Aloe Vera Gel : கற்றாழை ஜெல் முகத்துக்கு நல்லதுதான்! ஆனால் பல்வேறு வகை சருமத்துக்கும் அதை எப்படி பயன்படுத்த வேண்டும்?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Aloe Vera Gel : கற்றாழை ஜெல் முகத்துக்கு நல்லதுதான்! ஆனால் பல்வேறு வகை சருமத்துக்கும் அதை எப்படி பயன்படுத்த வேண்டும்?

Aloe Vera Gel : கற்றாழை ஜெல் முகத்துக்கு நல்லதுதான்! ஆனால் பல்வேறு வகை சருமத்துக்கும் அதை எப்படி பயன்படுத்த வேண்டும்?

Priyadarshini R HT Tamil
Jan 27, 2025 06:00 AM IST

Aloe Vera Gel : பல வகை சருமத்துக்கும் கற்றாழை ஜெல்லை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Aloe Vera Gel : கற்றாழை ஜெல் முகத்துக்கு நல்லதுதான்! ஆனால் பல்வேறு வகை சருமத்துக்கும் அதை எப்படி பயன்படுத்த வேண்டும்?
Aloe Vera Gel : கற்றாழை ஜெல் முகத்துக்கு நல்லதுதான்! ஆனால் பல்வேறு வகை சருமத்துக்கும் அதை எப்படி பயன்படுத்த வேண்டும்?

வழக்கமான சருமம்

முகத்தை முதலில் ஜெல் அல்லது நுரை வரக்கூடிய சோப்பு போட்டு நன்றாகக் கழுவவேண்டும்.

உங்கள் முகம் காய்ந்தவுடன், கொஞ்சமாக கற்றாழை ஜெல் எடுத்து, அதை முகம் முழுவதிலும் சமமாக, சுத்தமான கைகளால் தடவவேண்டும்.

இரவு முழுவதும் விட்டுவிட்டு, உங்கள் சருமத்தில் உள்ள இயற்கையான ஈரப்பதத்தை காக்க உதவும். சுற்றுச்சூழல் ஏற்படுத்தும் சேதத்தைப் போக்கும். இரவில் நீங்கள் ஓய்வெடுக்கும்போது இதைச் செய்கிறது.

வறண்ட சருமம்

உங்கள் முகத்தை நீர்ச்சத்துக் கொடுக்கும் ஃபேஷ் வாஷ் கொண்டு கழுவி சுத்தம் செய்துவிட்டு, பாதாம் மற்றும் ரோஸ் ஹிப் எண்ணெய் சில துளிகள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவேண்டும்.

இதை சருமத்தில் உள்ள வறண்ட இடங்களில் தடவவேண்டும். இரவு முழுவதும் விட்டுவிட்டால் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளும். இந்த கலவை உங்கள் சருமம் இரவு முழுவதும் மிருதுவாகவு இருக்க உதவுகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

எண்ணெய் சருமம்

முகத்தில் கற்றாழை ஜெல்லை தடவுவதற்கு முன்னர் கட்டாயம் முகத்தைக் கழுவவேண்டும். எண்ணெய் சருமத்தை நல்ல ஃபேஷ் வாஷ் கொண்டு கழுவவேண்டும்.

இந்த ஜெல்லில் சில துளிகள் டீ ட்ரீ எண்ணெய் கலந்துகொண்டால், அது பாக்டீரியாக்களுக்கு எதிரான நன்மைகளைக் கொடுக்கும். இது சீபம் உற்பத்தியைக் குறைக்கும். சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள உதவும்.

அனைத்தும் கலந்த சருமம்

சல்ஃபேட் இல்லாத மிருதுவான ஃபேஷ் வாஷ் கொண்டு முகத்தில் உள்ள அழுக்குகளை முதலில் நீக்க வேண்டும். இதில் சருமத்துக்கு சேதமின்றி அதில் உள்ள எண்ணெய்களும் போய்விடும்.

ஒரு பேலன்சிங்கான டோனர் தடவவேண்டும். அது வறட்சி மற்றும் எண்ணெய் பிசுபிசுப்பு இரண்டையும் போக்கும் தன்மை கொண்டது. கொஞ்சம் ஜெல் எடுத்து டீ ஜோன் எனப்படும் (நெற்றி, மூக்கு மற்றும் தாழ்வாய் ஆகிய பகுதிகளில் பூச வேண்டும். இது எண்ணெயைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. இது வறண்ட இடங்களுக்கு நீர்ச்சத்தைக் கொடுக்கிறது.

உங்கள் கன்னங்கள் அதிகம் வறண்டுவிட்டால், ஜெல்லுடன் இரண்டு சொட்டுக்கள் ஜோஜோபா எண்ணெய் கலந்து பூச வேண்டும்.

நீங்கள் உறங்கும்போது அந்த ஜெல் நன்றாக வேலை செய்யும்.

எக்ஸைமா

உங்களுக்கு எக்ஸைமா என்ற சரும வியாதி இருந்தால், அது உள்ள இடங்களில் சிறிது தடவி முதலில் நீங்கள் டெஸ்ட் செய்துகொள்ளுங்கள்.

‘மணமில்லாத, அலர்ஜி கொடுக்காத ஃபேஷ் வாஷ் பயன்படுத்தவேண்டும். சூடான தண்ணீரை தவிர்க்கவேண்டும். இது எக்ஸைமாவைத் அதிகரிக்கும்.

பாதிக்கப்பட்ட இடங்களில் சுத்தமான கற்றாழை ஜெல்லை உபயோகிக்கவேண்டும். குறிப்பாக எரிச்சலான மற்றும் சிவப்பு பேட்ச்கள் உள்ள இடத்தில் வீக்கத்தைக் குறைக்கும்.

நீங்கள் ஜெல்லை சிறிது தேங்காய் எண்ணெண் அல்லது ஷியா பட்டருடன் கலந்துகொள்ளவேண்டும். இதனால் உங்கள் சருமத்தில் நீர்ச்சத்துக்கள் தக்கவைக்கப்படும்.

இரவு முழுவதும் விட உங்கள் சருமத்தில் உள்ள வீக்கத்தைக் குறைக்கும். விரைவில் குணப்படுத்தும்.

பக்கவிளைவுகள்

இது உங்கள் சருமத்துக்கு இதமளிக்கும் ஜெல் என்றாலும், சில நேரங்களில் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும்.

அலர்ஜியைக் கொடுக்கும். சிவத்தல், எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும்.

உங்கள் சருமம் வறண்ட சருமம் என்றால் அதை மேலும் வறண்டுபோகச் செய்யும்.

வேதிப்பொருட்கள் கலப்படம் இருந்தால், அது சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே சருமப் பிரச்னைகள் உள்ளவர்கள் சுத்தமான இயற்கை ஜெல்லை மட்டும் பயன்படுத்துங்கள்.

மணமூட்டிகள் மற்றும் ப்ரிசர்வேட்டிவ்கள் கலக்காத சுத்தமான ஜெல்லை மட்டும் பயன்படுத்துவதை உறுதிப்படுத்துங்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.