வர மிளகாயும், புளியும் மட்டுமே போதும்; டிபஃனுக்கு சூப்பரான சட்னி செய்து விடலாம்!
வர மிளகாய் மற்றும் புளியை வைத்து சட்னி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
வர மிளகாய் – 10
சின்ன வெங்காயம் – 20
பூண்டு – 10 பல்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவையான அளவு
வெல்லம் – ஒரு ஸ்பூன் (பொடித்தது)
நல்லெண்ணெய் – ஒரு ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்
செய்முறை
வர மிளகாயையும், புளியையும் சூடான தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். அதை வழித்துவிட்டு, அடுத்து ஊறிய புளி மற்றும் மிளகாய் இரண்டையும் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவேண்டும். அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு கலவையை சேர்த்து நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும்.
அடுத்து அரைத்து வைத்துள்ள வரமிளகாய், புளி பேஸ்டையும் அரைத்துக்கொள்ளவேண்டும். எண்ணெய் பிரிந்து வரும்போது தேவையான அளவு உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து இறக்கினால், சூப்பர் சுவையான வரமிளகாய் மற்றும் புளி சட்னி தயார்.
இதை இட்லி, தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். வீட்டில் தக்காளி, பெரிய வெங்காயம், தேங்காய் இல்லாவிட்டால் என்ன சட்னி அரைப்பது என்று குழம்பி தவிக்கவேண்டாம். இந்த சட்னியை அரைத்து சாப்பிட சுவை அள்ளும்.
இதை உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் நீங்கள் மீண்டும், மீண்டும் வேண்டும் என்று கேட்பீர்கள்.
மேலும் ஒரு ரெசிபி தெரிந்துகொள்ளுங்கள்
சேப்பங்கிழங்கு வறுவல் செய்வது எப்படி என்று பாருங்கள்
தேவையான பொருட்கள்
சேப்பங்கிழங்கு – அரை கிலோ
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
மிளகாய் தூள் – 3 ஸ்பூன்
மல்லித்தூள் – 2 ஸ்பூன்
சீரகத் தூள் – 2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் கப்
கடலை மாவு – 2 ஸ்பூன்
அரிசி மாவு – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
இடித்த பூண்டு (விரும்பினால் சேர்த்துக்கொள்ளலாம்)
செய்முறை -
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் உப்பு சேர்க்கவேண்டும். பின்னர் சேப்பங்கிழங்கு சேர்த்து 20 நிமிடம் வேகவிடவேண்டும்.
பின்னர் நன்றாக ஆறியவுடன், தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.
பாத்திரத்தில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத் தூள், பெருங்காயத்தூள், கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ளவேண்டும்.
பின்பு சேப்பங்கிழங்கில் மசாலாவை சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கறிவேப்பிலை சேர்த்து பின் நறுக்கிய சேப்பங்கிழங்கை சேர்த்து வறுக்கவேண்டும்.
பின்னர் இடித்த பூண்டு சேர்த்து கலந்துவிட்டு 5 நிமிடம் வறுக்கவேண்டும்.
அட்டகாசமான சேப்பங்கிழங்கு வறுவல் தயார்.
இதை அனைத்து வெரைட்டி சாதத்துடனும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். தயிர் சாதத்துடன் இது அட்டகாசமாக இருக்கும்.
சேப்பங்கிழங்கு, இந்தியாவில் அதிகம் கிடைக்கும் ஒரு கிழங்குதான். இதை இதுபோல் ரோஸ்டாகி சாப்பிடுவது மிகுந்த சுவையைத்தரும். ஆரோக்கியமும், சுவையும் நிறைந்த சைட் டிஷ்.
இந்த வறுவலுக்கு, முதலில் சேப்பங்கிழங்கை நன்றாக வேகவைக்க வேணடும். பின்னர், மசாலா சேர்த்து நன்றாக ஊறவைக்கவேண்டும். அடுத்து அதை பதமாக எண்ணெயில் வறுத்து எடுக்கவேண்டும். வேக வைப்பது அதிகமாகிவிட்டால், கிழங்கு குழைந்துவிடும். எனவே பதமாக வேகவைக்க வேண்டும். கட்டாயம் செய்து, சாப்பிட்டு மகிழுங்கள்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்