Reduce Belly Fat: தொப்பையைக் குறைக்க தினமும் காலையில் செய்யவேண்டிய 8 விஷயங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Reduce Belly Fat: தொப்பையைக் குறைக்க தினமும் காலையில் செய்யவேண்டிய 8 விஷயங்கள்!

Reduce Belly Fat: தொப்பையைக் குறைக்க தினமும் காலையில் செய்யவேண்டிய 8 விஷயங்கள்!

Marimuthu M HT Tamil Published Jul 02, 2024 08:24 PM IST
Marimuthu M HT Tamil
Published Jul 02, 2024 08:24 PM IST

Reduce Belly Fat: தொப்பையைக் குறைக்க தினமும் காலையில் செய்யவேண்டிய 8 விஷயங்கள் குறித்துப் பார்க்கலாம்.

Reduce Belly Fat: தொப்பையைக் குறைக்க தினமும் காலையில் செய்யவேண்டிய 8 விஷயங்கள்!
Reduce Belly Fat: தொப்பையைக் குறைக்க தினமும் காலையில் செய்யவேண்டிய 8 விஷயங்கள்! (Photo by Towfiqu barbhuiya on Unsplash)

தவிர, தொப்பை கொழுப்பு உடலில் உள்ள மற்ற கொழுப்புகளைவிட மிகவும் ஆபத்தானது. இது உங்கள் உள் உறுப்புகளைச் சுற்றியுள்ளதால் இதய நோய், நீரிழிவு மற்றும் கல்லீரல் பிரச்னைகள் வரும் அபாயத்தை அதிகரிக்கிறது. 

இது உள்ளுறுப்பு கொழுப்பு என்றும் அழைக்கப்படுகிறது. 

இந்த கொழுப்பைக் குறைக்க முயற்சித்தவர்களில் நீங்களும்  ஒருவராக இருந்தால், தொப்பையைக் குறைக்க உதவும் காலை வழிகாட்டி முறைகள் கீழே கொடுக்கப்படுகின்றது. 

‘’ 8 எளிய மற்றும் சக்தி வாய்ந்த நடைமுறைகளை உங்கள் காலை வழக்கத்தில் சேர்ப்பது வயிற்றில் தொப்பைக் கொழுப்பைக் குறைக்க உதவும். அதனால், தொப்பைக் கொழுப்பைக் குறைக்க தீவிரமான செயல்முறையை துரிதப்படுத்தலாம்"என்று மருத்துவர் ஹர்ஷ் கபூர் தெரிவித்தார்.

உங்கள் தொப்பைக் கொழுப்பைக் குறைக்க, உங்கள் உடலுக்கு உதவும் சில ஆரோக்கிய விஷயங்கள் பற்றிப் பார்ப்போம். 

1. காலையில் எழுந்ததும் எலுமிச்சை சாறு குடிப்பது:

 காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறு குடித்து ஹைட்ரேட் செய்வது நல்லது. இது புத்துணர்ச்சியூட்டும் ஜூஸ் ஆகும். இது செரிமானத்தினைத் தூண்டக் கூடியது. மேலும், இது உங்கள் உடலில் இருக்கும் தொப்பைக் கொழுப்பை எளிதில் கரைக்க உதவும். இதன்மூலம் நல்ல வளர்சிதை மாற்றத்தினைத் தொடங்கலாம். 

2. காலை உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்

காலையில் உடற்பயிற்சி செய்வது தொப்பையைக் குறைக்க ஒரு சிறந்த வழியாகும். இது ஒரு விறுவிறுப்பான நடை, யோகா அமர்வு, அதி தீவிரப் பயிற்சி கொண்ட ஒர்க் அவுட்டாக இருக்கலாம். இது உங்கள் உடல் கொழுப்பைக் கரைக்க உதவும். ஒவ்வொரு காலையிலும் குறைந்தது 30 நிமிடங்கள் மிதமானது முதல்-தீவிரமான உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

