Banana Appam : பஞ்சு போல மெத்து மெத்தனெ தித்திப்பான வாழைப்பழ அப்பம்.. பார்த்தாலே சுண்டி இழுக்கும் சுவையில் செய்யலாமா!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Banana Appam : பஞ்சு போல மெத்து மெத்தனெ தித்திப்பான வாழைப்பழ அப்பம்.. பார்த்தாலே சுண்டி இழுக்கும் சுவையில் செய்யலாமா!

Banana Appam : பஞ்சு போல மெத்து மெத்தனெ தித்திப்பான வாழைப்பழ அப்பம்.. பார்த்தாலே சுண்டி இழுக்கும் சுவையில் செய்யலாமா!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 17, 2025 07:00 AM IST

வீட்டிலேயே ஹெல்த்தியான ஸ்நாக்ஸ்களை தயாரிக்க முடியும். அப்படி ஹெல்தியான வாழைப்பழத்தில் ஈசியாக அப்பம் செய்வது எப்படி என பார்க்கலாம் வாங்க.

Banana Appam : பஞ்சு போல மெத்து மெத்தனெ தித்திப்பான வாழைப்பழ அப்பம்.. பார்த்தாலே சுண்டி இழுக்கும் சுவையில் செய்யலாமா!
Banana Appam : பஞ்சு போல மெத்து மெத்தனெ தித்திப்பான வாழைப்பழ அப்பம்.. பார்த்தாலே சுண்டி இழுக்கும் சுவையில் செய்யலாமா!

வாழைப்பழ அப்பம் தேவையான பொருட்கள்

வாழைப்பழம் - 1

வெல்லம் - அரை கப்

கோதுமை மாவு  - அரை கப்

சோடா உப்பு - கால் ஸ்பூன்

அரிசி மாவு - இரண்டு ஸ்பூன்

ஏலக்காய் பவுடர் - கால் ஸ்பூன்

தேங்காய் பூ - அரை கப்

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

முந்திரி - 10

நெய் 2 ஸ்பூன்

உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை

ஒரு பெரிய நேந்திரம் பழத்தை நன்றாக வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும். இந்த பழத்தை தோல் நீக்கி நன்றாக மசித்து எடுத்து கொள்ள வேண்டும். பழம் கெட்டியாக இல்லாமல் நன்றாக பழுத்த பழமாக பார்த்து கொள்ள வேண்டும்.

அதில் அரை கப் அளவு வெல்லத்தை துருவி பாகு காய்ச்சி எடுத்து கொள்ள வேண்டும். மேலும் அரை கப் கோதுமை மாவையும் சலித்து விட்டு சேர்த்து கொள்ள வேண்டும். இரண்டு ஸ்பூன் அரிசி மாவையும் சேர்த்து கொள்ள வேண்டும். அதில் கால் ஸ்பூன் ஏலக்காய் பவுடர், கால் ஸ்பூன் சோடா உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதில் அரைக்கப் தேங்காய் துருவலையும் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து அதில் முந்திரி பருப்பை வறுத்து மாவுடன் நன்றாக கலந்து விட வேண்டும். அதில் ஒரு சிட்டிகை உப்பையும் சேர்ந்து நன்றாக கலந்து விட வேண்டும். இந்த மாவை ஒரு 5 நிமிடம் அப்படியே மூடி வைத்து விடுங்கள் 

பின்னர் ஒரு வாணலியில் அப்பம் பொரித்து எடுக்க தேவையான அளவு எண்ணெய் விட்டு சூடாக்க வேண்டும். எண்ணெய் நன்றாக சூடான பிறகு மாவை சிறிது சிறிதாக உற்றி விட வேண்டும். இரண்டு நிமிடம் வெந்த பிறகு அப்பத்தை பிரட்டி விட்டு வேக விடலாம். அவ்வளவு தான் நன்றாக வேக விட்டு எடுத்தால் மெத்து மெத்தனெ பஞ்சு போல வாழைப்பழ அப்பம் ரெடி

உடனே செஞ்சு பாருங்க. குழந்தைகளுக்கு மட்டும் இல்லை. இந்த அப்பம் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் மிகவும் பிடிக்கும். அதிகப்படியான ரசாயனம் எதுவும் சேர்க்காமல் வீட்டிலே எளிமையான முறையில் செய்யும் இந்த அப்பத்தை சாப்பிடுவது ஆரோக்கியமானது. ஆனால் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அளவாக சாப்பிட வேண்டும்.

குறிப்பு : இந்த வாழைப்பழ அப்பத்திற்கு நேந்திரம் பழம் தவிர்த்து நீங்கள் எந்த வாழைப்பழத்தையும் பயன்படுத்தலாம்.  விருப்பம் உடையவர்கள் ஒரு ஸ்பூன் எள் சேர்த்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.