AC Usage Tips: இதை மட்டும் செய்யாதீர்கள்! கோடையில் ஏசி விபத்தை தடுக்க சில எளிய வழிகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ac Usage Tips: இதை மட்டும் செய்யாதீர்கள்! கோடையில் ஏசி விபத்தை தடுக்க சில எளிய வழிகள்

AC Usage Tips: இதை மட்டும் செய்யாதீர்கள்! கோடையில் ஏசி விபத்தை தடுக்க சில எளிய வழிகள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Apr 10, 2024 04:59 PM IST

கோடை காலத்தின் வெப்பம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருவதால் ஏசியின் பயன்பாடு இன்றியமையாததாக உள்ளது. இந்த நேரத்தில் ஏசியை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி என்பதையும். ஏசியால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் வழிகளையும் பார்க்கலாம்

ஏசி விபத்துகளை தடுப்பதற்கான வழிமுறைகள்
ஏசி விபத்துகளை தடுப்பதற்கான வழிமுறைகள்

எனவே நாம் இருக்கும் இடத்தையும் குளிர்ச்சியான சூழலுக்கு மாற்ற ஏர் கூலர், ஏர் கண்டிஷ்னர் (ஏசி) போன்ற எலெக்ட்ரிக் சாதனங்களை பயன்படுத்துகிறோம். இதன் மூலம் நாம் வசிக்கும் அறை, படுக்கையறை போன்றவற்றை குளிர்ச்சியான சூழ்நிலைக்கு மாற்றி கொள்ளலாம். இதனால் நிம்மதியான தூக்கத்தை பெறுவதுடன், உடலையும் வெப்பத்தின் தாக்கத்தால் பாதிப்பு ஏற்படாமல் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளலாம்.

அதேசமயம் இந்த சாதனங்களை பயன்படுத்தும்போது சில தற்காப்பு விஷயங்கள், நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், இவற்றால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கலாம்.

ஏசி இயக்குவதில் கவனம் தேவை

இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன் ஏசியை ஆன் செய்வது பலருக்கு வழக்கமான பழக்கமாக இருந்து வருகிறது. இதன் பின்னர் குளிர்ச்சியின் தாக்கம் அதிகரிக்க, அதனால் ஏற்படும் செளகரிய உணர்வால் அசந்து தூங்கியும் விடுவதண்டு. இந்த நேரத்தில் ஏசி தொடர்ந்து இயங்குகிறதா, அதன் அளவை குறைக்க வேண்டுமா? நீங்கள் இருக்கும் அறை நன்கு குளிர்ந்த பின்னர் ஏசியை அணைக்க வேண்டுமா? என்பதை பற்றியெல்லாம் சிந்திப்பதில்லை.

ஏசி நல்ல நிலையில் இயங்கினால் எவ்வித பிரச்னையும் கிடையாது. ஆனால் அதன் இயக்கத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது ஏசியில் இருக்கும் பாதிப்புகள் குறித்து அறிந்திராமல் அதை இயக்கினாலோ பிரச்னை ஏற்படலாம். ஏசி இயக்கத்தில் சிக்கல் இருந்தால் தூக்கத்தின்போதே கூட இறப்பு ஏற்படலாம்.

ஏசியை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

பொதுவாக ஏசியை வீட்டில் பொருத்திய பிறகு அவை இயல்பான நிலையில் இருக்கிறதா என்பதை பொரும்பாலும் பலரும் கவனிக்காமல் போகிறார்கள். அவை பழுதானால் மட்டுமே என்ன பிரச்னை என்பதை கவனிக்கிறோம். முதலில் வீட்டில் இருக்கும் அறைக்கு ஏற்ப ஏசியை வாங்கி பொருத்துவதை உறுதி செய்ய வேண்டும். 1, 1.5, 2 டன் என பல்வேற விகிதத்தில் கிடைக்கும் ஏசிக்களை உங்கள் அறைக்கு ஏற்ப சரியானதை தேர்வு செய்ய வேண்டும்.

150 சதுர அடி அறைகளுக்கு 1.5 டன் ஏசி சரியானதாக இருக்கும். அதே பெரிய ஹால் என்றால் 3 டன் வரை ஏசி பொருத்தப்படலாம். ஏசிக்கான உதிரிப்பாகங்களை குறைந்த விலையில் வாங்கக்கூடாது. அதேபோல் ப்யூஸ் வயர், டிரிப்பர் போன்றவற்றை ஏசிக்கு ஏற்ப தரமானதாக பொருத்த வேண்டும். டிரிப்பர் 20 ஆம்ஸ் கொண்டதாக இருக்க வேண்டும். இதன்மூலம் மின்சாரத்தில் கோளாறு ஏற்பட்டாலும் டிரிப்பர் தானாக ஆஃப் ஆகி ஏசியை பாதிப்பு இல்லாமல் காப்பாற்றும். ஸ்டெப்லைசர்களும் தரமான நிறுவனஙகளில் இருந்து வாங்க வேண்டும்.

ஏசியின் வெப்பநிலை எப்போதும் 23 டிகிரிக்கு கீழ் வைக்க கூடாது. அதற்கு குறைவாக வெப்பநிலையை தேர்வு செய்தால் ஏசியின் செயல்பாடு அதிகரிக்கும். இதனால் ஏசியின் கம்பரசர், காயில், குளிரூட்டிக்கு செல்லும் வயர் என எல்லா பகுதியும் விரைவில் சூடாகிவிடும். இதன் காரணமாக தீப்பிடிக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது. ஏசியின் வெப்பநிலையை எக்காரணம் கொண்டும் 16 டிகிரி வரை கொண்டு செல்லக்கூடாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.