3. புரதம் நிறைந்த காலை உணவை உண்ணுங்கள்

புரதம் நிறைந்த காலை உணவை உட்கொள்வது மனநிறைவை பராமரிக்கவும், இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்தவும், கொழுப்பைக் குறைக்கவும் உதவும். ஊட்டச்சத்து அடர்த்தியான முட்டை, தயிர்போன்ற உணவுகளைச் சேர்க்கவும். புரதம் ஜீரணிக்க அதிக ஆற்றலை எடுக்கும். புரத உணவுகளை உண்ணும்போது பசி குறைவாக எடுக்கும். இதன்மூலம் தேவையற்ற உணவுகளை உணவாக எடுக்கமாட்டோம். 

4. கவனத்துடன் சாப்பிடுவதைப் பயிற்சி செய்யுங்கள்:

கவனத்துடன் சாப்பிடுவது என்பது உங்கள் உணவில் முழு கவனம் செலுத்துவது ஆகும். ஒவ்வொரு முறை உணவு எடுக்கும்போதும் நன்கு மென்று ருசிப்பது மற்றும் மெதுவாக சாப்பிடுவது ஆகியவை இதில் அடங்கும். நன்கு பசித்தபின் புசிக்க உதவுகிறது. சாப்பிடும்போது செல்போன் மற்றும் டிவி பார்ப்பதைத் தவிருங்கள். 

5. சீரான இடைவெளிவிட்டு பயிற்சி செய்வது:

உங்கள் காலை வழக்கத்தில் சீரான இடைவெளி விட்டு பயிற்சி செய்வது, உங்கள் கொழுப்பு எரிவதைக் குறைக்க உதவும். இந்த வகையான பயிற்சி, உங்கள் உடல் எடையைக்குறைக்க உதவும். வயிற்று தொப்பையைக் குறைக்க உதவுகிறது. 

6. நார்ச்சத்து நிறைந்த உணவுகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்:

உங்கள் காலை உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்ப்பது எடை இழப்புக்கு உதவும் மற்றும் குறிப்பாக தொப்பையைக் குறைக்க உதவும். முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் என அனைத்தும் உணவு நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரங்கள் ஆகும்.  நார்ச்சத்து நிறைந்த உணவுகள் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. செரிமானத்தை ஊக்குவித்து, உடலில் வீக்கம் மற்றும் கொழுப்பு குவிப்பைக் குறைக்கிறது.

7. தியானத்தின் மூலம் மன அழுத்தத்தை நிர்வகிக்கவும்

நாள்பட்ட மனஅழுத்தம் வயிற்றில் தொப்பையை அதிகரிக்க உதவுகிறது.  உங்கள் காலை வழக்கத்தில் ஒரு குறுகிய தியான அமர்வை இணைப்பது மன அழுத்த அளவைக் குறைக்கவும், ஹார்மோன்களை சமப்படுத்தவும், ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவும். ஒவ்வொரு காலையிலும் சில நிமிட நினைவாற்றல் பயிற்சி தொப்பை கொழுப்பை எரிக்கும். உங்கள் உடலின் திறனில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

8. போதுமான தூக்கம்

எடை மேலாண்மையில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு போதுமான தூக்கம் இன்றியமையாதது. தூக்கமின்மை ஹார்மோன் ஒழுங்குமுறையை சீர்குலைக்கிறது. பசியை அதிகரிக்கிறது. தொப்பையைப் பெரிதுப்படுத்த உதவுகிறது. தொப்பை கொழுப்பைக் குறைக்க ஒவ்வொரு இரவும் 7-9 மணிநேர தரமான தூக்கத்தைப் பின்பற்றுங்கள்.

"காலப்போக்கில், இந்த பழக்கங்கள் தொப்பை கொழுப்பை எரிக்க உதவுவது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த நல்வாழ்வையும் நீண்டகால எடை நிர்வாகத்தையும் மேம்படுத்தும்" என்று டாக்டர் கபூர் முடிக்கிறார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.