உங்கள் குழந்தைகள் நாள் முழுவதும் சிறப்பாக செயல்பட காலையில் செய்ய வேண்டிய 9 விஷயங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உங்கள் குழந்தைகள் நாள் முழுவதும் சிறப்பாக செயல்பட காலையில் செய்ய வேண்டிய 9 விஷயங்கள்!

உங்கள் குழந்தைகள் நாள் முழுவதும் சிறப்பாக செயல்பட காலையில் செய்ய வேண்டிய 9 விஷயங்கள்!

Priyadarshini R HT Tamil
Jan 05, 2025 06:00 AM IST

குழந்தைகள் காலையில் எழுந்தவுடன் செய்யவேண்டிய விஷயங்கள் என்ன?

உங்கள் குழந்தைகள் நாள் முழுவதும் சிறப்பாக செயல்பட காலையில் செய்ய வேண்டிய 9 விஷயங்கள்!
உங்கள் குழந்தைகள் நாள் முழுவதும் சிறப்பாக செயல்பட காலையில் செய்ய வேண்டிய 9 விஷயங்கள்!

காலை பழக்க சார்ட்

நீங்கள் ஒரு சார்ட்டை வைத்துக்கொள்ளுங்கள். அதில் காலையில் நீங்கள் செய்ய வேண்டிய விஷங்களை பட்டியலிடுங்கள். காலையில் எழுந்து பற்களை துலக்குவது, உடை உடுத்துவது, பள்ளிக்கு தயாராவது என அதில் உங்கள் காலை வழக்கத்தை குறித்து வையுங்கள். இது உங்கள் குழந்தைகள் ஒரு நல்ல பழக்கத்தை பழகுவதற்கு உதவும். மேலும் அவர்களை இதை தொடர்ந்து செய்ய வைத்து அவர்களை ஒருங்கிணைப்புடன் வைக்க உதவும்.

நேர மேலாண்மை

நீங்கள் ஒரு டைமரை வைத்துவிட்டு, குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு வேலையை செய்து முடிக்கவேண்டும் என்று அவர்களுக்கு டாஸ்குகளைக் கொடுங்கள். அது குளிப்பது, உடை உடுத்திக்கொள்வது, வீட்டை சுத்தம் செய்வது என வேலைகளாக இருக்கட்டும். இது குழந்தைகளுக்கு நேரத்தை மேலாண்மை செய்ய உதவும். பணியையும் சிறப்பாக செய்து முடிக்கவும், நேரத்தை மிச்சம் செய்யவும் உதவும்.

முதல் நாள் இரவே உடைகளை தயார் செய்து வைப்பது

உங்கள் குழந்தைகளுக்கு அடுத்த நாள் உடுத்தும் உடைகளை முதல் இரவே எடுத்து வைத்துவிடும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். அப்போதுதான் காலையில் எழுந்து அவர்கள் பரபரப்பாக இல்லாமல் பொறுமையாக கிளம்ப முடியும்.

நன்றி

உங்கள் குழந்தைகளுக்கு நன்றி உணர்வை வளர்த்தெடுப்பது மிகவும் அவசியம். அதை அவர்கள் எழுத அறிவுறுத்துங்கள். தினமும் காலையில் அவர்கள் எதற்கு இன்று நன்றி கூறவேண்டும் என்று எழுதவேண்டும். இது அவர்களுக்கு நேர்மறை எண்ணங்களை மட்டும் கொடுக்காது. அவர்களுக்கு மனநிறைவை அதிகரித்து, கவனத்தை கூட்டும்.

அந்த நாளின் திட்டம் குறித்து உரையாடுங்கள்

அவர்களின் அட்டவணை குறித்து நீங்கள் சரிபார்க்க சில நிமிடங்களை செலவிடுங்கள். இது அவர்களுக்கு தேவையான விஷயங்களை செய்வதற்கு அவர்களை மன ரீதியாக தயார்படுத்தும். மேலும் திட்டமிடுதல் ஏன் அவசியம் என்ற புரிதலையும் உண்டாக்கும்.

அன்றாட பொறுப்புக்களை அவர்களுக்கு கொடுங்கள்

உங்கள் குழந்தைகளை எளிய காலை வேலைகளில் உதவ பழக்கப்படுத்துங்கள். அப்போதுதான் அவர்களுக்கு பொறுப்பு வரும். செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது அல்லது காலையில் படுக்கையை மடித்து வைப்பது அல்லது புத்தக டேபிளை சுத்தம் செய்வது என அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இது அவர்களுக்கு பொறுப்பையும், செயல்களை முறையாக கையாளவும் உதவும்.

பரிசோதனை

நீங்கள் முடித்த வேலைகள் சரியாக முடிக்கப்பட்டுவிட்டதா என்பது குறித்து சரிபார்த்துக்கொள்ளுங்கள். பள்ளியில் இருந்து வந்தவுடன் வீட்டுப்பாடங்களை முடிப்பது, தண்ணீர் பாட்டில்கள் மற்றும் லன்ச் பாக்ஸ்களை ஒரு இடத்தில் வைப்பது என இருக்கலாம். இதை நீங்கள் வழக்கமாக செய்யும்போது எதுவும் செய்யாமல் விடுபடாது. அனைத்து வேலைகளும் சரியான நேரத்தில் முடிக்கப்படும்.

காலையில் எழுந்திருக்கும் நேரம்

தினமும் காலையில் அவர்கள் ஒரே நேரத்தில் எழுந்திருக்கவேண்டும். அதை நீங்கள் கட்டாயமாக்குங்கள். இந்த வழக்கம் அவர்களுக்கு ஒரு ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுக்கும். இதனால் அவர்கள் காலையில் வேலைகளை செய்துவிட்டு, கிளம்புவதற்கு அவர்களுக்கு நேரத்தைக் கொடுக்கும். காலையில் நீங்கள் பரபரப்புடன் இருக்க வேண்டாம்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.