ஆம் பாக் : மத்திய இந்தியாவின் ஸ்பெஷல் ஆம் பாக்! மாம்பழ சீசனில் செய்யவேண்டியது! இதோ ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ஆம் பாக் : மத்திய இந்தியாவின் ஸ்பெஷல் ஆம் பாக்! மாம்பழ சீசனில் செய்யவேண்டியது! இதோ ரெசிபி!

ஆம் பாக் : மத்திய இந்தியாவின் ஸ்பெஷல் ஆம் பாக்! மாம்பழ சீசனில் செய்யவேண்டியது! இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Updated May 25, 2025 10:40 AM IST

ஆம் பாக் : மாம்பழ பர்ஃபி அல்லது ஆம் பாக் அல்லது மாம்பழ பாக் செய்வது எப்படி என்று தெரியுமா? இது மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் மஹாராஷ்ட்ராவின் உணவாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவருக்கும் பிடிக்கும் ஒன்றாகும். இதைச் செய்வது எப்படி என்று பாருங்கள்.

ஆம் பாக் : மத்திய இந்தியாவின் ஸ்பெஷல் ஆம் பாக்! மாம்பழ சீசனில் செய்யவேண்டியது! இதோ ரெசிபி!
ஆம் பாக் : மத்திய இந்தியாவின் ஸ்பெஷல் ஆம் பாக்! மாம்பழ சீசனில் செய்யவேண்டியது! இதோ ரெசிபி!

தேவையான பொருட்கள்

• மாம்பழம் – 6 (அதன் பல்ப்பை மட்டும் ஏடுத்துக்கொள்ளவேண்டும்)

• கோவா- அரை கிலோ

• சர்க்கரை – கால் கிலோ

• நெய் – கால் கப்

• ஏலக்காய்ப் பொடி – அரை ஸ்பூன்

• ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை (மஞ்சள் நிறம், தேவைப்பட்டால் மட்டும் சேர்த்துக்கொள்ளலாம்)

• பிஸ்தா – கால் கப் (பொடியாக நறுக்கியது, அலங்கரிக்க)

செய்முறை

1. கோவாவை கடாயில் சேர்த்து நன்றாக வறுக்கவேண்டும். அடுப்பை குறைந்த தியில் வைத்து வறுக்கவேண்டும். இதை தொடர்ந்து கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.

2. அது உருகி நெய் வரும்போது, அரைத்து வைத்துள்ள மாம்பழத்தின் கூழை அதில் சேர்க்கவேண்டும். நன்றாக கலந்துவிடவேண்டும்.

3. இப்போது மஞ்சள் நிற ஃபுட் கலர் மற்றும் ஏலக்காய்ப் பொடிகளை தூவவேண்டும். அதை நன்றாக கலந்துவிடவேண்டும்.

4. மற்றொரு அடுப்பில் பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் கலந்து பாகு தயாரித்துக்கொள்ளவேண்டும். பாகு ஒரு கம்பி பதம் இருக்கவேண்டும். சர்க்கரை கரைந்து கெட்டியாகிவரும்போது, அதில் ஒரு சொட்டு எடுத்து இரு விரல்களுக்கு இடையில் வைத்து, விரல்களை பிரித்து பார்த்தால் ஒரு கம்பிபோல் வரவேண்டும். அதுதான் ஒரு கம்பி பதம். அது வந்தவுடன், அடுப்பை அணைத்துவிடவேண்டும்.

5. இப்போது இந்த பதமான பாகை, மாம்பழம் மற்றும் கோவா கலவையில் சேர்த்து கிளறவேண்டும்.

6. ஒரு ட்ரே அல்லது தட்டில் நெய்யை தடவி வைத்துவிடவேண்டும்.

7. மாம்பழம், கோவா, சர்க்கரை கலவை கெட்டியாகி, திரண்டு வரும்போது நன்றாக கிளறிவிட்டு, நெய் தடவியுள்ள தட்டு அல்லது ட்ரேயில் சேர்த்து பரப்பிவிட்டு, பொடித்து வைத்த பிஸ்தாக்களை மேலே தூவவேண்டும். அதை நன்றாக ஆறவிடவேண்டும்.

8. ஆறியவுடன், அதை சிறு துண்டுகளாக்கி எடுத்தால் சூப்பர் சுவையான மாம்பழ பர்ஃபி அல்லது ஆம் பாக் தயார்.

இதை ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது. வெளியில்தான வைக்கவேண்டும். இது ஒரு சூப்பர் சுவையான இனிப்பு ரெசிபியாகும். இந்த ஆம் பாக் இனிப்பு, புளிப்பு கலந்த சுவையில் அசத்தலாக இருக்கும். இதை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். இது அத்தனை சுவையை அள்ளித்தரும்.