Amla Sharbath : நீரிழிவு நோய்க்கு அருமருந்து - நெல்லிக்காய் - இப்படி சர்பத் செய்து பாருங்களேன்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Amla Sharbath : நீரிழிவு நோய்க்கு அருமருந்து - நெல்லிக்காய் - இப்படி சர்பத் செய்து பாருங்களேன்!

Amla Sharbath : நீரிழிவு நோய்க்கு அருமருந்து - நெல்லிக்காய் - இப்படி சர்பத் செய்து பாருங்களேன்!

Priyadarshini R HT Tamil
Published Aug 24, 2023 04:15 PM IST

Amla Sharbath : நெல்லிக்காயில் உள்ள மற்ற நன்மைகள் - நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். பெப்டிக் அல்சரை குறைக்கும். எடை குறைப்புக்கு உதவும், குடல் நன்றாக இயங்க வழிவகுக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும், பார்வைத்திறன் மேம்படும். ரத்த ஓட்டம் மேம்படும்

நெல்லிக்காய் சர்பத் செய்வது எப்படி?
நெல்லிக்காய் சர்பத் செய்வது எப்படி?

நெல்லிக்காயில் உள்ள மற்ற நன்மைகள் - நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். பெப்டிக் அல்சரை குறைக்கும். எடை குறைப்புக்கு உதவும், குடல் நன்றாக இயங்க வழிவகுக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும், பார்வைத்திறன் மேம்படும். ரத்த ஓட்டம் மேம்படும்

நெல்லிகாய் சர்பத் செய்ய தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் – 2

தண்ணீர் – தேவையான அளவு

சர்க்கரை – தேவையான அளவு

அல்லது

தேன் – தேவையாள அளவு

(தேன் சிறந்ததது)

உப்பு – தேவையான அளவு

சாட் மசாலா – ஒரு சிட்டிகை

மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை

வறுத்த சீரகத்தூள் – ஒரு சிட்டிகை

இந்துப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை

நெல்லிக்காயை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும்.

காய் நன்றாக வெந்தவுடன், அதை அடுப்பில் இருந்து எடுத்து ஆறவிடவேண்டும்.

கைகளால் பிசைந்து விதையை நீக்கிவிட்டு, ஒரு மிக்ஸிஜாரில் சேர்த்து, சர்க்கரை மற்றும் உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக அடித்து வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அந்தசாறில், சாட் மசாலா, மிளகுத்தூள், சீரகத்தூள், இந்துப்பு என அனைத்தும் உங்களுக்கு தேவையான அளவு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

ஒரு டம்ளரில் 2 க்யூப் ஐஸ் கட்டி சேர்த்து, நெல்லிக்காய் சாற்றை சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.

இதை பருகினால் சுவையுடன், ஆரோக்கியமும் கிடைக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.