Ginger Juice: வெறும் வயிற்றில் இஞ்சி சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!
வெறும் வயிற்றில் இஞ்சி சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள்.

நவீன காலங்களில், உட்கார்ந்த நிலையில் பணிபுரிவது பெரும்பாலான இடங்களில் வழக்கமாகிவிட்டது. அதிகப்படியாக உட்கார்ந்திருப்பதால் தீங்கு விளைவிக்கும் விளைவுகள் ஏற்படுவதில் ஆச்சரியமில்லை.
நமது அன்றாட வழக்கத்தை மதிப்பாய்வு செய்து உணவு மற்றும் உடற்பயிற்சியைச் செய்வது முக்கியம். ஆரோக்கிய சமூகத்தில் ஒப்புதல் பெற்ற காலை உணவு, இஞ்சி சாறு ஆகும். இஞ்சி ரத்த சர்க்கரை கட்டுப்பாடு முதல் எடை இழப்பு வரை பல நன்மைகளை வழங்குகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி சாறு குடிப்பது செரிமானத்தை எளிதாக்க உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் எடை இழப்பிற்கும் உதவுகிறது. அதேபோல், இஞ்சி குமட்டலை சரிசெய்வது, ரத்த சர்க்கரை அளவை சமப்படுத்துவது, மூளைக்கு மிகவும் தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது.
"இஞ்சி, இரைப்பைக் குழாயின் இயக்கத்தை பராமரிக்க உதவுகிறது. செரிமான செயல்முறையை சீராக வைத்திருக்க உதவுகிறது. உணவை வயிற்றில் நீண்ட நேரம் இருக்க விடாது. இஞ்சி உட்கொள்வது நொதித்தல் மற்றும் மலச்சிக்கலை மேலும் குறைக்கும். இதையொட்டி வீக்கம் / குடல் வாயுக்கள் உருவாவதைக் குறைக்க உதவும். மேலும், இஞ்சி நுகர்வு நம் உடலின் உயிரணுக்களின் தேய்மானத்தை பராமரிப்பதில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது" என்று மும்பையின் மீரா சாலையில் உள்ள வோக்ஹார்ட் மருத்துவமனைகளின் மூத்த உணவியல் நிபுணர் ரியா தேசாய் கூறுகிறார்.