Amla Rasam : உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெல்லி ரசம்.. இப்படி ஒரு முறை செஞ்சு கொடுங்க.. சுவையும் அபாரம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Amla Rasam : உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெல்லி ரசம்.. இப்படி ஒரு முறை செஞ்சு கொடுங்க.. சுவையும் அபாரம்!

Amla Rasam : உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெல்லி ரசம்.. இப்படி ஒரு முறை செஞ்சு கொடுங்க.. சுவையும் அபாரம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Published Jul 04, 2024 08:18 PM IST

Nellikai Rasam : நாம் வீட்டில் அடிக்கடி ரசம் வைக்கிறோம். ரசம் என்பதே உடலுக்கு ஆற்றல் தருவதோடு செரிமானத்தையும் தூண்டும். அந்த ரசத்தை மேலும் சுவையானதாகவும் ஆரோக்கியமானதாகவும் மாற்ற நெல்லிக்காய் வைத்து ரசம் செய்யலாம்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெல்லி ரசம்.. இப்படி ஒரு முறை செஞ்சு கொடுங்க.. சுவையும் அபாரம்!
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெல்லி ரசம்.. இப்படி ஒரு முறை செஞ்சு கொடுங்க.. சுவையும் அபாரம்!

நெல்லிக்காய் ரசத்திற்கு தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் - 4

சீரகம் 1 ஸ்பூன்

வர மல்லி - 1 ஸ்பூன்

மிளகு - 1 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

பூண்டு - 10 பல்

எண்ணெய் - 2 டீஸ்பூன்

தக்காளி - 1

துவரம் பருப்பின் தண்ணீர்

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

புளி - நெல்லிக்காய் சைஸ்

நெய் - 2 ஸ்பூன்

கடுகு - அரை ஸ்பூன்

கடலை பருப்பு - 1 ஸ்பூன்

பெருங்காயம் - அரை ஸ்பூன்

கருவேப்பிலை

கொத்தமல்லி

நெல்லிக்காய் ரசம் செய்முறை

ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் வர மல்லி, இரண்டு காய்ந்த மிளகாய் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும்.

நான்கு நெல்லிக்காய் விதைகளை நீக்கி எடுத்து கொள்ள வேண்டும். நெல்லிக்காயோடு பத்து பல் பூண்டு சேர்த்து நன்கு தட்டி எடுத்துக் கொள்ளுங்கள். நெல்லிக்காய் பூண்டை நைசாக அரைக்க வேண்டியதில்லை. தட்டி எடுத்துக் கொண்டாலே போதுமானது.

பின்னர் ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் நாம் தட்டி வைத்த இந்த நெல்லிக்காய் மற்றும் பூண்டை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் அதில் நன்கு பழுத்த ஒரு தக்காளியை கையால் பிசைந்து அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதில் நாம் அரைத்து வைத்த மிளகு சீரகம், மல்லி, காய்ந்த மிளகாய் வத்தல் பவுடரை சேர்க்க வேண்டும். பின்னர் நாம் வேக வைத்த துவரம் பருப்பின் தண்ணீர் ஊற்றி, பின்னர் ஒரு நெல்லிக்காய் சைஸ் புளி கரைசலை ஊற்றி கொதிக்க விட வேண்டும். பின்னர் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு தக்காளி வேகம் அளவிற்கு கொதிக்க விட வேண்டும்.

கொத்தமல்லியின் வேரையும் தட்டி சேர்க்கலாம். வாசம் நன்றாக இருக்கும். நெல்லிக்காய் ரசம் லேசாக கொதிக்க ஆரம்பிக்கும் போது அடுப்பை அணைத்து விட வேண்டும்.

பின்னர் தாளிப்பு கரண்டியில் ஒரு டீஸ்பூன் நெய், கடுகு, உளுந்தம்பருப்பு பெருங்காயம், ஒரு வர மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இதை நாம் ஏற்கனவே கொதிக்க வைத்த ரசத்தில் அடுப்பை அணைத்துவிட்டு தாளிப்பை சேர்க்க வேண்டும். கடைசியாக கொத்தமல்லி தலையை தூவி இறக்க வேண்டும். இந்த ரசத்தை ஒரு முறை செய்து தந்தால் மீண்டும் மீண்டும் வீட்டில் இருப்பவர்கள் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

நெல்லிக்காயின் நன்மைகள்

நெல்லிக்காய் சாறு குடல் இயக்கத்தை எளிதாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. இது வயிற்று வலியைக் குறைக்கிறது. சீரான குடல் இயக்கத்திற்கு உதவி செரிமானத்தை மேம்படுத்துகிறது. நெல்லிக்காய் சில ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடலில் நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்க பெரிதும் உதவும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.