Ridge Gourd: பீர்க்கங்காய் உண்பதால் நமது உடலுக்கு இவ்வளவு நன்மைகளா?
பீர்க்கங்காய் மலச்சிக்கலைத் தீர்க்கவும், உடல் எடையைக் குறைக்கவும், ரத்த சர்க்கரையை நிர்வகிக்கவும் உதவும். மேலும் இது குறித்த நன்மைகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.

பீர்க்கங்காய் சிறந்த கோடைகால காய்கறியாகும். பீர்க்கங்காய் சுரைக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்பு, மெக்னீசியம், வைட்டமின் பி 6, பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், தாமிரம் மற்றும் செலினியம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த உணவாகும். பீர்க்கங்காய், அதிக நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்த காய் ஆகும். இது மலச்சிக்கல் பிரச்னைகளை எளிதாக்கும்.
பீர்க்கங்காய் உங்கள் ரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவும். பீர்க்கங்காய், உடலில் இருக்கும் நச்சுக் கழிவுகள், ஆல்கஹால் எச்சங்களை அகற்ற உதவும். உடலில் கொழுப்பு குவிவதைத் தடுக்கவும் உதவும் என்பதால் கல்லீரல் செயல்பாட்டிற்கும் இது அற்புதமானதாகக் கருதப்படுகிறது.
பீர்க்கங்காய் கோடையில் அதிகப்படியான உடல் வெப்பத்தை குறைக்க உதவுகிறது. இது பல நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.
ஊட்டச்சத்து நிபுணர் சாக்ஷி லால்வானி இந்துஸ்தான் டைம்ஸ் டிஜிட்டலுக்கு அளித்த பேட்டியில், "ஆயுர்வேதத்தின்படி, கோடைக்காலம் என்பது வடக்கு சங்கராந்தியின் (உத்தராயணம்) கடைசி பருவமாகும். எனவே, வெப்பம் மற்றும் வறட்சியின் தீவிரம் உச்சத்தில் உள்ளது.