Air Pollution : எச்சரிக்கை மக்களே! காற்று மாசில் அதிகம் இருந்தால் பக்கவாதம் எற்படும் ஆபத்து!
Air Pollution : எச்சரிக்கை மக்களே! காற்று மாசில் அதிகம் இருந்தால் பக்கவாதம் எற்படும் ஆபத்து!
குளிர்காலத்தில் காற்றின் மாசு அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து இரட்டிப்பாக வாய்ப்புள்ளது. இந்த குளிர்காலத்தில்தான் இஸ்கிமிக் பக்கவாதம் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக வெப்பநிலை குறையும்போது, நடது உடலில் ரத்த உறைந்துவிடும். எனவே மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்கள் குறுகி, அதன் அழுத்தம் அதிகரித்து பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கு வழி வகுக்கிறது.
வாகன புகை, வீட்டை சூடாக்க எரிக்கும் புகை, மின்சாரம் தயாரிப்பு நிறுவனங்களின் புகை, வேதிக்கொருட்கள் தயாரிப்பு ஆகியவை காற்று மாசு ஏற்பட காரணமாகின்றன.
போக்குவரத்து வாகனங்கள் காற்று மாசு ஏற்பட முக்கிய காரணமாகின்றன. வாகனங்கள் கார்பன் மோனாக்ஸைட் மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடை வெளியேற்றுகின்றன. இவையனைத்தும் தீங்கு விளைவிக்கக்கூடியவை. இவை சூரியஒளியில் சேர்ந்து வெளியேற்றும் நச்சு, செல்களை நாசமாக்கக்கூடியவை.
தீயில் இருந்து வரும் புகை, வனத்தீ போன்றவையும் காற்று மாசு ஏற்பட காரணமாகின்றன. இவற்றில் நீண்ட நேரம் இருப்பது நமக்கு சுவாச பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இதய நோய்களையும் உண்டாக்குகிறது. இவை பக்கவாதத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
காற்று மாசு பக்கவாதம் ஏற்படும் வழிகள்
காற்றின் தரம் நன்றாக இல்லாவிட்டால், அது பெருந்தமனி தடிப்பை ஏற்படுத்துகிறது அல்லது தமனியின் சுவர்களில் அது கொழுப்பை அதிகரிக்கிறது. இந்த நிலை இஸ்கிமிக் பக்கவாதம் ஏற்படுவதற்கு காரணமானது என்று அமெரிக்க பக்கவாத சங்கம் கூறுகிறது.
காற்று மாசு ரத்த அழுத்ததை உருவாக்குகிறது. உயர் ரத்த அழுத்தம் ரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது. அது, ரத்தநாளங்கள் சிறியதாகவும், அதிலிருந்து ரத்தம் வழியும் ஆபத்தையும் ஏற்படுத்துகிறது.
ரத்த அழுத்தம் தமனிகளில் ரத்த உறைதலை ஏற்படுத்துகிறது. மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டத்தை தடை செய்கிறது. இவையனைத்தும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது.
நைட்ரோஜென் டை ஆக்ஸைட், கார்பன் மோனாக்ஸைட் போன்ற வித்யாசமான மாசுபடுத்திகள், காற்று மாசில் உள்ளது. மோட்டார் வாகனங்கள், நிறுவனங்களில் இருந்து வெளியேறும் புகை, அணு நிலையங்கள், தீ, புகை ஆகியவற்றால் காற்றில் சிறு துகள்களாக மாசு கலக்கிறது.
இந்த நச்சு சூழலுக்கு ஆளாவது, ரத்த நாளங்களில் சேதப்படுத்தி, இளைஞர்கள் மற்றும் பெரியவர்களுக்கு அழற்சியை ஏற்படுத்துகிறது. ரத்த நாளங்களின் சேதம் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது.
சுகாதாரமற்ற காற்று உள்ள சூழலில் வசித்தாலும், மூளையில் ரத்த அடைப்பு ஏற்பட்டு, பக்கவாதம் வரும் வாய்ப்பை அதிகரிக்கிறது. மூளை தமனிகளை கடினமாக்கி, பக்கவாதம் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது.
காற்றில் கலந்து வரும் அணுக்கதிர் வீச்சு தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தி, மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தடுத்து, பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது.
நுரையீரல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஆஸ்துமா நோயாளிகளுக்கும், புகை பிடிப்பவர்களுக்கும், ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறையும்போது பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது.
எனவே அதிகம் வீட்டிற்குள்ளே இருப்பது அறிவுறுத்தப்படுகிறது. வெளியில் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. எனவே வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிவது அவசியம். காலையில் நடக்க வேண்டும். சரிவிகித உணவு உட்கொள்ள வேண்டும். தேவையான அளவு தண்ணீர் குடித்து உடலின் நீர்ச்சத்தை காக்க வேண்டும்.
மது, புகை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். வழக்கமான உடற்பயிற்சி, உங்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து, ரத்த அழுத்ததையும் பராமரிக்க வேண்டும். அவற்றை கண்காணித்துக்கொண்டே இருப்பதும் பக்கவாதம் ஏற்படாத வழிகள்.
டாபிக்ஸ்