Aloe Vera Gel : வறண்ட சருமம், முகத்தில் பருவால் ஏற்பட்ட பள்ளங்கள்; இரவில் கற்றாழை ஜெல் தரும் 5 நன்மைகள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Aloe Vera Gel : வறண்ட சருமம், முகத்தில் பருவால் ஏற்பட்ட பள்ளங்கள்; இரவில் கற்றாழை ஜெல் தரும் 5 நன்மைகள்!

Aloe Vera Gel : வறண்ட சருமம், முகத்தில் பருவால் ஏற்பட்ட பள்ளங்கள்; இரவில் கற்றாழை ஜெல் தரும் 5 நன்மைகள்!

Priyadarshini R HT Tamil
Jan 26, 2025 07:00 AM IST

Aloe Vera Gel : உங்கள் சருமத்துக்கு கற்றாழை ஜெல் கொடுக்கும் நன்மைகள் எத்தனை என்று பாருங்கள்.

Aloe Vera Gel : வறண்ட சருமம், முகத்தில் பருவால் ஏற்பட்ட பள்ளங்கள்; இரவில் கற்றாழை ஜெல் தரும் 5 நன்மைகள்!
Aloe Vera Gel : வறண்ட சருமம், முகத்தில் பருவால் ஏற்பட்ட பள்ளங்கள்; இரவில் கற்றாழை ஜெல் தரும் 5 நன்மைகள்!

சருமத்துக்குத் தேவையான நீர்ச்சத்துக்களை வழங்குகிறது

இது இயற்கையான நீர்ச்சத்தை சருமத்துக்குக் கொடுக்கிறது. இதனால் இதில் உள்ள ஈரப்பதத்தை சருமம் கிரகித்துக்கொள்கிறது. இதன் மெல்லிய குணம் அனைத்து சருமத்துக்கும் ஏற்றது. இதை நீங்கள் எண்ணெய் சருமம், வறண்ட சருமம் உள்ளிட்ட அனைத்து சருமம் என அனைத்துக்கும் பயன்படுத்தலாம்.

இதமளிக்கும் குணங்கள்

இதில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள், சரும சிவத்தலைப் போக்குகிறது. சருமத்தில் எரிச்சல், அரிப்பு, சூரியனால் ஏற்படும் அனைத்து பிரச்னைகளுக்கும் இது சிறப்பாக சிகிச்சையளிக்கிறது. சூரிய ஒளியால் சருமம் வறண்டு போவது, சிவப்பது மற்றும் புண்களை ஆற்றுகிறது. எனவே குளுமையூட்டும் ஒரு கற்றாழை ஜெல்லை நீங்கள் சருமத்தின் மீது பூசினால், அது உங்கள் சென்சிட்டிவான மற்றும் வீங்கிய சருமத்துக்கு நிவாரணம் கொடுக்கிறது என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சருமம் பளபளப்பு பெற உதவுகிறது

இதில் ஹையாலுரானிக் அமிலம் அதிகம் உள்ளது. இதனால் கற்றாழை ஜெல், சருமத்தில் கொலாஜென் உற்பத்தியைத் தூண்டுகிறது. இந்த அதிகரிக்கப்பட்ட கொலாஜென் உற்பத்தி சருமத்துக்கு இதமளிக்கிறது. முகப்பருக்களைப் போக்குகிறது. சருமத்தில் நெகிழ்தன்மையை அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

காயங்களை ஆற்றுகிறது

கற்றாழையில் உள்ள பாலி சாச்சரைட்கள், சருமத்தில் உள்ள காயங்கள் மற்றும் மீட்டுருவாக்கத்தை அதிகரிக்கிறது. இது குறிப்பாக முகப்பருக்களின் அளவைக் குறைக்கிறது. சிறிய காயங்களுக்கு இதமளிக்கிறது. எரிச்சலைப்போக்குவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். பாலிசாச்சரைட்கள் சருமம் குணமடையவும், அதன் வளர்ச்சிக்கும் உதவுகிறது. இது எக்சைமா என்ற சரும நோயை குணப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுவதாக 2015ம் ஆண்டு நடந்த ஆய்வுகளில் பயோமெட் ரிசர்ச் இன்டர்நேஷனல் என்ற ஆராய்ச்சி பத்திரிகையில் கட்டுரை வெளியாகியுள்ளது.

முகப்பருக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது

முகப்பருக்கள், ப்ரோபியோனிபாக்டீரியா முகப்பருக்களால் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியாக்களை குறைக்கும் தன்மை கற்றாழை ஜெல்லுக்கு உள்ளது. இதுகுறித்த ஆய்வு மைக்ரோ ஆர்னானிசம் என்ற ஆராய்ச்சி பத்திரிக்கையில் 2024ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. கற்றாழையில் உள்ள ஏஸ்மன்னான்கள், முகப்பருக்கள் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ப்ரோபியோனி பாக்டீரியாக்கள் ஏற்படுத்தும் முகப்பருக்களை எதிர்க்கும் ஆற்றலை அதிகரிக்கிறது. எனவே உங்களுக்கு முகப்பருக்கள் இருந்தால் இதை நீங்கள் பயன்படுத்தி பலன்பெறலாம். எனவே கற்றாழை ஜெல்லை முகத்தில் தினமும் இரவில் தடவி சருமத்துக்கு இயற்கை பளபளப்பைக் கொடுங்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.