Amla Rice : உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் நெல்லிக்காய் சாதம் எப்படி செய்வது?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Amla Rice : உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் நெல்லிக்காய் சாதம் எப்படி செய்வது?

Amla Rice : உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் நெல்லிக்காய் சாதம் எப்படி செய்வது?

Priyadarshini R HT Tamil
Jul 11, 2023 07:13 PM IST

Amla Rice : நெல்லிக்காயை பச்சையாக சாப்பிட சிலர் விரும்பமாட்டார்கள். அவர்களுக்கு பிடித்த வகையில் இதுபோன்ற சாதமாக செய்துகொடுங்கள் நன்றாக விரும்பி சாப்பிடுவார்கள்.

நெல்லிக்காய் சாதம்
நெல்லிக்காய் சாதம்

நெல்லிக்காயை சாப்பிட்டு முடித்த பின் தண்ணீர் குடித்தால் இனிப்பாக இருக்கும். அதுவே குழந்தைகளை கவரும் ஒன்றாகும். இதை பச்சையாகவே உப்பு தொட்டு சாப்பிட சுவை நன்றாக இருக்கும். இதை உப்பு நீரில் நீண்ட நாட்களுக்கு ஊறவைத்து சேமித்து வைத்துக்கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும்.

நெல்லிக்காயில் ஊறுகாய் செய்யலாம். அது பரவலாக பயன்படுத்தப்படுத்தப்படும். இதில் மேலும் சில உணவு பதார்த்தங்களும் செய்யலாம். நெல்லிக்காய் சட்னி, நெல்லிக்காய் பச்சடி, நெல்லிக்காய் பருப்பு கூட்டு மற்றும் நெல்லிக்காய் சாதம் ஆகியவை செய்யலாம். அதை நீங்கள் பயங்கர பிசியான நாட்களிலும் எளிதாக செய்து முடித்துவிடலாம். இதை நீங்கள் மதிய உணவுக்கும் எடுத்துச்செல்லாம். இதற்கு உருளைக்கிழங்கு சிப்ஸ் தொட்டுக்கொண்டு அல்லது ஏதேனும் ஒரு துவையல் தொட்டுக்கொண்டே சாப்பிட்டு முடித்துவிடலாம்.

நெல்லிக்காய் சாதம் செய்ய தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரசி – 1 கப்

துருவிய நெல்லிக்காய் – 1 கப்

கொத்தமல்லி – கைப்பிடி நறுக்கியது

மஞ்சள் தூள் – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

தாளிப்புக்கு

கடுகு – 1 ஸ்பூன்

உளுந்தப்பருப்பு – 1 ஸ்பூன்

இஞ்சி – துருவியது சிறிதளவு

காய்ந்த மிளகாய் – 2

பச்சை மிளகாய் – 2

கறிவேப்பிலை – சிறிதளவு

எண்ணெய் – 2 ஸ்பூன்

செய்முறை

பாஸ்மதி அரிசியை நன்றாக மலர்ந்த நிலையில் வடித்து ஆறவைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் இதற்கு மீந்த சாதத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் சூடுபடுத்தி, கடுகு, உளுந்து, கடலை பருப்பு ஆகியவற்றை தாளிக்க வேண்டும்.

துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை போட்டு வதக்கிக்கொள்ள வேண்டும்.

துருவிய நெல்லிக்காய், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.

அடுத்ததாக அரிசி கலந்து அனைத்தையும் ஒன்றுகூட்டி, நன்றாக கிளறிவிடவேண்டும்.

கடைசியா கொத்தமல்லி தூவி இறக்கிவிடவேண்டும். நெல்லிக்காயின் சுவை, மற்றும் கொத்தமல்லியின் மணம் அனைத்தும் நன்றாக சாதத்தில் இறங்கியிருக்க வேண்டும். பின்னர் பரிமாற உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு உணவாக இருக்கும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.