Acidity Problems : அசிடிட்டியால் கொடுக்கும் தொல்லை! எதனால் வருகிறது தெரியுமா? இதைப்படிங்க மொதல்ல!
Acidity Problems : அசிடிட்டியால் கொடுக்கும் தொல்லைகள் எதனால் வருகிறது என்று தெரியுமா? தெரிந்தால், அவற்றையெல்லாம் செய்வதற்கு நீங்கள் முயற்சி செய்ய மாட்டீர்கள்.

இப்போதெல்லாம் நெஞ்செரிச்சல், வயிறு எரிச்சல் என அதிக எண்ணிக்கையிலான நபர்கள் அவதிப்படுகிறார்கள். அதற்கு காரணம் உங்களுக்கு ஏற்படும் செரிமான பிரச்னைகள்தான். அடிக்கடி நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம் ஏற்படுவதற்கு நாம் பின்பற்றும் சில முறையற்ற வாழ்க்கை முறையே காரணம். அவை என்னவென்று இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
அசிடிட்டி பிரச்னை இப்போதெல்லாம் பொதுவான ஒன்று. நீங்கள் காரமான அல்லது உப்பு நிறைந்த உணவை சாப்பிடும்போது, திடீரென்று நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. சில நேரங்களில், உணவுக்குப் பின்னர், உடனடியாக வயிறு எரியும் மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.
வயிறு உப்புசமும் ஏற்படலாம். இரைப்பை சுரப்பிகள் வயிற்று அமிலத்தை அதிகமாக உற்பத்தி செய்வதால் அசிடோசிஸ் ஏற்படுகிறது" என்று டாக்டர் லவ்னீத் பத்ரா தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார். அமிலத்தால் நெஞ்செரிச்சல் பிரச்னை வருகிறது என்றால், அது உங்களுக்குள் இருக்கும் இந்த கெட்ட பழக்கங்களால்தான்.