எத்தனை மணிக்குள் தூங்க சென்றால் இதய நோய் ஆபத்து குறையும் தெரியுமா? புதிய ஆய்வு கூறும் உண்மை என்ன?
ஒரு நாளைக்கு குறைந்தது ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும் என பெரும்பாலானோர்க்கு தெரியும். ஆனால் சரியான நேரத்திற்கு தூங்க சென்றால் இதய நோயின் ஆபத்து குறைய வாய்ப்புள்ளது என ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தூக்கம் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும் . எனவே, பெரும்பாலான மக்கள் குறைந்தது எட்டு மணிநேர தூக்கத்தைப் பெறுவதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக சரியான தூக்கம் ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்ற கருத்து பரவி வருகிறது. மருத்துவர்களும் சரியான தூக்கம் வேண்டும் எனத் தெரிவிக்கின்றனர். நமது வேலை நேரத்திற்கு ஏற்ப தோராயமாக 8 மணி நேரம் கட்டாயமாக தூங்க வேண்டும் என்பதே தற்போது உள்ள வாதமாகும். ஆனால் நம்மில் சிலர் இந்த சரியான தூக்கத்தை கடைபிடிக்க முடியாத சூழ்நிலையில் இருந்து வருகின்றனர். இது அவர்களது ஆரோக்கியத்தில் பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் சரியான நேரத்திற்கு தூங்க செல்வதும் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வு
இது தொடர்பாக ஐரோப்பிய இதய இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு, நீங்கள் படுக்கைக்குச் செல்லும் நேரம் தூக்கத்தின் நீளத்தைப் போலவே முக்கியமானது என்று கூறுகிறது. மேலும் இதய ஆரோக்கியத்தில் கொழுப்பு, இரத்த அழுத்தம், உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி ஆகியவை வகிக்கும் பங்கைப் போலவே தூக்கமும் படுக்கை நேரமும் முக்கியமானவை எனத் தெரிவித்துள்ளது. தூக்கத்திற்கு 'கார்டன் ஹவர்' என்ற ஒரு நேரம் இருப்பதாக இந்த ஆய்வுகள் காட்டுகின்றன, இது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.