கமகம மணத்துடனும், சூப்பர் சுவையுடனும் அசத்தும் குடல் குழம்பு! எளிமையாகச் செய்வது எப்படி பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கமகம மணத்துடனும், சூப்பர் சுவையுடனும் அசத்தும் குடல் குழம்பு! எளிமையாகச் செய்வது எப்படி பாருங்கள்!

கமகம மணத்துடனும், சூப்பர் சுவையுடனும் அசத்தும் குடல் குழம்பு! எளிமையாகச் செய்வது எப்படி பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Nov 01, 2024 01:47 PM IST

கமகம மணத்துடனும், சூப்பர் சுவையுடனும் அசத்தும் குடல் குழம்பு, எளிமையாகச் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

கமகம மணத்துடனும், சூப்பர் சுவையுடனும் அசத்தும் குடல் குழம்பு! எளிமையாகச் செய்வது எப்படி பாருங்கள்!
கமகம மணத்துடனும், சூப்பர் சுவையுடனும் அசத்தும் குடல் குழம்பு! எளிமையாகச் செய்வது எப்படி பாருங்கள்!

தேவையான பொருட்கள்

குடல் – ஒன்று (கடையில் இருந்து வாங்கி நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும்)

சின்ன வெங்காயம் – 100 கிராம் (பொடியாக நறுக்கியது)

பழுத்த தக்காளி – 3

பச்சை மிளகாய் – 4

பூண்டு – 8 பல்

இஞ்சி – அரை இன்ச்

சோம்பு – ஒரு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

மிளகாய்த் தூள் – 3 ஸ்பூன்

மல்லித்தூள் – 4 ஸ்பூன்

தேங்காய் – அரை மூடி

புளி – சிறிதளவு

எண்ணெய் -2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

பட்டை – 1

கிராம்பு – 2

பிரியாணி இலை – 1

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மல்லித்தழை – சிறிதளவு

செய்முறை

குடலை நன்றகா கழுவி சுத்தம் செய்துகொள்ளவேண்டும். சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும். குக்கரில் வைத்து, குடலைப்போட்டு வதக்கிக்கொள்ளவேண்டும். இதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவேண்டும். குக்கரை மூடி 8 முதல் 10 விசில் விட்டுக்கொள்ளவேண்டும். 

அப்போதுதான் குடல் நன்றாக வேகும். நீங்கள் குக்கரில் வைக்கவில்லையென்றாலும், நன்றாக வேகவைத்துக்கொள்ளவேண்டும். குடல் மட்டும் அரை மணி நேரம் முதல் முக்கால் மணி நேரம் வரை வேகும். வெந்தால்தான் நல்லது. எனவே, நேரம் எடுத்து நன்றாக வேகவைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்து இஞ்சி, பூண்டு, சோம்பு, சீரகம், 4 சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து வெந்துகொண்டிருக்கும் குடலில் சேர்க்கவேண்டும். அடுத்து அதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்றாக கொதிக்கவிடவேண்டும்.

தாளிப்பு கரண்டி அல்லது கடாயில் எண்ணெய் சேர்த்து நன்றாக சூடானவுடன், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளித்து, நறுக்கிய சிறிது வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும்.

அடுத்து கறிவேப்பிலை தூவி கொதித்தவுடன் குழம்பில் சேர்த்துவிடவேண்டும். அடுத்து புளி கரைத்து ஊற்றிக்கொள்ளவேண்டும். அடுத்து தேங்காயை அரைத்து ஊற்றி நன்றாக கொதித்தவுடன் மல்லித்தழை தூவி இறக்கினால் சூப்பர் சுவையான குடல் குழம்பு தயார்.

இதை இட்லி, தோசை, சப்பாத்தி, பூர், சாதம் என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இது நல்ல சுவையாக இருக்கும்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஆரோக்கிய குறிப்புகள், ரெசிபிக்கள் ஆகியவற்றை, தேர்ந்தெடுத்து தினமும் ஹெச். டி. தமிழ் வழங்கி வருகிறது. எனவே இதுபோன்ற தகவல்களைப் பெறுவதற்கு நீங்கள் எங்கள் இணையப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.