குழந்தையை வளர்க்கும் உரை மருந்து! பிரசவித்த தாய்மார்களுக்கு லேகியம் எதற்கு? – சித்த மருத்துவர் விளக்கம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  குழந்தையை வளர்க்கும் உரை மருந்து! பிரசவித்த தாய்மார்களுக்கு லேகியம் எதற்கு? – சித்த மருத்துவர் விளக்கம்!

குழந்தையை வளர்க்கும் உரை மருந்து! பிரசவித்த தாய்மார்களுக்கு லேகியம் எதற்கு? – சித்த மருத்துவர் விளக்கம்!

Priyadarshini R HT Tamil
Dec 13, 2024 06:00 AM IST

பிரசவித்த பின்னர் தாய்-சேய் நலன் குறித்து திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் ஹெச்டி தமிழுக்கு கொடுத்த பேட்டியின் விவரம்.

குழந்தையை வளர்க்கும் உரை மருந்து! பிரசவித்த தாய்மார்களுக்கு லேகியம் எதற்கு? – சித்த மருத்துவர் விளக்கம்!
குழந்தையை வளர்க்கும் உரை மருந்து! பிரசவித்த தாய்மார்களுக்கு லேகியம் எதற்கு? – சித்த மருத்துவர் விளக்கம்!

உரை மருந்து தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்

சுக்கு

அதிமதுரம்

அக்ரஹாரம்

வசம்பு

சாதிக்காய்

மாசிக்காய்

கடுக்காய்

பூண்டு

பெருங்காயம்

திப்பிலி

வேப்பம் பிசின்

துளசி

சீந்தில்

வேப்பிலை கொழுந்து

இந்த பொருட்கள் அனைத்தையும் சமஅளவு எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து தயாரிக்கப்படுவதுதான், குழந்தைகளின் உயிரையும் காத்து வளர்த்து ஆரோக்கியம் தருகிறது.

எப்படி கொடுக்கவேண்டும்?

குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் இருந்து இதை தாய்ப்பால் அல்லது தேனில் உரைத்து கலந்து காலை ஒருவேளை அல்லது காலை, மாலை இருவேளையும் வழங்கவேண்டும். இதை தமிழர்கள் பாரம்பரியமாக செய்து வருகிறார்கள். குழந்தையை தாய்ப்பால் பாதியும், உரை மருந்து மீதியும் வளர்க்கிறது என்று சித்த மருத்துவர் காமராஜ் கூறுகிறார்.

பலன்கள்

உரை மருந்து கொடுப்பதால் குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. சளி, இருமல், வாந்தி, பால் கக்குதல், மலக்கட்டு, வயிறு உப்புசம், செரிமானம் போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் காக்கும். நோய் தொற்றுகள் மற்றும் காய்ச்சல் போன்றவை அடிக்கடி ஏற்படாமல் காக்கும். மேலும் குழந்தையின் ஆரோக்கியத்தை இந்த உரை மருந்து மேம்படுத்துகிறது என்று மருத்துவர் காமராஜ் கூறுகிறார்.

உரை மாத்திரையாக இருந்தால், ஒரு மாத்திரையை காலை, மாலை இருவேளையும் 5 வயது வரை தொடர்ந்து வழங்கி வரலாம். இதை தாய்ப்பால் அல்லது தேனில் கலந்து கொடுக்கவேண்டும்.

காயகற்பம்

இந்த உட்பொருட்கள் அனைத்தும் காயகற்ப உணவுபொருட்கள் ஆகும். காயகற்பம் என்றால், காயம் என்றால் உடல், கற்பம் என்றால் நரை, திரை, மூப்பு, பிணி, மரணம் வராமல் காத்து ஆயுளை நீடிப்பது. ஆங்கில மருந்துகள் எது கொடுத்தாலும் இந்த உரை மாத்திரையைக் கொடுக்கலாம். இந்த மாத்திரையை கொடுக்கும் முன்னர் சித்த மருத்துவரின் அறிவுரையைப் பெற்று கொடுத்தால் நல்லது.

குழந்தை பெற்ற தாய்மார்கள் என்ன செய்யவேண்டும்?

குழந்தை பிறந்த பின் தாய்மார்களின் உடலையும் பராமரிப்பது மிகவும் முக்கியம். ஏனெனில் குழந்தையை பார்த்துக்கொள்ளவும், இரவு, பகல் பாராமல் குழந்தைக்கு பால் கொடுக்கவும். அவர்களை உறங்க வைக்கவுமே தாய்க்கு நேரம் இல்லாமல் போகும்போது, அவர்களை கவனித்துக்கொள்வது மிகவும் சிரமமானதாக இருக்கும். மேலும் தாய்மார்களின் உடலும் பலவீனமாக இருக்கும். அவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் இந்த நேரத்தில் தாய்மார்களின் உடல் கடும் உபாதைகளுக்கு ஆளாக நேரிடும். நோய் எதிர்ப்பு குறையும். தொற்றுகள், காய்ச்சல், மனச்சிக்கல், மலச்சிக்கல், பசி, செரிமான கோளாறுகள் போன்றவை ஏற்படும். இவை இருந்தால் தாய்ப்பால் சரியாக சுரக்காது. எனவே குழந்தை பெற்ற பெண்களும் எடுத்துக்கொள்ளவேண்டியது என்ன தெரியுமா?

லேகியம்

சதாவரி லேகியம், சவுபாக்கிய சுண்டி லேகியம் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவேண்டும். பாலூட்டும் தாய்மார்களுக்கு தேவையான சகல நன்மைகளையும் தந்து காப்பது உணவு. இதனுடன், முக்கிய உணவுப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் லேகியத்தையும் நாம் கொடுக்கவேண்டும். இந்த லேகியம் பிரசவத்துக்குப்பின் பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மனச்சோர்வைப் போக்கும். இந்த சதாவரி லேகியத்தில் சுக்கு, திப்பிலி, அமுக்காரா கிழங்கு, அதிமதுரம், சித்தரத்தை, சதகுப்பை, கிராம்பு, ஏலம், சீரகம், கோரைக்கிழங்கு, சதாவரி, பெருங்காயம், ஓமம் உள்ளிட்ட 32 மூலிகைப்பொருட்கள் அடங்கியிருக்கும்.

சுண்டி லேகியத்தில் சுக்கு, ஏலம், நிலப்பனை கிழங்கு, பாட கிழங்கு, நெருஞ்சில், நன்னாரி, திப்பிலி, அதிமதுரம், மூங்கிலுப்பு, சதாவரி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மூலிகைப் பொருட்கள் கலந்திருக்கும். இந்த லேகியத்தை சித்த மருத்துவர் ஆலோசனைப் பெற்று காலை, மாலை இருவேளையும் சாப்பிடவேண்டும். 10 கிராம் அளவு எடுத்து உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தாய்ப்பால் சுரப்பையும் அதிகரிக்கும். கருப்பையின் செயல்பாடும் சீராக இருக்கும்.

இதை சாப்பிடுவதால் எவ்வித பக்கவிளைவும் ஏற்படாது. பசியின்மை, செரிமானமின்மை, மலக்கட்டு பிரச்னைகள் போன்றவை ஏற்படாமல் காத்து, குழந்தையின் ஆரோக்கியத்தையும் இந்த இரண்டு லேகியமும் வழங்கும். ஆங்கில மருந்துகள் எதை எடுத்துக்கொண்டாலும் சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்ளலாம் என சித்த மருத்துவர் காமராஜ் கூறுகிறார்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.