5 நிமிடத்தில் செய்யக்கூடிய மல்லிச்சட்னி; சாதம், டிபஃன் இரண்டுக்கும் ஏற்றது! சுவையிலும் அட்டகாசம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  5 நிமிடத்தில் செய்யக்கூடிய மல்லிச்சட்னி; சாதம், டிபஃன் இரண்டுக்கும் ஏற்றது! சுவையிலும் அட்டகாசம்!

5 நிமிடத்தில் செய்யக்கூடிய மல்லிச்சட்னி; சாதம், டிபஃன் இரண்டுக்கும் ஏற்றது! சுவையிலும் அட்டகாசம்!

Priyadarshini R HT Tamil
Jan 04, 2025 10:30 AM IST

மல்லிச்சட்னி செய்வது எப்படி?

5 நிமிடத்தில் செய்யக்கூடிய மல்லிச்சட்னி; சாதம், டிபஃன் இரண்டுக்கும் ஏற்றது! சுவையிலும் அட்டகாசம்!
5 நிமிடத்தில் செய்யக்கூடிய மல்லிச்சட்னி; சாதம், டிபஃன் இரண்டுக்கும் ஏற்றது! சுவையிலும் அட்டகாசம்!

தேவையான பொருட்கள்

மல்லித்தழை – கைப்பிடியளவு

பூண்டு – 2 பல்

பச்சை மிளகாய் – 1

புளி – சிறிய நெல்லிக்காய் அளவு

உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – 2 ஸ்பூன்

வர மிளகாய் – 2

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

செய்முறை

மல்லித்தழை, பூண்டு, பச்சை மிளகாய், புளி, உப்பு சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் தெளித்து மிக்ஸி ஜாரில் சட்னியாக அரைத்துக்கொள்ளவேண்டும். ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுந்து, வர மிளகாய் தாளித்து இந்த சட்னியில் சேர்க்கவேண்டும். சூப்பர் சுவையான மல்லிச்சட்னி தயார்.

கொத்தமல்லித்தழையின் நன்மைகள்

நீரழிவு அளவை கட்டுப்படுத்துகிறது - நீரழிவு பாதிப்புக்கான அபாயம் இருந்தால் உங்கள் உணவில் கொத்தமல்லி தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் உள்ள என்சைம்கள் உடல் ரத்தத்திலுள்ள குளுகோஸ் அளவை நிர்வகிப்பதுடன், அதிலுள்ள சர்க்கரை அளவை நீக்குகிறது என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் நீரழிவு பாதிப்பானது கட்டுப்படுத்தப்படுகிறது.

செரிமானத்தை எளிதாக்குகிறது - கொத்தமல்லியில் அதிகப்படியான நார்ச்சத்துகளும், ஆன்டிஆக்ஸிடன்ட்களும் நிரம்பியுள்ளன. இவை செரிமானத்தை மேம்படுத்துவதுடன், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. அதேபோல் வயிறு உப்புசம் ஆவது தவிர்க்கப்படுவதுடன், மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. உங்களுக்கு நிறைவான உணர்வை தருவதுடன், குடலையும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

மனஅழுத்தம் ஏற்படுவதை தடுக்கிறது - கொத்தமல்லியை உணவில் சேர்ப்பதால் மனஅழுத்தம் ஏற்படுவது குறைக்கப்படுகிறது. செரிமானத்தை எளிதாக்கி, உடலில் ஏற்படும் மனஅழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்தி, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து நல்ல மனநிலையை ஏற்படுத்துகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது - இதயத்துக்கு நண்பனாக திகழும் கொத்தமல்லி இலை ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இதய நோய் பாதிப்புக்கான அபாயம் குறைவாக உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது - கொத்தமல்லி இலையில் டெர்பினீன், க்வெர்செடின் மற்றும் டோகோபெரோல்ஸ் உள்பட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளது. இவை செல்களின் பாதிப்பு ஏற்படாமல் போராடி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் இவை வீக்கத்தை குறைத்து புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

கண்களுக்கு நன்மை தருகிறது - கொத்தமல்லியில் வைட்டமின் ஏ, சி, ஈ காரோடெனாய்ட்ஸ் போன்றவை இருப்பதால் உங்கள் பார்வையை கூர்மையாக்குகிறது. வயது முதிர்வின்போது பார்வைக் குறைபாடு ஏற்படுத்தும் மாகுலர் நோய் சிதைவு ஏற்படுத்துவதை தாமதப்படுத்துகிறது.

எலும்புகளை வலுப்படுத்துகிறது - கொத்தமல்லியில் கால்சீயம், பாஸ்பரஸ், மக்னீசியம் போன்ற தாதுக்கள் இருப்பதால் எலும்புகளின் அடர்த்தி அதிகரிப்பதுடன், மூட்டு வலிகளிலிருந்து உங்களை பாதுகாக்கிறது.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.