தினமும் ஒரு டம்ளர் பப்பாளி பழ ஜூஸ்; உடலுக்கு கிடைக்கும் 7 நன்மைகள் என்ன? தெரிந்தால் விடமாட்டீர்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தினமும் ஒரு டம்ளர் பப்பாளி பழ ஜூஸ்; உடலுக்கு கிடைக்கும் 7 நன்மைகள் என்ன? தெரிந்தால் விடமாட்டீர்கள்!

தினமும் ஒரு டம்ளர் பப்பாளி பழ ஜூஸ்; உடலுக்கு கிடைக்கும் 7 நன்மைகள் என்ன? தெரிந்தால் விடமாட்டீர்கள்!

Priyadarshini R HT Tamil
Dec 17, 2024 12:55 PM IST

தினமும் பப்பாளி பழத்தின் சாறு பருகுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

தினமும் ஒரு டம்ளர் பப்பாளி பழ ஜூஸ்; உடலுக்கு கிடைக்கும் 7 நன்மைகள் என்ன? தெரிந்தால் விடமாட்டீர்கள்!
தினமும் ஒரு டம்ளர் பப்பாளி பழ ஜூஸ்; உடலுக்கு கிடைக்கும் 7 நன்மைகள் என்ன? தெரிந்தால் விடமாட்டீர்கள்!

பப்பாளிப்பழம் சரும ஆரோக்கியத்தின் நண்பன் எனலாம். பளபளக்கும் சருமத்தை பெறவேண்டுமெனில், நீங்கள் தினமும் அதிகளவில் பப்பாளிப் பழங்களை சாப்பிடவேண்டும். உங்கள் சரும ஆரோக்கியம் வெகுவாக அதிகரிக்கும். பப்பாளி பழத்தை சாப்பிடுவதற்கு சிலருக்குப் பிடிக்காது. அதனால்தான் அதை ஜூஸ் பிழிந்து, சிறிது தேன் கலந்து பருகவேண்டும். அப்போது அது மிகுந்த சுவை நிறைந்ததாகிவிடும். பப்பாளிப்பழம் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். பப்பாளிப்பழத்தின் சாற்றை பருகுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளைப் பாருங்கள்.

செரிமானத்தை அதிகரிக்கிறது

பப்பாளிப்பழத்தில் பப்பைன் அதிகம் உள்ளது. இது உங்கள் உடலில் புரதச்சத்துக்களை உடைக்க உதவுகிறது. இதனால் எளிதில் செரிமானம் நடக்கிறது. இதனால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கிறது.

உடல் எடையிழப்பை அதிகரிக்கிறது

பப்பாளியில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் மற்றும் குறைவான கலோரிகள், இதனால் உடல் எடையை முறையாகப் பராமரிக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது

பப்பாளியில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் உள்ளது. இது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது.

கல்லீரலில் உள்ள கழிவுகளைப் போக்குகிறது

இது கல்லீரலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

மாதவிடாயை முறைப்படுத்துகிறது

மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்கிறது. இயற்கை உட்பொருட்கள் அடங்கியது.

வீக்கத்தைக் குறைக்கிறது

இதன் வீக்கத்துக்கு எதிரான குணங்கள், வீக்கம் மற்றும் வலி ஆகியவற்றைப் போக்குகிறது.

இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

இதில் உள்ள அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில்உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கிறது. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. எண்ணற்ற நன்மைகளை அள்ளி வழங்கும் பப்பாளிப்பழம் எளிதாக கிடைக்கக்கூடிய ஒன்றுதான். எனவே உங்கள் அன்றாட உணவில் தவறாமல் எடுத்து, அதன் நன்மைகளைப் பெறுங்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.