ABC Ready to Drink Malt : இந்த ஒரு பொடி போதும்! சரும நிறம் 5 மடங்கு அதிகரிக்கும்! வீட்டிலே எளிதாக செய்யலாம்!
ABC Ready to Drink Malt : இந்த ஒரு பொடி போதும்! சரும நிறம் 5 மடங்கு அதிகரிக்கும்! வீட்டிலே எளிதாக செய்யலாம்!
சரும நிறத்தை 5 மடங்கு அதிகரிக்கும் ABC ஜூஸ், அதை எளிமையாக பொடியாக செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
ஆப்பிள் – கால் கிலோ
கேரட் – கால் கிலோ
பீட்ரூட் – கால் கிலோ
பாதாம் – 100 கிராம்
பிஸ்தா – 100 கிராம்
ஏலக்காய் – 10
மக்கானா – 50 கிராம்
செய்முறை
பீட்ரூட் தோலை நீக்கி ஃப்ரூட் ட்ரையரில் வைத்து காய வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
பீட்ரூட் மற்றும் கேரட் இரண்டையும் துருவி, ஒரு துணியில் சேர்த்து சாறை கொஞ்சம் கைகளால் பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
எஞ்சிய கேரட் மற்றும் பீட்ரூட் விழுதை 2 நாட்கள் காய வைத்து விடவேண்டும்.
மக்கானாவை வறுத்து பொடித்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
கேரட் மற்றும் பீட்ரூட் சாறை அடுப்பில் வைத்து நன்றாக கிளறவேண்டும். அது கெட்டியானவுடன் அதில் பொடித்த மக்கானா பொடியை சேர்த்து கிளறவேண்டும்.
காய்ந்துள்ள கேரட் மற்றும் பீட்ரூட் இரண்டையும் கடாயில் சேர்த்து சிறிது வறுத்துக்கொள்ள வேண்டும்.
இரண்டு நாட்கள் காய்ந்த கேரட், பீட்ரூட் மற்றும் ஆப்பிள் மூன்றையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக்கொள்ள வேண்டும்.
பாதாம் மற்றும் இரண்டையும் ட்ரையாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் இறக்கப்போகும் முன் ஏலக்காய் பொடி சேர்த்து வறுத்து எடுத்து ஆறவைத்துக்கொள்ள வேண்டும்.
இதனுடன் பொடித்து எடுத்துக்கொண்டு பீட்ரூட், கேரட், ஆப்பிள் பொடி மற்றும் மக்கானாவுடன் தயாரித்து வைத்துள்ள பொடி என அனைத்தையும் சேர்த்து சிறிய மிக்ஸி ஜாரில் மீண்டும் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதை சலித்து எடுத்தால் ஏபிசி மால்ட் தயார்.
இதை சூடான பாலில், நாட்டுச்சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டால் சுவை அள்ளும்.
ஏபிசி ஜூஸ் அல்லது மால்டின் நன்மைகள்
இதில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது சரும பளபளப்பை அதிகரிக்கிறது. இது சிறந்த கழிவுநீக்க பானம்.
தினமும் ஒரு டம்ளர் ஏபிசி சாறு குடிப்பது உங்கள் சருமத்திற்கு விரைவில் வயோதிகம் ஏற்படுவதில் இருந்தும், சோர்ந்து போவதில் இருந்தும் காக்கிறது.
கூந்தல் வளர்ச்சிக்கும் உதவுகிறது. முடி உதிர்வை குறைத்து, அடர்த்தியை அதிகரிக்கிறது.
இதை தினமும் பருகுவது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது. குளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியால் தடுத்து ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. ஆப்பிளில் உள்ள நீர்ச்சத்து சரும வறட்சியை தடுக்கிறது.
உடல் முழுவதும் ஒரே சரும நிறத்தை பராமரிக்க உதவுகிறது.
பீட்ரூட் சிறந்த கழிவு நீக்கி, சருமத்தில் உள்ள கழிவை நீக்குகிறது. எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது. இது முகப்பருக்களை எதிர்த்து போராடுகிறது.
சரும நெகிழ்திறனுக்கு கொலஜென் உற்பத்தி மிகவும் அவசியம். ஆப்பிள் மற்றும் கேரட்டில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இது கொலஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது. சருமம் தொய்வடைவதை தடுக்கிறது.
கழிவு நீக்க பானம். சருமத்தின் உள்ளே உள்ள நச்சுக்களை போக்குகிறது.
சரும பளபளப்புக்கு உதவுகிறது.
கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் சூரிய ஒளியில் இருந்து சருமத்துக்கு பாதுகாப்பை அளிக்கிறது.
இதில் உள்ள அழற்சிக்கு எதிரான உட்பொருட்கள், சிவந்த தன்மை மற்றும் சருமத்தில் எரிச்சலை குறைக்கிறது.
டாபிக்ஸ்