Protein Foods: குளிர்காலத்தில் உணவில் புரதத்தை சேர்க்க என்ன செய்யலாம்?
நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும் பயன்படும் புரத உணவுகள் குறித்துப் பார்ப்போ.
குளிர்காலத்தில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க, புரத உணவுகளை உண்பது நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். ஆன்டிபாடிகளின் வளர்ச்சிக்கு உதவும். சூப்கள், தானிய சாலட்கள், முட்டை, சுண்டல் மற்றும் மீன் உணவுகள் ஆகியவை புரதத்தைச் சேர்க்க உதவுகின்றன.
இந்த குளிர்காலத்தில் ஏராளமான புரதத்தை உண்பது அவசியம் என்று உணவியல் நிபுணரும் நீரிழிவு நோய் மருத்துவருமான டாக்டர் அர்ச்சனா பத்ரா கூறுகிறார்.
குளிர்காலத்திற்கு ஏற்ற புரத உணவுகள் பற்றி மருத்துவர் பரிந்துரைத்த உணவுகளைக் காண்போம்.
இதயத்திற்கேற்ற சூப்கள்: கோழி, வான்கோழி, பீன்ஸ் போன்ற புரதம் கொண்ட சூப்பினை உட்கொண்டால், புரத உட்கொள்ளலை அதிகரிக்கலாம். உங்கள் உடலுக்கான சக்தியைப் பெற முடியும்.
சீமைத்தினை சாலட்டுகள்: புரதம் நிறைந்த குயினோவா அல்லது சீமைத்தினையை உங்கள் சாலட்களில் பயன்படுத்துங்கள். இது ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களை வலுப்படுத்த உதவுகிறது. குளிர்கால காய்கறிகள், சில நட்ஸ்கள் மற்றும் ஒரு எலுமிச்சை சாறு ஆகியவற்றைக் கொண்டு வண்ணமயமான சாலட்டை உருவாக்கலாம்.அது நமது உடலை வலுப்படுத்த உதவுகிறது.
முட்டை அடிப்படையிலான காலை உணவுகள்: முட்டைகள் உயர்தர புரதத்தின் மூலமாகும். முழு தானியங்கள் நிறைந்து காணப்படும் சிற்றுண்டியில் ஆம்லெட்டுகள், அவித்த முட்டைகள் போன்றவற்றை உங்கள் காலை உணவில் வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். முட்டையுடன் கீரை, காளான்கள் மற்றும் சீஸ் ஆகியவற்றைச் சேர்ப்பது சுவை மற்றும் ஊட்டச்சத்து இரண்டையும் அதிகரிக்கும்.
வெதுவெதுப்பான ஜூஸ்கள்: புரதம் நிரம்பிய சூடான பாதாம் பாலைக்குடிக்கலாம். புரோட்டீன் பவுடர், வாழைப்பழம் மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்து ஜூஸ் செய்து குடிக்கலாம்.
வறுத்த கொண்டைக்கடலை: புரதம் அதிகம் உள்ள ஒரு முறுமுறுப்பான மற்றும் திருப்திகரமான சிற்றுண்டியாக வறுத்த கொண்டைக் கடலை இருக்கிறது. உங்களுக்குப் பிடித்த மசாலாப் பொருட்களுடன் சுண்டல் ஆகியவற்றைத்தயார் செய்து உண்ணவும். சாலட்களுடன் வறுத்த கொண்டைக்கடலையை கலந்தும் சாப்பிட்டால் நல்ல புரதம் கிடைக்கும்.
மீன் உணவுகள்: சால்மன் மற்றும் கெளுத்தி போன்ற மீன்கள் புரதம் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த ஆதாரங்களாகத் திகழ்கின்றன. வேகவைத்த அல்லது வறுக்கப்பட்ட மீன் இதயத்திற்கு நல்லது. இவை உங்கள் உணவில் புரதத்தைச் சேர்ப்பது மட்டுமல்லாமல், குளிர் காலத்தில் உடலை வலுவாக்கவும் பயன்படுகிறது. இதன்மூலம், உடல் வலுவாகவும் நெகிழ்ச்சியுடனும் இருக்கத் தேவையான ஊட்டச்சத்துக்களை உங்கள் உடல் பெறுவதை உறுதி செய்யலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்