50 வயதை நெருங்கும் பெண்ணா? அந்த வயதில் ஷில்பா ஷெட்டியின் ஆரோக்கிய ரகசியம் இதுதான்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  50 வயதை நெருங்கும் பெண்ணா? அந்த வயதில் ஷில்பா ஷெட்டியின் ஆரோக்கிய ரகசியம் இதுதான்!

50 வயதை நெருங்கும் பெண்ணா? அந்த வயதில் ஷில்பா ஷெட்டியின் ஆரோக்கிய ரகசியம் இதுதான்!

Priyadarshini R HT Tamil
Dec 30, 2024 11:35 AM IST

50 வயதை நெருங்கும் பெண்களுக்கு ஷில்பா ஷெட்டி கூறும் அறிவுரை என்ன?

50 வயதை நெருங்கும் பெண்ணா? அந்த வயதில் ஷில்பா ஷெட்டியின் ஆரோக்கிய ரகசியம் இதுதான்!
50 வயதை நெருங்கும் பெண்ணா? அந்த வயதில் ஷில்பா ஷெட்டியின் ஆரோக்கிய ரகசியம் இதுதான்!

பொதுவாகவே நடிகைகள் தங்கள் உடலை கட்டுகோப்பாக வைத்துக்கொள்ளவார்கள். அதற்காக அவர்கள் உடற்பயிற்சிகள் மற்றும் சரிவிகித உணவை உட்கொள்வார்கள். ஆனால் அதற்கு செலவு அதிகம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஷில்பா ஷெட்டியின் உணவுப்பட்டியல் எவர் வேண்டுமானாலும் எளிதில் பின்பற்றக் கூடிய எளிய உணவு பட்டியலாகத்தான் உள்ளது. ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். எனவே அவரது உணவைப் பார்த்து அதில் உங்களுக்கு ஏற்றதை எளிய முறையில் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

எளிய காலை உணவு

‘எனது நாள் கற்றாழைசாறில் துவங்கும். இது உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு நல்லது. சருமத்துக்கும் சிறந்தது. அடுத்து கஞ்சியும், தேநீரும் பருகுவேன். நான் முடிந்த அளவுக்கு வெள்ளைச் சர்க்கரையைத் தவிர்த்து, பிரவுன் சுகரைத்தான் பயன்படுத்துவேன். வெள்ளை உணவுகள் அனைத்தையும், பிரவுனாக மாற்றிவிடவேண்டும் என்பதுதான் எனது வழி.

பிரவுன் பிரட், பிரவுன் ரைஸ், பிரவுன் சுகர் என அது இருக்கவேண்டும். வேகவைத்த உணவுகளை நான் எடுத்துக்கொள்ளவே மாட்டேன். வழக்கமான எண்ணெயில் சமைத்த உணவுகளை சாப்பிடுவேன். காய்கறிகளில் இருந்து பெறப்பட்ட எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயில் சமைத்த உணவுகளாக அது இருக்கும்’ இவ்வாறு 2008ம் ஆண்டு ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

மதியம் மற்றும் இரவு உணவுக்கு என்ன?

இவரின் அன்றாட உணவு அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சரிவிகித உணவாகும். அதில் எளிமையான உணவுகள் அதிகம் இடம் பெறுகின்றன. மதிய உணவுக்கு, பருப்பு சாதம், அதுவும் பிரவுன் அரிசியை சாப்பிடுகிறார். இல்லாவிட்டால் சப்பாத்தியை எடுத்துக்கொள்கிறார்.

சிக்கன் கறி மற்றும் காய்கறிகள் சாப்பிடுகிறார். ‘எனக்கு மாலை நேரத்தில் பசித்தால், ஒரு பிரவுன் பிரட் டோஸ்ட், 2 முட்டைகள் மற்றும் தேநீர் பருகுவேன். இரவு உணவை 7 மணிக்கு முன்னர் உண்பேன். அதில் சாலட், சூப், சிக்கன் உணவு இருக்கும். இதுதான் எனது எளிய உணவுப்பட்டியல். இதை பின்பற்றுவதும் எளிது’ என்று அவர் கூறுகிறார்.

யோகா

அவரின் கட்டுக்கோப்பான உடல் அமைப்புக்குக காரணமாக அவர் யோகாவைக் குறிப்பிடுகிறார். அது மட்டுமின்றி உடல் எடைக்காக சில பயிற்சிகளை அவர் மேற்கொள்வதாகக் கூறுகிறார். யோகாவையும் அதையும் மாற்றி மாற்றி செய்வதாக தெரிவிக்கிறார்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள் ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.