Ajmir Diamond Tea : தேநீர் பிரியரா நீங்கள்? இப்டி ஒரு பக்குவத்தில் அஜ்மீர் டைமண்ட் டீ செஞ்சு குடிச்சு பாருங்க!
Ajmir Diamond Tea : இங்கு வீடுகளில் செய்வதற்கும், கடைகளில் செய்வதற்கும் அளவு மற்றும் பக்குவம் கொடுக்கப்பட்டுள்ளது.
பின்வரும் பக்குவங்களை மட்டும் கடைபிடியுங்கள் இந்த அஜ்மீர் டைமண்ட் டீயின் சுவையில் மெயமறந்து போவீர்கள்.
இந்த டீக்கு பவுடர் பால், டோன் மில்க் பயன்படுத்தக் கூடாது.
பசும்பால் என்றால் நீர் சேர்க்கக்கூடாது.
பாக்கெட் பால் என்றால் ஒரு டம்ளர் பாலுக்கு முக்கால் டம்ளர் தண்ணீர் என்பது சரியான அளவு.
தம் டீப்போல டீத்தூளை பாலில்போட்டு வேக வைக்கும் முறை தான் சிறந்தது. தனியாக டிகாஷன் எடுத்து செய்வது தவறு. இங்கு வீடுகளில் செய்வதற்கும், கடைகளில் செய்வதற்கும் அளவு மற்றும் பக்குவம் கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான மசாலா பொருட்கள்
பால் – தேவையான அளவு
ஜாதிக்காய் – சிறிதளவு
ஏலக்காய் - சிறிதளவு
செய்முறை
ஜாதிக்காயை ஒரு துருவியால் துருவியோ அல்லது சீவல் போல சீவியோ எடுத்துக்கொள்ள வேண்டும். பொடியாக இருந்தாலும் சரி. இதேபோல ஏலக்காயை இடித்தோ அல்லது பொடியாகவோ எடுத்துக்கொள்ள வேண்டும். மசாலா டீக்கு தேவையான பொருட்கள் இவைதான்.
இவை வழக்கமாக இஞ்சி அல்லது மசாலா டீயுடன் சேர்ப்பதுதான் என்றாலும், இவற்றை டீயில் எந்த இடத்தில் சேர்ப்பது என்பதில் தான் இந்த டீயின் பக்குவமே அடங்கியுள்ளது.
மேலே கூறியிருக்கும் பக்குவத்தின்படி பாலை பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சவேண்டும். தேவையான அளவு நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும், டீத்தூளை போட்டு அதை கொதிக்க விடவேண்டும்.
எக்காரணம் கொண்டும் டீத்தூளோடு மசாலா பொருட்கள் சேர்த்து கொதிக்க விடவே கூடாது. இதுதான் பெரும்பாலானவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு. இதனால் நீங்கள் எதிர்பார்த்த சுவை டீக்கு வருவதில்லை.
டீத்தூள் பாலில் நன்றாக வெந்து டீயின் நிறம் வந்து கொதிக்கத் திரளும். இப்போது மசாலாப் பொருட்களை சேர்க்கவேண்டும். 5 பேர் குடிக்கும் டீ என்றால் 2 சிட்டிகை ஜாதிக்காய் பவுடரும், ஒரு சிட்டிகை ஏலக்காய் பவுடரும் சேர்ப்பது மிகச் சரியான அளவாகும்.
இப்போது டீ நன்றாக கொதித்து பொங்கியதும் இறக்கி மீண்டும் ஒருமுறை அடுப்பில் வைத்து பொங்க விட்டு இறக்கிவிடவேண்டும்- 2 முறை கொதிக்க வைப்பது டீயின் ருசியை அதிகரிக்கச்செய்யும். இந்த முறையில் டீ போட்டு வடிகட்டி அளவான சர்க்கரை சேர்க்கவேண்டும்.
மிக மிகக் குறைவான சர்க்கரையோடு இந்த டீ சாப்பிடுவது ருசியாக இருக்காது. கட்டாயம் இந்த முறையில் டீயை ருசித்து பாருங்கள்.
கடைக்கு போடும் டீ என்றால், பசும்பால் எனில் ஒரு டம்ளர் பாலுக்கு கால் டம்ளர் தண்ணீரும், பாக்கெட் பால் என்றால் அரை லிட்டம் பாலுக்கு அரைலிட்டர் தண்ணீரும், 3 சிட்டிகை ஜாதிக்காய் பவுடரும் 2 சிட்டிகை ஏலக்காயும் போடவேண்டும். மற்றபடி இதே செய்முறைதாள்.
கூடுதலாக 10 கிராம்பு மற்றும் 2 நட்சத்திர சோம்பை பொடி செய்து அதில், ஒரு சிட்டிகை இதோடு சேர்க்க வேண்டும். பால் தண்ணீராக இருந்தால் டீ ருசிக்காது என்பதை கடைகளுக்கு செய்பவர்கள் நினைவில் கொள்ளவேண்டும். மொத்தமாக டீ போட்டு டீ கேனில் வைத்து விற்பது சிறந்தது.
ஒரு டீக்கு இத்தனை பக்குவங்களா என்று ஆச்சர்யமாக உள்ளதா? கட்டாயம் இந்த பக்குவத்தில் இந்த டீயை செய்து பருகிப்பாருங்கள். தினமும் இந்த டீயைத்தவிர வேறு எந்த டீயையும் விரும்ப மாட்டடீர்கள்.
நன்றி – வெங்கடேஷ் ஆறுமுகம், ஷ்யாம் ப்ரேம்.
டாபிக்ஸ்