Amla Eating Methods : நெல்லிக்காயை வெறும் வயிற்றில் எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா? அப்போதுதான் பலன் பன்மடங்கு அதிகம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Amla Eating Methods : நெல்லிக்காயை வெறும் வயிற்றில் எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா? அப்போதுதான் பலன் பன்மடங்கு அதிகம்!

Amla Eating Methods : நெல்லிக்காயை வெறும் வயிற்றில் எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா? அப்போதுதான் பலன் பன்மடங்கு அதிகம்!

Priyadarshini R HT Tamil
Updated Sep 14, 2024 04:35 PM IST

Amla Eating Methods : நெல்லிக்காயை வெறும் வயிற்றில் எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள். அப்போதுதான் அதன் பலன் பன்மடங்கு அதிகரிக்கும். அதை தெரிந்துகொண்டு பலன்பெறுங்கள்.

Amla Eating Methods : நெல்லிக்காயை வெறும் வயிற்றில் எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா? அப்போதுதான் பலன் பன்மடங்கு அதிகம்!
Amla Eating Methods : நெல்லிக்காயை வெறும் வயிற்றில் எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா? அப்போதுதான் பலன் பன்மடங்கு அதிகம்!

நெல்லிக்காயை சாப்பிடும் முறை

நெல்லிக்காயை அப்படியே வெறும் வயிற்றில் சாப்பிடுவதுதான் நல்லது. அப்போதுதான் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும். உங்களுக்கு ஃபிரஷ் நெல்லிக்காய் கிடைக்கவில்லையென்றால், நெல்லிக்காய் பொடி அல்லது நெல்லிக்காய் சாறு எடுத்துக்கொள்ளலாம். கூடுதல் உட்பொருட்கள் சேர்க்காதவற்றை தேர்ந்தெடுத்து வாங்கிக்கொள்ளவேண்டும்.

அதிகாலையில் சாப்பிட வேண்டும்

காலையில் நெல்லிக்காயை சாப்பிடும்போது, அதன் ஊட்டச்சத்துக்களை முழுமையான உடல் கிரகித்துக்கொள்கிறது. உங்கள் உடல் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்களை நன்றாக எடுத்துக்கொள்கிறது. உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது. உடலின் வளர்சிதையை ஊக்கப்படுத்துகிறது.

ஃபிரஷ் நெல்லிக்காயை எப்படி சாப்பிடுவது?

நெல்லிக்காயை கழுவிவிட்டு, அப்படியே கடித்து சாப்பிடலாம். இது துவர்ப்பாக இருக்கும். இதை சிறிய துண்டுகளாக வெட்டி சாப்பிடலாம். உங்களுக்கு துவர்ப்பு சுவை பிடிக்கவில்லையென்றால் துருவி, தேனில் கலந்து சாப்பிடலாம். இது உங்களுக்கு சுவையை மட்டும் கொடுக்காது. இது தேனின் நற்குணங்களையும் சேர்த்து தரும். தேன் பாக்டீரியாக்களுக்கு எதிராக போராடும் குணம் கொண்டது.

நெல்லிச்சாறு

ஃபிரஷ் நெல்லிக்காயை நறுக்கி, தண்ணீர் கலந்து சாறு பிழிந்து அதை வடித்து, தேன் கலந்து பருகலாம். இந்த சாறை வெறும் வயிற்றில் பருகவேண்டும். இது உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களைத் தரும். உங்களுக்கு இதன் சுவை பிடிக்கவில்லையென்றால், அதிக தண்ணீரை கலந்துகொள்ளலாம். இதில் தேவைப்பட்டால் சிறிது எலுமிச்சை பழத்தின் சாறையும் சேர்த்து பருகலாம். சுவை கொஞ்சம் வித்யாசமாக இருக்கும்.

நெல்லிப்பொடி

நெல்லிப்பொடியைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அல்லது 2 ஸ்பூன் பொடியை கரைத்துக்கொள்ளவேண்டும். இதை வெறும் வயிற்றில் பருகவேண்டும். அந்த தண்ணீர் வெதுவெதுப்பான தண்ணீர் என்றால் மிகவும் நல்லது.

எவ்வளவு சாப்பிடவேண்டும்

நெல்லிக்காய் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒன்றுதான் என்றாலும், அதை அளவாகத்தான் எடுக்கவேண்டும். ஒரு நெல்லிக்காய் அல்லது ஒரு ஸ்பூன் பொடி சாப்பிடவேண்டும். அதிகம் எடுத்துக்கொண்டால் அது செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தும்.

இதை நீங்கள் எடுத்துக்கொள்வதை வழக்கமாக்கிக்கொள்ளவேண்டும். எனவே அன்றாட பயன்பாட்டில் நெல்லிக்காயை பயன்படுத்துங்கள். நெல்லிக்காயுடன் பழங்கள் மற்றும் காய்கறிகள், முழுதானியங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. ஆனால் உங்களுக்கு ஏதேனும் மருத்துவ பிரச்னைகள் இருந்தாலோ அல்லது மாத்திரைகள் உட்கொண்டாலோ நீங்கள் வழக்கமாக நெல்லிக்காய் எடுத்துக்கொள்ளலாமா என்று மருத்துவரிடம் பரிந்துரை பெறுவது நல்லது.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.