சிம்பிளான கத்தரிக்காய் மசாலா; அனைவருக்கும் பிடிக்கும் சுவையில் இருக்கும்! இதோ ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சிம்பிளான கத்தரிக்காய் மசாலா; அனைவருக்கும் பிடிக்கும் சுவையில் இருக்கும்! இதோ ரெசிபி!

சிம்பிளான கத்தரிக்காய் மசாலா; அனைவருக்கும் பிடிக்கும் சுவையில் இருக்கும்! இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Dec 30, 2024 04:49 PM IST

சிம்பிளான கத்தரிக்காய் மசாலா செய்வது எப்படி?

சிம்பிளான கத்தரிக்காய் மசாலா; அனைவருக்கும் பிடிக்கும் சுவையில் இருக்கும்! இதோ ரெசிபி!
சிம்பிளான கத்தரிக்காய் மசாலா; அனைவருக்கும் பிடிக்கும் சுவையில் இருக்கும்! இதோ ரெசிபி!

கத்தரிக்காய் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும் வாய்ப்பு உள்ளவர்களும் கத்தரிக்காயை உணவில் அடிக்கடி எடுத்துக்கொள்ளக்கூடாது. மற்றபடி அனைவரும் வாரத்தில் ஒருமுறை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய காய்தான் கத்தரிக்காய்.

கத்தரிக்காய் மசாலா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

பிஞ்சு கத்தரிக்காய் – கால் கிலோ

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

பட்டை – ஒரு துண்டு

பிரியாணி இலை – 1

சோம்பு – ஒரு ஸ்பூன்

உளுந்து – ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மிளகாய்த் தூள் – அரை ஸ்பூன்

மல்லித் தூள் – ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

கத்தரிக்காய்களை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவேண்டும். அதை தண்ணீரில் போட்டுவிடவேண்டும். அதை வெளியே வைத்தால் கத்தரிக்காயில் நிறம் மாறிவிடும். எனவே கத்தரிக்காயை எப்போது நறுக்கினாலும், அதை தண்ணீரில் போட்டு வைக்கவேண்டும்.

கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், அதில் பட்டை, பிரியாணி இலை, சோம்பு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளவேண்டும். வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும். தக்காளியை சேர்த்து நன்றாக மசித்துக்கொள்ளவேண்டும்.

அடுத்து கத்தரிக்காயை சேர்த்து வதக்கவேண்டும். மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறவேண்டும. கத்தரிக்காயில் மசாலா நன்றாக இறங்கும் வரை வதக்கி இறக்கினால் சூப்பர் சுவையான கத்தரிக்காய் மசாலா தயார். இதை தயிர் சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.

இதை சாம்பார், ரசம், வெரைட்டி சாதம் என அனைத்துக்கும் தொட்டுக்கொள்ள ஏற்றது. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்கள் ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் ருசிப்பீர்கள். கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்ப சாப்பிடுவார்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள் ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.