ஏரியல் யோகா - வீடியோ பதிவிட்ட நடிகை!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ஏரியல் யோகா - வீடியோ பதிவிட்ட நடிகை!

ஏரியல் யோகா - வீடியோ பதிவிட்ட நடிகை!

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 21, 2022 10:25 PM IST

ஜிம்மில் ஏரியல் யோகா பயிற்சி செய்யும் வீடியோவை நடிகை ரூபினா திலாய்க் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

<p>நடிகை ரூபினா திலாய்க்</p>
<p>நடிகை ரூபினா திலாய்க்</p>

இந்நிலையில், இன்று ( மார்ச் 21) வொர்க்அவுட் உணர்வை அதிகரிக்க உதவும் ஒரு ஊக்கமளிக்கும் குறிப்புடன், ஏரியல் யோகா வடிவத்தில் ஒரு வீடியோவை, நடிகை ரூபினா திலாய்க் வெளியிட்டார். இன்ஸ்டாகிராமில் வீடியோவைப் பகிர்ந்துள்ள ரூபினா, "ஒழுக்கத்தின் வலியை விட வருத்தத்தின் வலி பெரியது" என எழுதியிருந்தார்.

ரூபினாவின் உடற்பயிற்சி வீடியோ, ஜிம்மில் அவர் செய்வது ஏரியல் யோகா அமர்வுகளின் தொகுப்பாகும். அவர் பல்வேறு தலைகீழ் யோகாசனங்களை சேனலில் முயற்சிப்பதையும், அவற்றை முழுமையுடன் செய்வதையும் காணலாம். இந்தி பிக் பாஸ் 14 சீசனின் வெற்றியாளரான இவர், தனது மார்பு மற்றும் முதுகைத் திறக்கவும், மைய தசைகளை வலுப்படுத்தவும் பலவிதமான யோகா அசைவுகளைச் செய்து நம்மை ஆர்வத்திற்குள்ளாக்குகிறார்.

நடிகை ரூபினா செய்வது போல் உடனே முயற்சிக்க வேண்டாம், இதற்கு அடிப்படையிலிருந்து கற்று பழக வேண்டும். மேலும் சரியான பயிற்சியின் மூலமே இப்படி ஒரு சரியான யோகாவை செய்ய முடியும்.

ஏரியல் யோகாவின் பலன்கள்:

முதுகு வலியால் அவதிப்படுபவர்களுக்கு ஏரியல் யோகா மிகவும் சிறந்த ஒன்றாகும். ஏனெனில் இது முதுகு தண்டுவடத்தை சீராகி வலியைப் போக்க உதவுகிறது. மேலும் இது கட்டுப்படுத்தப்பட்ட சுவாசத்தை ஊக்குவிக்கிறது, உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது, மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது, கலோரிகளை எரிக்கிறது மற்றும் முக்கியமாக உடலின் வலிமையை அதிகரிக்கிறது.

இந்த ஏரியல் யோகாசனம் உடலில் நச்சுத்தன்மை ஏற்படுத்தும் சில அறிகுறிகளை நீக்குகிறது. மேலும், சருமத்திற்கு இயற்கையான பளபளப்பு மற்றும் ஊட்டமளிக்கும் முடி நிறைந்த கால்களை அளிக்கிறது. நமது உடலைக் கட்டுடன் வைத்துக்கொள்ள, இந்த ஏரியல் யோகாசனம் மிகவும் உதவுகிறது.

முன்னதாக, ஜிம்மில் யோகா செய்யும் இரண்டு படங்களை ரூபினா பகிர்ந்திருந்தார். அதில் அவர், ஏரியல் ஸ்ட்ராடில் ஸ்பிலிட் மற்றும் தலைகீழ் பட்டாம்பூச்சி ஆசனத்தின் மாறுபாடுகளைச் செய்தார், தான் மீண்டும் வருவேன் என்று கூறியது போல் தனது உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டு அதை செய்து காட்டினார்.

ஏரியல் யோகாவில் முயற்சி செய்ய ரூபினா திலெய்க் உங்களைத் தூண்டினாரா?. அதேசமயம் பெண்கள் இதுபோல் உடற்பயிற்சி மேற்கொள்வது பல நன்மைகளைத் தரும். முக்கியமாக இதுபோன்ற உடற்பயிற்சிகள் அடிப்படையில் இருந்து பயில வேண்டும். நேரடியாக இதனை செய்ய முயற்சிக்க வேண்டாம்.

Whats_app_banner

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.