Adai Dosa : புரதம் நிறைந்த அடை தோசை செய்யலமா.. காரசாரமா மொறு மொறுன்னு டேஸ்ட்டான அடை.. ஊட்டச்சத்து நிறைந்ததும் கூட!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Adai Dosa : புரதம் நிறைந்த அடை தோசை செய்யலமா.. காரசாரமா மொறு மொறுன்னு டேஸ்ட்டான அடை.. ஊட்டச்சத்து நிறைந்ததும் கூட!

Adai Dosa : புரதம் நிறைந்த அடை தோசை செய்யலமா.. காரசாரமா மொறு மொறுன்னு டேஸ்ட்டான அடை.. ஊட்டச்சத்து நிறைந்ததும் கூட!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 23, 2025 06:30 AM IST

Adai Dosa : அடை எல்லா வயதினருக்கும் பொருத்தமான பிடித்தமான உணவு என்று சொல்லலாம். எந்தவொரு காம்பினேஷனும் இல்லாமல் வயிற்றில் இறக்கி கொண்டே இருக்கும் ஒரே உணவு அடைதான். அதேபோல் சட்னி, சீனி, நாட்டு சர்க்கரை, அவியல் என்று ஒரு நீண்ட பட்டியலே சைடு டிஷ் ஆக பொருந்தும் என்றால் அடை மட்டும் தான்.

Adai Dosa : புரதம் நிறைந்த அடை தோசை செய்யலமா.. காரசாரமா மொறு மொறுன்னு டேஸ்ட்டான அடை.. ஊட்டச்சத்து நிறைந்ததும் கூட
Adai Dosa : புரதம் நிறைந்த அடை தோசை செய்யலமா.. காரசாரமா மொறு மொறுன்னு டேஸ்ட்டான அடை.. ஊட்டச்சத்து நிறைந்ததும் கூட

அடை தோசை செய்யத் தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1 கப்

புழுங்கல் அரிசி - 1 கப்

துவரம் பருப்பு - 1 கப்

கடலைப்பருப்பு - 1 கப்

பாசிப் பருப்பு - 1 கப்

உளுத்தம் பருப்பு - 1 கப்

மிளகாய் வத்தல் - 10

உப்பு -தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

1 கப் நறுக்கிய வெங்காயம்

பெருங்காயத்தூள் - 1 ஸ்பூன்

வெங்காயம் - 3

தேங்காய் - அரை முடி

அடை தோசை செய்யும் முறை:

ஒரு பாத்திரத்தில் 1 கப் பச்சரிசி, 1 கப் துவரம் பருப்பு, 1 கப் கடலைப் பருப்பு,1 கப் பாசிப்பருப்பு, 1கப் உளுத்தம்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து, நன்றாக நீரில் கழுவவும்.

அதன்பின், நாம் எடுத்து வைத்திருந்த சிவப்பு மிளகாய், சீரகம் போன்ற மசாலா பொருட்களையும் அதில் சேர்த்து நீர் சேர்த்து கழுவி எடுத்துக்கொள்ளவும். பின்னர் பருப்பு மூழ்கும் வகையில் நீர் சேர்த்து 2 முதல் 3 மணி நேரம் ஊற வைக்கவும். அதன்பின், நீரை வடிகட்டி விட்டு கிரைண்டரில் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். இப்போது 1 ஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்க்க கலக்க வேண்டும். அடுத்து சிறிதுநேரம் அப்படியே வைத்துவிட்டு, நன்கு கலக்கிக்கொண்டு, அதில், நறுக்கிய கறிவேப்பிலையை சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்க வேண்டும். பின்னர் பொடி பொடியாக நறுக்கிய தேங்காயை மாவில் கலந்து விட வேண்டும். தேங்காயை துருவலாகவும் சேர்க்கலாம்.

பின், அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து சூடாக்க வேண்டும். பின்னர் கலக்கி வைத்த அடை மாவை தோசையாக ஊற்ற வேண்டும். பின், ஒரு பக்கம் வந்ததும் மெதுவாகப் புரட்ட வேண்டும். அடை வேகும் போதும் சுற்றிலும் எண்ணெய் ஊற்றவும். விருப்பம் உள்ளவர்கள் நெய் ஊற்றியும் சாப்பிடலாம். வெந்து முடிந்ததும் அடை தோசையை எடுத்து பரிமாறவும்.

தேவை என்றால் முருங்கை இலையை உருவி வதக்கி அடை மேலே தூவி விட்டு சாப்பிட இரத்த விருத்தி அடையும்.

இதை எந்த சைட் டிஸ்ஸுடனும் சேர்த்து சாப்பிடலாம். குறிப்பாக தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் ருசி அருமையாக இருக்கும். இதற்கு அவியலும் ருசியாக இருக்கும்.

அடை மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து தோசை போல லேசாக சுடுவது சிலருக்கு பிடிக்கும். சிலருக்கு தண்ணீர் அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் திக்கான மாவை எடுத்து தட்டை போல் சுடுவது பிடிக்கும். நல்லெண்ணெய் ஊற்றி நல்லா மொறுமொறுப்பாக ரோஸ்ட் மாதிரி கட்டியாக அடை சுட்டு வீட்டில் எல்லோருக்கும் கொடுத்து பாருங்கள். அன்று உங்களுக்கு பாராட்டு மழையில் நனைந்து போவீர்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.