தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Air Pollution Can Cause Hair Fall And 8 Tips To Protect Your Locks From Toxic Air

Hair Fall: சொட்டை விழாமல் தப்பிக்க மருத்துவர் கூறும் வழிகள் என்ன?!

Marimuthu M HT Tamil
Jan 19, 2024 02:17 PM IST

நச்சுக்காற்றில் இருந்து முடியைப் பாதுகாக்க உதவும் சில டிப்ஸ் குறித்துக் காண்போம்.

Hair Fall: சொட்டை விழாமல் தப்பிக்க மருத்துவர் கூறும் வழிகள் என்ன?
Hair Fall: சொட்டை விழாமல் தப்பிக்க மருத்துவர் கூறும் வழிகள் என்ன? (Freepik)

ட்ரெண்டிங் செய்திகள்

முடி உதிர்தல் சுற்றுச்சூழல் காரணிகளாலும் நிகழ்கிறது. முடி வறட்சி, உச்சந்தலையில் இருக்கும் செதில்கள் ஆகியவை முடி உதிர்வதற்குக் காரணங்கள் ஆகின்றன. 

முடி உதிர்வதைத் தடுப்பதற்கான டிப்ஸ்களைப் பற்றிகூறுகிறார், தோல் மருத்துவர் ரிங்கி கபூர். 

தலைமுடியை மூடுங்கள்: நச்சுக் காற்றில் வெளியே செல்லும்போது சுவாசப் பிரச்னைகளைத் தடுக்க நீங்கள் முகமூடி அணிவதைப் போலவே, உங்கள் தலைமுடிக்கு சிறிது பாதுகாப்பை வழங்குவதும் முக்கியம். மாசுபட்ட பகுதிகளில் வெளியில் செல்லும்போது, உங்கள் தலைமுடியை மாசுபடுத்திகளிலிருந்து பாதுகாக்க தொப்பி அணிந்து கொள்ளுங்கள்.

சல்பேட் இல்லாத ஷாம்பூவைப் பயன்படுத்துங்கள்: உங்கள் தலைமுடியை சுத்தப்படுத்த சல்பேட் இல்லாத ஷாம்பூவைத் தேர்வுசெய்து பயன்படுத்துங்கள். முடிக்குத்தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குங்கள். 

அடிக்கடி தலைக்கு குளிக்காதீர்கள்: உங்கள் உச்சந்தலை மற்றும் முடியை சுத்தமாகவும், அழுக்கு இல்லாமலும் வைத்திருப்பது முக்கியம். தலைக்கு முக்கியம் தான். ஆனால், தினம்தோறும் தலைக்கு குளிக்காமல் வாரத்திற்கு இரண்டு முறை மட்டும் தலைக்கு குளியுங்கள். தினமும் தலைக்கு குளித்தால், அது தலையில் வறட்சிக்கு வழிவகுக்கும்.

கண்டிஷனர் மற்றும் எண்ணெய்: உங்கள் தலைமுடியில் ஈரப்பதத்தை பராமரிக்க நல்ல தரமான கண்டிஷனரைப் பயன்படுத்துங்கள். கூடுதலாக, உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிக்க தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துங்கள்.

ஹீட் கருவிகள்: முடியைக் காய வைக்க உதவும் ஹேர் ட்ரையர்கள் மற்றும் முடியை சமப்படுத்தும் ஸ்ட்ரெயிட்னர்கள் போன்ற வெப்பக் கருவிகளின் பயன்பாட்டைக் குறைக்கவும். ஏனெனில், அவை உங்கள் தலைமுடியை மேலும் சேதப்படுத்தும்.

நீர்: உங்கள் தலைமுடி மினுமினுப்பாக இருக்க நீர்ச்சத்து முக்கியம். நீர் மற்றும் நீர்ச்சத்து தரும் பானங்களான இளநீர், நுங்கு போன்றவற்றை அடிக்கடி எடுத்துக்கொள்ளவும். 

சீரான உணவு: வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவு,ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

காற்று சுத்திகரிப்பான்: மாசுபாட்டின் அளவைக் குறைக்க உங்கள் வீட்டில் காற்று சுத்திகரிப்பாளர்களைப் பயன்படுத்தலாம். இது உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும் பயனளிக்கும்.

இந்த உதவிக்குறிப்புகள் ஆரோக்கியமான மற்றும் அழகான கூந்தலைப் பராமரிக்க உதவும் என்பது உறுதி. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9  

WhatsApp channel

டாபிக்ஸ்