வெண்டைக்காய் புளிக்குழம்பு : வாயில் எச்சில் ஊறவைக்கும் வெண்டைக்காய் புளிக்குழம்பு; ஒரு தட்டு சாதமும் எளிதில் காலியாகும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வெண்டைக்காய் புளிக்குழம்பு : வாயில் எச்சில் ஊறவைக்கும் வெண்டைக்காய் புளிக்குழம்பு; ஒரு தட்டு சாதமும் எளிதில் காலியாகும்!

வெண்டைக்காய் புளிக்குழம்பு : வாயில் எச்சில் ஊறவைக்கும் வெண்டைக்காய் புளிக்குழம்பு; ஒரு தட்டு சாதமும் எளிதில் காலியாகும்!

Priyadarshini R HT Tamil
Updated Mar 28, 2025 11:50 AM IST

வெண்டைக்காய் புளிக்குழம்பு : வெண்டைக்காய் புளிக்குழம்பை நீங்கள் சாப்பிட விரும்பினால், அதை இப்படி செய்து சாப்பிடுங்கள். அதன் சுவையை அதிகரிக்க எப்படி செய்யலாம் என்ற விரிவான ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது.

வெண்டைக்காய் புளிக்குழம்பு : வாயில் எச்சில் ஊறவைக்கும் வெண்டைக்காய் புளிக்குழம்பு; ஒரு தட்டு சாதமும் எளிதில் காலியாகும்!
வெண்டைக்காய் புளிக்குழம்பு : வாயில் எச்சில் ஊறவைக்கும் வெண்டைக்காய் புளிக்குழம்பு; ஒரு தட்டு சாதமும் எளிதில் காலியாகும்!

தேவையான பொருட்கள்

• நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

• கடுகு – கால் ஸ்பூன்

• உளுந்து – கால் ஸ்பூன்

• வர மிளகாய் – 2

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

• சின்ன வெங்காயம் – 10 (தோல் உறித்தது)

• பூண்டு – 8 பற்கள் (தோல் உறித்தது)

• தக்காளி – 1 (அரைத்தது)

• வெண்டைக்காய் – கால் கிலோ

• உப்பு – தேவையான அளவு

• வெல்லம் – ஒரு ஸ்பூன் (பொடித்தது)

தாளிக்க தேவையான பொருட்கள்

• எண்ணெய் – ஒரு ஸ்பூன்

• வரமல்லி – 2 டேபிள் ஸ்பூன்

• வர மிளகாய் – 10

• தேங்காய்த் துருவல் – அரை கப்

செய்முறை

1. கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, அதில் வர மல்லி விதைகளை சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவேண்டும். அடுத்து வர மிளகாயைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவேண்டும். அடுத்து தேங்காய்த் துருவல் சேர்த்து நன்றாக வறுக்கவேண்டும். இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்டாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

2. கடாயில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, உளுந்து, கறிவேப்பிலையை சேர்த்து தாளிக்க வேண்டும். பொன்னிறமானவுடன், சின்ன வெங்காயம், பூண்டு, அரைத்த தக்காளி விழுது என அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அனைத்தையும் நல்ல மையாக வதங்கி வரும்போது, நறுக்கிய வெண்டைக்காய்களை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும்.

3. அடுத்து உப்பு, வெல்லம் மற்றும் தேங்காய் பேஸ்ட் சேர்த்து போதிய அளவு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கொதிக்கவிடவேண்டும்.

4. அடுத்து புளிக்கரைசலை சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிடவேண்டும். எண்ணெய் பிரிந்து வரும்போது, இறக்கவேண்டும். இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.

இதை நீங்கள் ஒருமுறை சாப்பிட்டால் உங்களுக்கு 195 கலோரிகள் கிடைக்கும். 26 கிராம் கார்போஹைட்ரேட்கள், சாச்சுரேடட் கொழுப்பு 1 கிராம், பாலி சாச்சுரேடட் கொழுப்பு 2 கிராம், மோனோ சாச்சுரேடட் கொழுப்பு 5 கிராம், டிரான்ஸ் கொழுப்பு 0.03 கிராம், கொலஸ்ட்ரால் 41 மில்லி கிராம், சோடியம் 37 மில்லி கிராம், பொட்டாசியம் 319 மில்லி கிராம், நார்ச்சத்துக்கள் 3 கிராம், சர்க்கரை 8 கிராம், வைட்டமின் சி 29 மில்லி கிராம், கால்சியம் 40 மில்லி கிராம், இரும்புச்சத்துக்கள் 2 மில்லி கிராம் மற்றும் வைட்டமின் ஏ சத்துக்களும் இதிலிருந்து கிடைக்கும்.

இது மிகவும் சுவையானது. அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் பிடித்தது. ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். எனவே செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.