Amla Buttermilk : முதலமைச்சர் வீட்டு நெல்லிக்காய் மோர் பானம்; டக்குன்னு செஞ்சு பட்டுன்னு பருகிடலாம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Amla Buttermilk : முதலமைச்சர் வீட்டு நெல்லிக்காய் மோர் பானம்; டக்குன்னு செஞ்சு பட்டுன்னு பருகிடலாம்!

Amla Buttermilk : முதலமைச்சர் வீட்டு நெல்லிக்காய் மோர் பானம்; டக்குன்னு செஞ்சு பட்டுன்னு பருகிடலாம்!

Priyadarshini R HT Tamil
Jul 05, 2024 07:00 AM IST

Amla Buttermilk : முதலமைச்சர் வீட்டு நெல்லிக்காய் மோர் பானத்தை டக்குன்னு செஞ்சு பட்டுன்னு பருகிடலாம். இதேபோல் செய்து சாப்பிட்டு பாருங்கள்.

Amla Buttermilk : முதலமைச்சர் வீட்டு நெல்லிக்காய் மோர் பானம்; டக்குன்னு செஞ்சு பட்டுன்னு பருகிடலாம்!
Amla Buttermilk : முதலமைச்சர் வீட்டு நெல்லிக்காய் மோர் பானம்; டக்குன்னு செஞ்சு பட்டுன்னு பருகிடலாம்!

தயிர் – ஒரு கப்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மல்லித்தழை – சிறிதளவு

பச்சை மிளகாய் – 1

இஞ்சி – கால் இன்ச்

செய்முறை

நெல்லிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவேண்டும்.

அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து விடவேண்டும். அதில் கறிவேப்பிலை, மல்லித்தழை, பச்சை மிளகாய், இஞ்சி, தயிர் என அனைத்தையும் சேர்த்து நன்றாக அடித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

வடிகட்டி போதிய அளவு தண்ணீர் சேர்த்து பருகவேண்டும். சுவையான நெல்லிக்காய் மோர் தயார். இதுபோல் அடிக்கடி செய்து வரும்போது அது உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைத்தரும்.

இந்த நெல்லிக்காய்களை முழுதாக ஒரு டப்பாவில் உப்புத்தண்ணீரில் வைத்து, ஃபிரிட்டிஜில் வைத்துக்கொண்டால், நெல்லிக்காய்களும் நீண்ட நாட்கள் கெடாது. இதில் இருந்து எளிதாக நெல்லிக்காய் மோர் தேவைப்படும்போது செய்து சாப்பிடலாம்.

நெல்லிக்காயில் உள்ள சத்துக்கள் மற்றும் நன்மைகள்

வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்த வயோதிகத்தை தடுக்கும். நெல்லிக்காய் பரவலாக எங்கும் உள்ளது. எனவே அனைவரும் தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவது நல்லது. அதிகளவு கிடைக்கும் காலங்களில் அதை ஃபிரிட்ஜில் இதுபோல் செய்து நீண்ட நாட்கள் வைத்துக்கொண்டு சாப்பிடலாம்.

இதன் துவர்ப்பு சுவையால் இதை அனைவரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். எனவே நெல்லிச்சாறு, நெல்லி தேநீர் என செய்து அசத்தலாம். இதில் லேகியம் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

மற்ற பழங்களைவிட நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது

நரை முடி பிரச்னையை சரிசெய்கிறது.

இதை தினமும் எடுத்துக்கொள்வது செரிமான மண்டலத்தில் செயல்பாட்டை அதிகரிக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது.

உடலின் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது. வாந்தி, பித்த பிரச்னைகள், வறட்சி, அனீமியா ஆகியவற்றை தடுக்கிறது.

இதனுடன் திப்பிலி சேர்த்து சாப்பிடும்போது, பசி மற்றும் செரிமானம் அதிகரிக்கிறது.

ஆஸ்துமா, இருமல், முச்சுக்குழாய் வீக்கம் ஆகியவற்றை தடுக்கிறது. நெல்லிக்காயை நேரடியாக சாப்பிடும்போது துவர்ப்பு சுவையாக இருக்கும். அதறக்காக அதிலிருந்து பல்வேறு உணவுகளும் செய்யப்படுகின்றன.

அல்சரை குணப்படுத்துகிறது.

இத்தனை நன்மைகள் நிறைந்த இந்த நெல்லிக்காயில் மேலும் பல ரெசிபிகளும் செய்யலாம். பழச்சாறு, ஊறுகாய், துவையல், சாதம், லேகியம், ரசம், தேநீர் என பல்வேறு வகையாக நாம் இந்த நெல்லிக்காயை உட்கொள்ளலாம்.

நெல்லிக்கனியை தினமும் எடுப்பவர்களுக்கு நரை, திரை, மூப்பு வருவதில்லையென்றும், அவர்களின் வாழ்நாள் நீட்டிக்கப்படுகிறது என்றும் ஆய்வுகளே உறுதிப்படுத்தியுள்ளன. எனவே உங்கள் உணவில் கட்டாயம் நெல்லிக்காயை சேர்த்துக்கொள்ளுங்கள். 

இது உங்கள் உடலுக்கு இத்தனை நன்மைகளைக் கொடுக்கிறது. அதனால்தான் உடலுக்கு இயற்கை நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்க வேண்டுமெனில், தினம் ஒரு நெல்லிக்காயை கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.