நள்ளிரவில் திடீரென ஏற்படும் செரிமானமின்மை, வாயுத்தொல்லை, சுவாச கோளாறுகளை உடனே குணப்படுத்தும் பானம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  நள்ளிரவில் திடீரென ஏற்படும் செரிமானமின்மை, வாயுத்தொல்லை, சுவாச கோளாறுகளை உடனே குணப்படுத்தும் பானம்!

நள்ளிரவில் திடீரென ஏற்படும் செரிமானமின்மை, வாயுத்தொல்லை, சுவாச கோளாறுகளை உடனே குணப்படுத்தும் பானம்!

Priyadarshini R HT Tamil
Updated Oct 21, 2024 10:59 AM IST

நள்ளிரவில் திடீரென ஏற்படும் செரிமானமின்மை, வாயுத்தொல்லை, சுவாச கோளாறுகளை உடனே குணப்படுத்தும் பானம். இதை மட்டும் பருகிப்பாருங்கள் உடனடி பலன் உறுதி.

நள்ளிரவில் திடீரென ஏற்படும் செரிமானமின்மை, வாயுத்தொல்லை, சுவாச கோளாறுகளை உடனே குணப்படுத்தும் பானம்!
நள்ளிரவில் திடீரென ஏற்படும் செரிமானமின்மை, வாயுத்தொல்லை, சுவாச கோளாறுகளை உடனே குணப்படுத்தும் பானம்!

நடு ராத்திரியில் ஏற்படும் திடீர் நெஞ்சு வலி, நெஞ்சு எரிச்சல், வயிறு கட்டு, வயிறு மந்தம், வயிறு உப்புசம், வாயுத்தொல்லை என எது வந்தாலும் நீங்கள் உடனடியாகச் பருகவேண்டியது இந்த பானம்தான். அந்தவேளையில் நீங்கள் மருத்துவமனைக்கும் செல்ல முடியாது. மாத்திரைகளும் வாங்கிக்கொண்டு இருக்க முடியாது. எனவே நீங்கள் முதலுதவியாக இந்த பானத்தை மட்டும் பருகினால் போதும். கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் அமில எதிர்ப்பு, நெஞ்செரிச்சல், அல்சர் தொடர்பாக அடிக்கடி ஏற்படும் அமில எதிர்க்களிப்பு, வாயு அட்டாக் ஆகியவை உடனே தீரும். இந்த கஷாயத்தைப் போட்டு 100 மில்லி லிட்டர் அளவுக்குப் பருகவேண்டும்.

தேவையான பொருட்கள்

ஓமம் – ஒரு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

இஞ்சி – கால் இன்ச் (பொடியாக நறுக்கியது)

இனிப்புக்கு – தேன், நாட்டுச்சர்க்கரை, வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு என எதை வேண்டுமானாலும், தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், இதை அப்படியே பருகவேண்டும். அதுதான் அதிக பலன்கள் தரக்கூடியது.

செய்முறை

ஓமம், சீரகம், நறுக்கிய இஞ்சி மூன்றையும், 200 மில்லி லிட்டர் தண்ணீரில் சேர்த்து அது 100 மில்லி லிட்டராக சுண்டும் வரை கொதிக்க வைக்கவேண்டும். அது சுண்டியவுடன், அதை வடிகட்டி பருகவேண்டும். பருகினால், சுவாச கோளாறுகள், செரிமான பிரச்னைகள், திடீரென ஏற்படும் அல்சர் வாயுத்தொல்லைகள் என அனைத்தும் குணமாகும். இது எவ்விம பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. குழந்தைகளுக்கு இதில் பாதியளவு கொடுக்கலாம்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

இதுபோன்ற எண்ணற்ற ரெசிபிக்கள், அரிய ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் தகவல்களை தேர்ந்தெடுத்து ஹெச்.டி தமிழ் உங்களுக்காக வழங்கிவருகிறது. தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் தீபாவளி சிறப்பு இனிப்புகள் உள்ளிட்ட தொடர்பான விஷயங்களை கொடுக்கிறோம். எனவே இதுபோன்ற தகவல்களை தொடர்ந்து பெற எங்கள் இணையப் பக்கத்தில் இணைந்திருங்கள். இந்த ரெசிபிக்களை செய்து சாப்பிட்டு பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடி மகிழ வாழ்த்துக்கள்.