Top 8 benefits of Kesar Milk : கேசர் பாலை பருகுவதால் கிடைக்கும் 8 நன்மைகள்! ஆரோக்கியம், உற்சாகம் பொங்கி வழியும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Top 8 Benefits Of Kesar Milk : கேசர் பாலை பருகுவதால் கிடைக்கும் 8 நன்மைகள்! ஆரோக்கியம், உற்சாகம் பொங்கி வழியும்!

Top 8 benefits of Kesar Milk : கேசர் பாலை பருகுவதால் கிடைக்கும் 8 நன்மைகள்! ஆரோக்கியம், உற்சாகம் பொங்கி வழியும்!

Priyadarshini R HT Tamil
Jan 11, 2025 09:59 AM IST

கேசர் பாலில் உள்ள நன்மைகள் என்ன?

கேசர் பாலை பருகுவதால் கிடைக்கும் 8 நன்மைகள்! ஆரோக்கியம், உற்சாகம் பொங்கி வழியும்!
கேசர் பாலை பருகுவதால் கிடைக்கும் 8 நன்மைகள்! ஆரோக்கியம், உற்சாகம் பொங்கி வழியும்!

நோய் எதிர்ப்பாற்றல்

குங்குமப்பூவில் க்ரோசின் மற்றும் சாஃப்ரனால் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை வலுப்படுத்த உதவுகிறது. இது உங்கள் உடலை தொற்றுகள் மற்றும் நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.

மனஅழுத்தத்தைப் போக்குகிறது, மன நிம்மதியை அதிகரிக்கிறது

குங்குமப்பு பாலில் உங்கள் மனநிலையை அதிகரிக்கிறது. இது உங்கள் மனஅழுத்தம் மற்றும் பதற்றத்தைப் போக்குகிறது. குங்குமப்பூவில் உள்ள உட்பொருட்கள், உங்கள் மனநிலையை அதிகரிக்கிறது. உங்கள் மனதை அமைதிப்படுத்துகிறது.

செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

குங்குமப்பூ பாலை பருகும்போது அது உங்களின் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இது உங்கள் குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. வயிறு உப்புசத்தைப் போக்குகிறது. எனவே அதிகமாக சாப்பிட்டபின் இதை பருகினால் உங்கள் வயிற்றுக்கு இதமளிக்கிறது.

சரும பளபளப்பை அதிகரிக்கிறது

குங்குமப்பூவின் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உங்கள் சருமத்துக்கு ஊட்டமளிக்கிறது. சருமத்தில் உள்ள நிறமிகளை குறைக்கிறது. சருமத்துக்கு பளபளப்பைக் கொடுக்கிறது. பாலின் லாக்டிக் அமிலம் சருமத்துக்கு மேலும் அழகூட்டுகிறது. உடலுக்கு தேவையான நீர்ச்சத்தைக் கொடுக்கிறது.

எலும்பை வலுப்படுத்துகிறது

பாலில் உள்ள கால்சியச் சத்துக்கள் குங்குமப்பூவுடன் சேரும்போது, அது உங்கள் உடலில் எலும்புகள் அடர்த்தியாக வளர உதவுகிறது. எனவே வளரும் குழந்தைகளுக்கு இதை நீங்கள் உணவில் கட்டாயம் சேர்ப்பது அவர்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. அவர்களுக்கு எலும்பு வளரவும், பெரியவர்களாகவும் உதவுகிறது.

சுவாச ஆரோக்கியம்

குங்குமப்பூவில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது. சளி, இருமல் மற்றும் ஆஸ்துமா போன்ற அறிகுறிகளைப் போக்குகிறது. குங்குமப்பூ பாலை பருகும்போது, அது தொண்டைக்கு இதமளிக்கிறது. நுரையீரலின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.

இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

குங்குமப்பூவில் பொட்டாசியம் மற்றும் குரோசிட்டின் உள்ளது. இது உங்களின் ரத்த அழுத்தத்தை முறைப்படுத்த உதவுகிறது. இது உடலில் கொழுப்பு அளவை அதிகரிக்கிறது. ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்துக்கும் நல்லது.

நினைவாற்றல் மேம்பபாடு மற்றும் மூளை இயக்கம்

குங்குமப்பூவில் உள்ள உட்பொருட்கள், குறிப்பாக குரோசின், உங்கள் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. இது கற்றல் திறனை அதிகரிக்கிறது. மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்க குங்குமப்பூ பால் மிகவும் நல்லது. இது வயோதிகம் தொடர்பான நினைவாற்றல் இழப்பு கோளாறுகள் ஏற்படாமல் காக்கிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.