வியாழக்கிழமையில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு சூட்ட ஏற்ற பெயர்; வாழ்வில் ஒளி ஏற்றும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வியாழக்கிழமையில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு சூட்ட ஏற்ற பெயர்; வாழ்வில் ஒளி ஏற்றும்!

வியாழக்கிழமையில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு சூட்ட ஏற்ற பெயர்; வாழ்வில் ஒளி ஏற்றும்!

Priyadarshini R HT Tamil
Dec 29, 2024 12:54 PM IST

வியாழக்கிழமையில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு சூட்ட ஏற்ற பெயர்களை தெரிந்துகொள்ளுங்கள்.

வியாழக்கிழமையில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு சூட்ட ஏற்ற பெயர்; வாழ்வில் ஒளி ஏற்றும்!
வியாழக்கிழமையில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு சூட்ட ஏற்ற பெயர்; வாழ்வில் ஒளி ஏற்றும்!

விஹான்

விஹான் என்றால் விடியல் மற்றும் புதிய துவக்கம் என்று பொருள். இது புதிய துவக்கத்தைக் குறிக்கிறது. வியாழக்கிழமையில் பிறந்த உங்கள் சிறிய ஆண் குழந்தைக்கு ஏற்ற பெயராகும்.

அரின்

அரின் என்றால் அமைதியான மற்றும் பலமான என்று பொருள். இது சிறிய மற்றும் அழகான பெயராகும். இது அமைதியைத்தரும் டிரண்டியான பெராகும்.

ராயன்

ராயன் என்றால் சொர்க்கத்தின் கதவு என்று பொருள். இது அரபியில் இந்த அர்த்தம் கொண்டது. சமஸ்கிருதத்தில் பகட்டான வாழ்க்கை வாழும் நபர் என்பதைக்குறிக்கும். இது தனித்தன்மையான மற்றும் ஸ்டைலான பெயர்.

ஆருஷ்

ஆருஷ் என்றால், சூரியனின் முதல் கதிர் என்று பொருள். இது இதமான மற்றும் ஒளி என்பதைக் குறிக்கிறது. வியாழக்கிழமைகளில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு ஏற்ற பெயராகும்.

கியான்

கியான் என்றால் கடவுளின் கருணை என்று பொருள். இது மார்டனான பெயர். அதே நேரத்தில் அர்த்தமுள்ள பெயராகும். இது தெய்வீகத்தன்மையுடன் தொடர்புடையது.

ரேயான்

ரேயான் என்றால் புகழ்பெற்ற மற்றும் ராஜபதவி என்று பொருள். இது எளிமையான, நேர்த்தியான பெயராகும். இது உங்கள் குழந்தைக்கு சிறப்பான அடையாளத்தைக் கொடுக்கும். இது உங்கள் குழந்தைக்கு ஏற்ற பெயராகும்.

டார்ஷ்

டார்ஷ் என்றால் பார்ப்பது அல்லது பார்த்தல் பொருள். உங்கள் வாழ்வில் தெளிவையும், தூய்மையையும் கொண்டுவரும் குழந்தைக்கு ஏற்ற பெயர். இந்த பெயரும் தனித்தன்மையான பெயராகும்.

நிவான்

நிவான் என்றால் புனிதமான, புனிதர் ஆகிய அர்த்தங்களைக் கொடுக்கும் பெயராகும். இந்தப்பெயர் மார்டனான பெயர் மற்றும் ஆன்மீக அடையாளங்கள் நிறைந்த பெயராகும்.

இஷான்

இஷான் என்றால் சூரியன் மற்றும் செல்வத்தின் கடவுள் என்று பொருள். இதற்கு பிரகாசமான மற்றும் புகழ்பெற்ற என்ற அர்த்தமும் உண்டு. உங்கள் குழந்தைக்கு ஏற்ற சிறப்பான தேர்வாக இந்தப்பெயர் இருக்கும். இது பலம் மற்றும் செல்வத்தைக் குறிக்கிறது.

அவ்யான்

அவ்யான் என்றால், சரியான மற்றும் முழுமையான என்று பொருள். இந்தப்பெயர் நேர்மறை எண்ணம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றைக் குறிக்கும்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள் ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.