தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Amla For Diabetes: Ways To Include Indian Gooseberry In Your Diet

Amla for Diabetes: சர்க்கரை நோய் பாதிப்பை குறைக்கும் அருமருந்தாக இருக்கும் நெல்லிக்காய்! எப்படி தெரியுமா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 03, 2024 05:40 PM IST

பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கும் நெல்லிக்காய், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் அருமருந்தாகவும் இருந்து வருகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாக இருந்து வரும் நெல்லிக்காயை டயபிடிஸ் பாதிப்பு இருப்பவர்கள் எப்படியெல்லாம் டயட்டில் சேர்த்து கொள்ளலாம் என தெரிந்து கொள்ளலாம்.

சர்க்கரை நோய் பாதிப்பை குறைக்கும் நெல்லிக்காய்
சர்க்கரை நோய் பாதிப்பை குறைக்கும் நெல்லிக்காய்

ட்ரெண்டிங் செய்திகள்

நெல்லிக்காயில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு எதிராக போராடும் தன்மை கொண்டதாக உள்ளது. சர்க்கரை நோய் பாதிப்பை குறைக்கும் தன்மையும் நெல்லிக்காயில் உள்ளது.

ரத்த குளுகோய் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதன் மூலம், ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. அத்துடன் உடலில் உடலில் நச்சுகள் சேர்வதை தடுக்கிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், சர்க்கரை நோய்க்கான அறிகுறிகளை குணப்படுத்தும் தன்மை இயற்கையாகவே இருப்பதுடன், செல்களில் இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கவும் உதவுகிறது.

ஊட்டச்சத்துகளின் களஞ்சியமாக இருந்து வரும் நெல்லிக்காய் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. டயபிடிஸ் பாதிப்பு நெல்லிக்காய் எப்படி நிர்வகிக்கிறது, சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பவர்கள் நெல்லிக்காயை எப்படியெல்லாம் சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம்

நெல்லிக்காய் ஜூஸ்

நெல்லிக்காய் சாறு எடுத்து, அதில் சிறிது அளவு தண்ணீர் சேர்த்து தூங்கி எழுந்தவுடன் காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். நெல்லிக்காயில் இருக்கும் நார்ச்சத்துகள் ரத்த சர்க்கரை அளவை சீராக்கும்

நெல்லிக்காய் டீ

நெல்லிக்காயை நறுக்கி நன்கு உலர வைக்க வேண்டும். அதன் பின்னர் உலர்ந்த துண்டுகளை தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதிந்தவுடன் அந்த நீரை டீக்கு மாற்றாக பருகலாம். நாள்தோறும் இதை ஒரு பழக்கமாகவே செய்து வந்தால் டயபிடிஸ் பாதிப்பு பெருமளவு குறையும் என கூறப்படுகிறது. ருசிக்காக இலவங்கப்பட்டை சேர்த்து கொள்ளலாம்

நெல்லிக்காய் வெந்தயம் கலவை

நெல்லிக்காய் போல் வெந்தயமும் ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. நெல்லிக்காய் மற்றும் வெந்தயத்தை நன்கு பொடியாக்கி அவை இரண்டையும் கலந்து தண்ணீரில் சேர்த்து பருக வேண்டும். தேவைப்பட்டால் சாப்பிடும் உணவிலும் தூவி சாப்பிடலாம். இந்த கலவையானது நீரிழிவு நோயை நிர்வகிப்பதில் ஒரு ஒருங்கிணைந்த விளைவை அளிக்கும் என கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்