தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  All You Need To Know About Interesting Facts About Kissing

Happy Kiss Day 2024: முத்தம் கொடுக்க ஆசையா?.. ஒரு முத்தம் என்னவெல்லாம் செய்யும் தெரியுமா?

Karthikeyan S HT Tamil
Feb 13, 2024 12:33 PM IST

முத்தம் கொடுப்பதால் உடல்நலத்துக்கு பல நன்மைகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அவை என்னென்ன என்று பார்ப்போம்.

முத்த தினம் 2024
முத்த தினம் 2024

ட்ரெண்டிங் செய்திகள்

பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி காதலர் தினம் வரை காதலை வளர்க்கும் விதவிதமான தினங்களாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், குறிப்பாக காதலர் தினத்திற்கு முந்தைய தினமான இன்று (பிப்.13) கொண்டாடப்படும் முத்த தினம் (Kiss day) ஒரு தனிச்சிறப்பினை கொண்டுள்ளது.

அன்பின் வெளிப்பாடாக கருதப்படும் முத்தம், கொடுப்பதிலும் பெறுவதிலும் பல வகைகள் உள்ளன. கன்னங்களில் முத்தமிடுவது பாசத்தைக் குறிக்கிறது. கைகளில் முத்தமிடுதல் மரியாதை கலந்த அன்பை வெளிப்படுத்தும் விதமாக கருதப்படுகிறது. மேலும், முத்தம் கொடுப்பதால் உடல்நலத்துக்கு பல நன்மைகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அவை என்னென்ன என்று பார்ப்போம்.

  • காதலுக்குரியவருக்கு தரும் முத்தத்தில், காதல், அன்பு, ஆசை, அக்கறை, காமம், மகிழ்ச்சி, குதூகலம் ஏன் கண்ணீரின் வெளிப்பாடாகவும் கூட இருக்கலாம்.
  • முத்தம் கொடுப்பதால் உடலில் மகிழ்ச்சி அளிக்கும் ஹார்மோன்களை அதிகரிக்கிறது. மன அழுத்தத்தை குறைக்கவும், பதற்றத்தை குறைக்கவும் முத்தங்கள் உதவுகிறதாம்.
  • ஒரு மனிதன் தனது வாழ்நாளில் முத்தத்துக்காக செலவிடுவது 306 மணி நேரம் என்று முத்தம் குறித்த ஆராய்சி முடிவுகள் கூறுகிறது. ஒரு முத்தத்தில் குறைந்தது 12 கலோரிகள் எரிக்கப்படுகின்றன.
  • முத்தம் முகத்தில் இருக்கும் 34 தசைகளை இயங்கவைத்து, அவற்றை ஆரோக்கியமாக்குகிறது. மேலும், முகப்பொலிவுக்கு வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது.
  • முத்தத்தின் மூலம் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு கிளர்ச்சி கிடைக்கும். ரத்த நாளங்கள் விரிந்து கொடுக்கும், இதயத் துடிப்பு 58 சதவீதம் அதிகரிக்கும்.
  • முத்தம் கொடுக்கும்போது பரிமாறப்படும் உமிழ்நீரில் புரதம் 0.7 மி.கிராம் இருக்கிறது, கொழுப்பு 0.71 மி.கிராம் இருக்கிறது. உப்பு 0.45 மி.கிராம் இருக்கிறது, நீர் 60. மி.கி இருக்கிறது.
  • 10 விநாடி கொடுக்கப்படும் முத்தத்தின் மூலமாக 9 மி.லி உமிழ்நீர் பரிமாற்றம் செய்யப்படுகிறது. தொடர்ந்து ஒரு நிமிடத்துக்கு மேல் முத்தம் கொடுக்கும் போது 26 கலோரிகள் வரை எரிக்கப்படுகின்றன.
  • ஒரு முத்தம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
  • உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்கவும் கலோரிகளையும் எரிக்கவும் முத்தம் உதவுகிறதாம்.
  • முத்தம் கொடுப்பதன் மூலம் கோபம், உடல் பருமன், கொழுப்பு ஆகியவற்றுக்குக் காரணமாகும் கார்ட்டிசால் ஹார்மோன் (Cortisol Hormone) சுரப்பு குறையும். எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக முத்தமிடுகிறோமோ அதற்குச் சமமாக, முதுமையால் நமது முகத்தில் சுருக்கம் விழுவது குறையும் என்றும் சொல்லப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel

டாபிக்ஸ்