நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த.. பார்வையை மேம்படுத்த.. இரத்த சோகையை போக்க இனி உணவில் பீர்க்கங்காய் சேர்த்துக்கோங்க!
பீர்க்கங்காயில் இயற்கையான முறையில் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது பசியைக் குறைக்க உதவுகிறது.

பீர்க்கங்காயை உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம். இரும்புச்சத்து நிறைந்திருப்பதால், இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் இந்தகாய் சாப்பிடுமாறு மருத்துவர்கள் பொதுவாக அறிவுறுத்துகிறார்கள்.
பார்வையை மேம்படுத்துகிறது
முதுமை நெருங்க நெருங்க கண்கள் மங்குவது பொதுவானது. ஆனால் பீர்க்கங்காயில் உள்ள வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் பார்வையை மேம்படுத்த உதவுகிறது. பீட்டா கரோட்டின் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டுள்ளது. இவை பார்வை இரத்த நாளங்களுடன் தொடர்புடைய நச்சுகளை அகற்ற உதவுகின்றன.
எடைக் குறைப்புக்கு உதவுகிறது
குறைந்த கலோரிகள், குறைந்த அளவு கொழுப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால், எடை இழப்புக்கு இது ஒரு சிறந்த வழி. அவற்றில் உள்ள புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்பு உள்ளடக்கம் விரைவாக செரிமானத்திற்கு உதவுகிறது. பீர்க்கங்காய் உட்கொள்வதன் மூலமும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம்.