தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  75 Vande Bharat Trains Will Be Operated By 2023

75th Independence day: வருகிறது 'வந்தே பாரத்' ரயில்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 14, 2022 12:43 PM IST

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 வந்தே பாரத் ரயில்கள் தயாராகி வருகிறது.

வந்தே பாரத் ரயில்கள்
வந்தே பாரத் ரயில்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் ரூபாய் 97 கோடி செலவில் அதிவிரைவு ரயில் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கு வந்தே பாரத் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த ரயில் முதல் கட்டமாக டெல்லி- வாரணாசி இடையே இயக்கப்பட்டது. பின்னர் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததால் இது போன்று நாடு முழுவதும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வந்தே பாரத் ரயில் பெட்டிகளைத் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

தற்போது 75 ரயில்களை இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. தற்போது இந்த வந்தே பாரத் ரயில் பெட்டிகளைத் தயாரிக்கும் பணியானது சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் நடைபெற்று வருகிறது.

இது குறித்து ஆய்விற்கு வந்த ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில் "தற்போது 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் உள்ள நிலையில் முதல் கட்டமாக 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

அதுவும் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் இது நடக்க வேண்டும் என வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. முதலில் 50 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்குச் சோதனை ஓட்டம் செய்யப்பட்டு அடுத்த ஒன்றரை மாதத்தில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட உள்ளது.

உலகத் தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வந்தே பாரத் ரயிலின் பெட்டியிலும் ஏர் ஸ்ப்ரிங் பொருத்தப்பட்டுள்ளது. பின்னர் மாற்றுத்திறனாளிக்காக நவீன கழிப்பறைகள், ஆட்டோமேட்டிக் கதவுகள் பல புதிய தொழில்நுட்ப வசதிகள் இதில் இடம் பெற்றுள்ளன. 

ஏற்கனவே பட்ஜெட்டில் கூறியது போல, 400 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் அடுத்த நான்கு ஆண்டுக்குள் தயாரிக்கப்பட்டு இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளன.

அதேசமயம் இந்த வந்தே பாரத் ரயில் பெட்டிகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஐசிஎஃப் பணியாளர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்த வந்தே பாரத் ரயிலில் பாதுகாப்பிற்காக மின்தடை நேரத்தில் எரியக்கூடிய நான்கு எமர்ஜென்சி லைட்களும், நடைமேடை பகுதியில் நான்கு கண்காணிப்பு கேமராக்களும், நான்கு எமர்ஜென்சி ஜன்னல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரே டிராக்கில் ரயில் வருவது தெரிந்தால் அதனை முன்னரே அறியும்படி கவச் என்ற ஜிபிஎஸ் பாதுகாப்பு கண்காணிப்பு வசதி இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்