அள்ளும்!
Amla Thuvayal : மணக்க மணக்க நெல்லிக்காய் துவையல்; சூடான சாதத்தில் நெய்யுடன் சுவை அள்ளும்!

உடலின் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது. வாந்தி, பித்த பிரச்னைகள், வறட்சி, அனீமியா ஆகியவற்றை தடுக்கிறது.

இதனுடன் திப்பிலி சேர்த்து சாப்பிடும்போது, பசி மற்றும் செரிமானம் அதிகரிக்கிறது.

ஆஸ்துமா, இருமல், முச்சுக்குழாய் வீக்கம் ஆகியவற்றை தடுக்கிறது. நெல்லிக்காயை நேரடியாக சாப்பிடும்போது துவர்ப்பு சுவையாக இருக்கும். அதறக்காக அதிலிருந்து பல்வேறு உணவுகளும் செய்யப்படுகின்றன.

அல்சரை குணப்படுத்துகிறது.

இத்தனை நன்மைகள் நிறைந்த இந்த நெல்லிக்காயில் மேலும் பல ரெசிபிகளும் செய்யலாம். பழச்சாறு, ஊறுகாய், சாதம், லேகியம், ரசம், தேநீர் என பல்வேறு வகையாக நாம் இந்த நெல்லிக்காயை உட்கொள்ளலாம்.

நெல்லிக்கனியை தினமும் எடுப்பவர்களுக்கு நரை, திரை, மூப்பு வருவதில்லையென்றும், அவர்களின் வாழ்நாள் நீட்டிக்கப்படுகிறது என்றும் ஆய்வுகளே உறுதிப்படுத்தியுள்ளன. எனவே உங்கள் உணவில் கட்டாயம் நெல்லிக்காயை சேர்த்துக்கொள்ளுங்கள்.

இது உங்கள் உடலுக்கு இத்தனை நன்மைகளைக் கொடுக்கிறது. அதனால்தான் உடலுக்கு இயற்கை நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்க வேண்டுமெனில், தினம் ஒரு நெல்லிக்காயை கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

நெல்லிக்காய் துவையல் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் – 6

எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

உளுந்து – கால் கப்

வரமிளகாய் – 6

இஞ்சி – ஒரு இன்ச்

கறிவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு

சீரகம் – அரை ஸ்பூன்

புளி – சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

தேங்காய் துருவல் – அரை கப்

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – கால் ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

வெல்லம் – அரை ஸ்பூன் (பொடித்தது)

செய்முறை

நெல்லிக்காயை வேகவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். அதை உதிர்த்து விதைகளை நீக்கி நன்றாக ஆறவைத்துவிடவேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன் உளுந்து சேர்க்கவேண்டும். அது சிவந்தவுடன், வரமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சீரகம், புளி சேர்த்து வதக்கவேண்டும்.

அனைத்தும் வதங்கியவுடன் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவேண்டும். பின்னர் ஆறவைத்து அனைத்தையும் மிக்ஸிஜாரில் சேர்க்கவேண்டும். வேகவைத்த நெல்லிகாயையும் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

துவையல் பதத்துக்கு அதிகம் தண்ஷீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். அரைக்கும்போது தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவேண்டும்.

தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன் கடுகு, உளுந்து சேர்த்த்து பொரிந்தவுடன், உளுந்து சிவக்கும்போது கறிவேப்பிலையை தூவவேண்டும்.

பின்னர் அரைத்த துவையலை சேர்த்து, சிறிது வெல்லம் சேர்த்து கிளறி இறக்கினால் சூப்பர் சுவையில் நெல்லிக்காய் துவையல் தயார்.

இதை சூடான சாதத்தில் போட்டு, நெய்யுடன் பிசைந்து சாப்பிட சுவை அள்ளும். நெல்லிக்காயே சாப்பிடாதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.