Kidney Health : சிறுநீரக ஆரோக்கியத்தை அதிகரிக்கும் 9 உணவுகள்; கட்டாயம் எடுத்து கிட்னியை காப்பாற்றிக்கொள்ளுங்கள்!
சிறுநீரக ஆரோக்கியத்தை காக்கும் உணவுகள் என்ன?

உங்கள் சிறுநீரகத்தை பாதுகாக்கவேண்டுமெனில் உங்களுக்கு ஏற்ற உணவுகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் சரிவிகித உணவை உட்கொள்வது உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. மேலும் அதில் குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் சோடியம் மற்றும் பொட்டாசியம் குறைவான உணவுகளை நீங்கள் சாப்பிடவேண்டும். இது உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. இது சிறுநீரக நோய்கள் ஏற்படும் ஆபத்துக்களையும் குறைக்கிறது.
கிரான்பெரிகள்
கிரான்பெரிகளில் அதிகளவில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. 100 கிராமில் 14 மில்லி கிராம் உள்ளது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உங்களுக்கு சிறுநீரக பாதை தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்கிறது. சிறுநீரகத்துக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்கிறது. இது ஒட்டுமொத்த சிறுநீரக ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள உட்பொருட்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளையும் கொடுக்கிறது.
ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெயில் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளது. இது 884 கலோரிகளைக் கொடுக்கிறது. 100 கிராம் ஆலிவ் எண்ணெயில் 14 மில்லி கிராம் வைட்டமின் ஈ சத்துக்கள் உள்ளது. இதில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள, உங்கள் உடலுக்கு நன்மையைக் கொடுக்கிறது. உங்கள் சிறுநீரகங்கள் நன்றாக இயங்க உதவுகிறது.
