தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Aloe Vera Juice : வாரத்தில் 2 நாள் இந்த ஜூஸ்! கோடை காலத்தில் குளிர்ச்சி மட்டுமல்ல எத்தனை நன்மைகள் பாருங்க!

Aloe Vera Juice : வாரத்தில் 2 நாள் இந்த ஜூஸ்! கோடை காலத்தில் குளிர்ச்சி மட்டுமல்ல எத்தனை நன்மைகள் பாருங்க!

Priyadarshini R HT Tamil
Apr 06, 2024 12:00 PM IST

Aloe Vera Juice : கற்றாழையில் உள்ள மருத்துவ குணங்கள் காயத்தைப்போக்கும். சருமத்தை பளபளப்பாக்கும். தழும்புகளை மறையச்செய்யும். அதற்கு கற்றாழையை உட்கொள்வதற்கு பதிலாக சருமத்தில் வைத்து தேய்க்க வேண்டும்.

Aloe Vera Juice : வாரத்தில் 2 நாள் இந்த ஜூஸ்! கோடை காலத்தில் குளிர்ச்சி மட்டுமல்ல எத்தனை நன்மைகள் பாருங்க!
Aloe Vera Juice : வாரத்தில் 2 நாள் இந்த ஜூஸ்! கோடை காலத்தில் குளிர்ச்சி மட்டுமல்ல எத்தனை நன்மைகள் பாருங்க!

ட்ரெண்டிங் செய்திகள்

மல்லித்தழை – சிறிதளவு

இந்துப்பு – கால் ஸ்பூன்

செய்முறை

கற்றாழையை கழுவி சுத்தம் செய்து, அதன் உள்ளே உள்ள ஜெல்லி போன்ற பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதை தண்ணீரில் 5 முறை கழுவிட்டு, அதனுடன் மல்லித்தழை சேர்த்து சிறிய மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதை வடிகட்டி, உப்பு சேர்த்து தினமும் பருகினால், உங்கள் உடல் ஆரோக்கியம், தலைமுடி ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியம் என அனைத்தும் மேம்படும்.

கற்றாழையின் நன்மைகள்

கற்றாழை ஒரு காயகற்ப மூலிகை. கற்றாழை பொடியை முறையாக சாப்பிட்டு வர எப்போதும் இளமையாகவும், உடல் வன்மையோடும் வாழலாம். பொதுவாக கற்றாழை உடல் சூட்டை தணித்து, உடலுக்கு வலிமை தரும்.

கற்றாழைச் சாறு அல்லது கற்றாழைப்பொடியை முறையாக சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு, சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல், நீர்கட்டி, மாதவிடாய் கோளாறுகள், குழந்தைப்பேறு இல்லாமை போன்ற நோய்கள் குணமாகும் வாய்ப்புண்டு.

கற்றாழை சாறெடுத்து வெண்ணெய் (அ) கற்கண்டு, வால் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டால் (30 மிலி) நீர்ச்சுருக்கு (சிறுநீர் குறைந்து மஞ்சள் நிறத்தில் வெளிப்படல்) நீங்கும். உடல் வெப்பம், உடலரிப்பு நீங்கும்.

கற்றாழையின் சோற்றை எடுத்து பலமுறை கழுவி, இதில் சிறிது படிகாரம் சேர்த்து, சிறு துணியில் முடிந்து தொங்கவிட, அதிலிருந்து நீர் வடியும். அந்நீரை கண்களில் விட கண் சிவப்பு, கண் நோய்கள் நீங்கும்.

மருத்துவ குணங்கள் நிறைந்த கற்றாழை அழகுசாதன பொருட்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கற்றாழையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட், ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி ஃபங்கல் உட்பொருட்கள் மனிதர்களை தொற்றுக்களில் இருந்து காக்கிறது.

கற்றாழையில் உள்ள மருத்துவ குணங்கள் காயத்தைப்போக்கும். சருமத்தை பளபளப்பாக்கும். தழும்புகளை மறையச்செய்யும். அதற்கு கற்றாழையை உட்கொள்வதற்கு பதிலாக சருமத்தில் வைத்து தேய்க்க வேண்டும்.

பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. மலச்சிக்கலை குணப்படுத்துகிறது. வயோதிகத்தால் ஏற்படும் சரும சுருக்கம் உள்ளிட்ட பிரச்னைகளை சரிசெய்யும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும். தலைமுடி வளர்ச்சியை ஊக்கப்படுத்தும்.

இதை ஜெல், ஆயின்ட்மென்ட் வடிவங்களிலும் எடுத்துக்கொள்ளலாம். பச்சையாகவும் எடுத்துக்கொள்ளலாம். பானமாகவும் பருகலாம். இதை சுத்தமாக கழுவி சாப்பிடவேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகளை எற்படுத்திவிடும். கல்லீரல் தொடர்பான பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும்.

எனவே அளவாக மட்டும் கற்றாழையை எடுத்துக்கொள்ள வேண்டும். இது மட்டுமல்ல எந்த ஒன்றையும் நாம் அதிகளவில் எடுத்துக்கொள்ளக்கூடாது. அளவாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அது ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கும். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுதான். எனவே அளவாக எடுத்து பயன்பெறுங்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்