‘ஏஜிங் லைக் எ ஃபைன் ஒயின்’ 60 வயதிலும் 16 போன்ற தோற்றம் வேண்டுமா? – மருத்துவர் கூறுவது என்ன?
என்றும் இளமையுடன் வாழ சித்த மருத்துவர் கூறும் வழி என்ன?

‘ஏஜிங் லைக் எ ஃபைன் ஒயின்’ 60 வயதிலும் 16 போன்ற தோற்றம் வேண்டுமா? – மருத்துவர் கூறுவது என்ன?
வயது அதிகமாகும்போது உங்களுக்கு வயோதிக தோற்றம் ஏற்படும். இதனால் மனிதர்கள், விலங்குகள் மற்றும் அனைத்து உயிரினங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். இது உடல், மன மற்றும் சமூக மாற்றங்களைக் கொண்டுவரும்.
உடலுக்கு ஏற்படும் வயோதிகம்
உடலில் செல்கள் இழப்பதால் இந்த வயோதிக தோற்றம் ஏற்படுகிறது. இதனால் திசுக்கள் மற்றும் உடல் உறுப்புகள் இயங்குவது குறைந்துவிடுகிறது. உடல் சிலவற்றை தானாகவே சரிசெய்யும் உடலின் திறனை குறைக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது.
சமூக வயோதிகம்
சமூக வயோதிகம் என்பது, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சமூக பழக்கவழக்கங்கள் மற்றும் நடத்தைகளில் மாற்றங்கள் ஏற்படுவது எப்படி என்பதும், அதேபோல், சமூகத்தில் ஒவ்வொருவரின் பங்களிப்பு எவ்வாறு மாறுகிறது என்பதிலும் மாற்றம் ஏற்படுவது சமூக வயோதிகம் எனப்படுகிறது.
