Air Pollution : காற்றின் தரம் மற்றும் உயிரிழப்பு இரண்டுக்கும் உள்ள தொடர்பை விளக்கும் ஆய்வு – அதிர்ச்சி என்ன தெரியுமா?
Air Pollution : காற்றின் தரம் மற்றும் உயிரிழப்பு இரண்டுக்கும் உள்ள தொடர்பை விளக்கும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் உள்ள அதிர்ச்சி தகவல் என்ன தெரியுமா?

ஓரளவு சுத்தமான காற்று இருக்கும் நகரங்களில் கூட PM 2.5 நுண்துகள்கள் சிறிதளவு (10 மைக்ரோகிராம்/கனமீட்டர்) சில நாட்கள் மட்டும் அதிகமானால் கூட முன்கூட்டிய இறப்பு விகிதம் அதிகமாகிறது என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஓரளவு சுத்தமான சுவாசக் காற்று உள்ள நகரங்களில் திடீரென காற்றின் தரம் குறையும்போது PM 2.5 நுண்துகள்களின் அளவு அதிகமானாலும், மிக மோசமான காற்றின் தரம் உள்ள நகரங்களில் உள்ள இறப்பு விகிதத்தை விட அதிகம் இறப்புகள் நிகழ்வது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இரு வேறுபட்ட நகரங்களில் (ஒரு நகரத்தில் காற்றின் தரம் மோசம்; இன்னொரு நகரத்தில் காற்றின் தரம் சுமார்) ஒரே அளவு காற்றின் தரம் மோசமானால், சுமாராக காற்றின் தரம் உள்ள பெங்களூருவில், முன்கூட்டிய இறப்பு விகிதம் (PM 2.5 நுண்துகள்கள் காரணமாக), மோசமான காற்றின் தரம் உள்ள டெல்லியைக் காட்டிலும் அதிகம் எனும் அதிர்ச்சித் தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.