பழத்தை அப்படியே சாப்பிட 8 காரணங்கள் உள்ளது! பழச்சாறில் சத்துக்கள் இல்லையா? என்ன விவரம்?
பழத்தை ஏன் அப்படியே சாப்பிடவேண்டும்? பழச்சாறில் சத்துக்கள் இல்லையா? இதோ விளக்கம்!
நீங்கள் பழத்தை அப்படியே சாப்பிடவேண்டும். பழத்தை சாறாகப் பருகினால், அதில் அத்தனை ஊட்டச்சத்துக்களும் கிடைத்துவிடாது. பழத்தை அப்படியே சாப்பிடும்போதுதான் அதன் ஊட்டச்சத்துக்கள் உங்களுக்கு அப்படியே கிடைக்கும். பழத்தை அப்படியே சாப்பிடும்போது உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பாருங்கள்.
அதிக நார்ச்சத்துக்கள்
பழங்களில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருக்கும். ஆனால் அவற்றை சாறாக்கும்போது, அந்த சத்துக்கள் நீங்கள் வடிகட்டும் சக்கையில் போய்விடும். இந்த நார்ச்சத்துக்கள் தான் உங்களுக்கு செரிமான ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது. இது உங்கள் ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்த உதவுகிறது. நார்ச்சத்துக்களை இழந்த பழச்சாறை நீங்கள் எடுத்துக்கொள்ளும்போது, அது உங்களுக்கு போதிய நார்ச்சத்தை வழங்காது.
குறைவான சர்க்கரை
பழச்சாறுகளில் நீங்கள் கூடுதல் சர்க்கரை சேர்க்காவிட்டாலுமே, அரைக்கும்போது அவற்றின் சர்க்கரை அளவு அதிகரிக்கும். ஏனெனில் இதில் நார்ச்சத்துக்கள் குறையும்போது சர்க்கரை இயல்பிலேயே அதிகரித்துவிடுகிறது. ஆனால் முழு பழங்களில் உள்ள இயற்கை சர்க்கரை அளவாகவே உடல் உறிஞ்சும். பழச்சாறில் உள்ள சர்க்கரை அளவுகளை உடல் மெதுவாகத்தான் உறிஞ்சும்.
அளவு
நீங்கள் பழங்களை முழுமையாக சாப்பிடும்போது உங்களுக்கு அளவு தெரியும். எனவே அளவாக எடுத்துக்கொள்வீர்கள். ஆனால், பழச்சாறாக பருகும்போது, அது உங்களுக்கு அளவை மீறி எடுத்துக்கொள்ள வைத்து, உங்கள் கலோரிகள் உட்கொள்ளும் அளவை அதிகரித்து விடுகிறது. ஒரு டம்ளர் பழச்சாறிலே பல பழங்கள் கலந்திருக்கும். இதனால் கலோரிகளின் அளவுகள் தெரியாமல் போய்விடும்.
சர்க்கரை உறிஞ்சும் வேகத்தை மெதுவாக்குகிறது
பழங்களில் உள்ள நார்ச்சத்துக்கள், உங்கள் உடல் சர்க்கரையை உறிஞ்சும் திறனை மெதுவாக்குகிறது. இது ரத்தத்தில் சர்க்கரை உயர்வதைத் தடுக்கிறது. ஆனால் பழச்சாறுகளை பருகும்போது, அது சர்க்கரையை உடனடியாக உடல் உறிஞ்ச செய்து ரத்தத்தில் திடீரென சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.
ஊட்டச்சத்துக்கள் தக்கவைக்கும் திறன்
முழு பழம் அதன் வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபைட்டோநியூட்ரியன்ட்களை தக்கவைத்துக்கொள்கிறது. ஆனால் அவற்றை பழச்சாறாக்கும்போது, சில பழங்களை அவற்றை இழக்கின்றன. பாக்கெட்களில் அடைக்கும்போது அவை முற்றிலும் போய்விடுவதால், பழச்சாறைவிட பழங்களே ஊட்டச்சத்துத்துக்களையும், ஆன்டி ஆக்ஸிடன்ட்களையும், ஃபைட்டோநியூட்ரியன்ட்களையும் கொடுக்கின்றன.
நீர்ச்சத்துக்கள்
முழு பழங்களை நீங்கள் அப்படியே எடுத்துக்கொள்ளும்போது, அது உங்கள் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்துக்களைக் கொடுக்கிறது. இதனால் நீங்கள் சாப்பிடும்போது, அது உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது.
செலவும் குறைவு
பழங்களை வாங்கும்போது அதற்கு ஆகும் செலவு குறைவுதான். ஆனால், நீங்கள் அதையே பழச்சாறாக கடைகளில் வாங்கும்போது அது அதிக விலைக்குத்தான் விற்கப்படுகிறது. இது சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கிறது. பாக்கெட்களில் அடைக்கும்போது, அது பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. ஆனால் பழங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாகின்றன.
அதிக கலோரிகள்
பழங்களில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் மற்றும் கலோரிகள் குறைவு. ஆனால் பழச்சாறில் கலோரிகள் அதிகம். நீங்கள் சரிவிகித உணவு உட்கொள்ள வேண்டும் என்றால், அதற்கு ஏற்றது பழங்கள்தான்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்