குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கிய லட்டு; சுவையிலும் அள்ளும்! இதமளிக்கும் ரெசிபி இதோ!
குளிர் காலத்துக்கு ஏற்ற லட்டு ஆரோக்கிய லட்டு செய்வது எப்படி?
குளிர் காலத்தில் சிலருக்கு கை-கால் மூட்டுகளில் வலி ஏற்படும். காலில் மதமதப்பு ஏற்படும். குளிர் காலத்தில் பெண்களுக்கு முடி உதிர்வு பிரச்னைகள், சருமம் வறண்டு போகும். இந்த லட்டு சாபிட்டால் உடலுக்கு தேவையான ஆற்றலும், நோய் எதிர்ப்புத்திறனும் கிடைக்கும். இதை தினமும் காலை மற்றும் மாலை என ஒரு லட்டு சாப்பிடும்போது உங்கள் உடலுக்கு தேவையான எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவார்கள். ஒருமுறை ருசித்தால் நீங்களும், மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். எனவே ஒருமுறை கட்டாயம் செய்துவிடுங்கள். இதற்கு உங்கள் வீட்டி உள்ள பொருட்களே போதுமானது.
தேவையான பொருட்கள்
வெள்ளை எள் – ஒரு கப்
(கருப்பு எள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். எள்ளில் உள்ள கால்சியம் மற்றும் இரும்புச்சத்துக்கள் உங்களுக்கு எலும்பு தொடர்பான பிரச்னைகளை குணப்படுத்தும். தசைபிடிப்பை தசை செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். சருமத்தை மென்மையாக்கும். முடி உதிர்வைத்தடுக்கும். பொடுகை நீக்கும்)
ஓட்ஸ் – அரை கப்
(அரை கப் ஓட்ஸில் அதிகப்படியான நார்ச்சத்துக்கள் உள்ளது. இதனால் மலச்சிக்கல் இருக்காது. உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தரும்)
தேங்காய் துருவல் – அரை கப்
(டெசிகேடட் கோகனட் என்ற உலர்ந்த தேங்காய் துருவல் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கிகொள்ளவேண்டும்)
கடலை – ஒரு கப்
பேரிட்சை – ஒரு கப்
நெய் – ஒரு ஸ்பூன்
செய்முறை
முதலில் எள்ளை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவேண்டும். அடுத்து ஓட்ஸை குறைவான தீயில் வைத்து 5 நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவேண்டும். தேங்காய்த் துருவலையும் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவேண்டும். கடலையையும் வறுத்துக்கொள்ளவேண்டும்.
முதலில் வறுத்த எள், ஓட்ஸ் மற்றும் டெசிகேடட் கோகனட் ஆகிய மூன்றையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக்கொள்ளவேண்டும். அடுத்து வறுத்த கடலையை தனியாக அரைத்து, ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பொருட்களுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும். இவற்றை அரைக்கும்போது அதிகம் அரைத்து விடக்கூடாது.
கொஞ்சம் மட்டுமே பொடித்துக்கொண்டால் போதும். பேரிட்ச்சையை மிக்ஸி ஜாரில் சேர்த்து, அரைத்து, பின்னர் அதை கடாயில் சேர்த்து வறுக்கவேண்டும். இதனுடன் பொடித்து வைத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து, கைபொறுக்கும் பதத்தில் லட்டுகளாக பிடித்துக்கொள்ளவேண்டும்.
இதை தினமும் காலை மற்றும் மாலை என ஒரு லட்டு சாப்பிடும்போது உங்கள் உடலுக்கு தேவையான எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவார்கள். ஒருமுறை ருசித்தால் நீங்களும், மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். எனவே ஒருமுறை கட்டாயம் செய்துவிடுங்கள்.
உங்களுக்கு இனிப்பு அதிகம் வேண்டுமென்றால், இதனுடன் நாட்டுச்சர்க்கரை அல்லது கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்துக்கொள்ளலாம். இதை குளிர் காலத்தில் மட்டுமல்ல அனைத்து சீசனிலும் சாப்பிடலாம். விரும்பினால், முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள் ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்