6 Healthy Habits: ரமலான் நோன்புக்குப் பிறகு கடைப்பிடிக்க வேண்டிய 6 ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  6 Healthy Habits: ரமலான் நோன்புக்குப் பிறகு கடைப்பிடிக்க வேண்டிய 6 ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள்!

6 Healthy Habits: ரமலான் நோன்புக்குப் பிறகு கடைப்பிடிக்க வேண்டிய 6 ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள்!

Marimuthu M HT Tamil
Apr 12, 2024 06:22 PM IST

6 Healthy Habits: ரமலான் நோன்புக்குப் பிறகு, ஆண்டு முழுவதும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க உதவும் இந்த ஆறு அத்தியாவசியப் பழக்கங்களை, உங்கள் நல்வாழ்வுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

நோன்பு மாதத்திற்குப் பிறகு, ஆரோக்கியமான உடலையும் மனதையும் பராமரிக்க சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.
நோன்பு மாதத்திற்குப் பிறகு, ஆரோக்கியமான உடலையும் மனதையும் பராமரிக்க சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். (Freepik)

தமிழ்நாட்டில் இன்று(ஏப்ரல் 11) ரம்ஜான் கொண்டாடுப்படுவதாக தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். ஒரு மாத நோன்பு மற்றும் விருந்துக்குப் பிறகு, புனித ரமலான் மாதம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இது மகிழ்ச்சியான ஈத் கொண்டாட்டங்களுக்கு வழி வகுக்கிறது. ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அல்விதா ரமலான் அல்லது அல்விதா ஜும்மா என்று குறிப்பிடப்படுகிறது. இது புனித மாதத்திற்கு பிரியாவிடை அளித்தல் என்று பொருள். 

ஆண்டு முழுவதும் ரமலான் நோன்பின் பலன்களை அறுவடை செய்ய இந்த புனித மாதத்தில் நாம் பழக்கப்படுத்திய ஆரோக்கியமான பழக்க வழக்கங்களைப் பராமரிக்கும் அதே வேளையில், நோன்பு காலத்திலிருந்து தினசரி வழக்கத்திற்கு, சில பண்புகளை  சுமூகமாக மாற்றுவது அவசியம். 

புனித ரமலான் மாதம் ஒரு முக்கியமான காலத்தைக் குறிக்கிறது. நோன்பு மாதத்திற்குப் பிறகு, ஆரோக்கியமான உடலையும் மனதையும் பராமரிக்க சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். ரமலானுக்குப் பிறகு, நீண்ட காலத்திற்கு நன்மை பயக்கும் ஆரோக்கியமான பழக்கங்களைப் பராமரிக்க இது ஒரு வாய்ப்பாகும்.

ஜி சுஷ்மா கிளினிக்கல் டயட்டீசியன் கேர் மருத்துவமனைகள் பஞ்சாரா ஹில்ஸ் ஹைதராபாத், நோன்புக்குப் பிறகு பராமரிக்கவேண்டிய 6 ஆரோக்கியமான பழக்க வழக்கங்களைப் பகிர்ந்து கொள்கிறது.

நோன்பிற்குப் பிறகு பராமரிக்கவேண்டிய ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள்:

  1. நீரேற்றம்: ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. தர்பூசணி, வெள்ளரி, முலாம்பழம் போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதும் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும் ஒரு செயலாகும்.
  2.  லேசான உடல் செயல்பாடு: நடைபயிற்சி அல்லது எந்தவொரு மிதமான உடற்பயிற்சியும் தினமும் மேற்கொள்ளாவிட்டாலும், வாரத்தின் சில நாட்களாவது நடைபயிற்சி அல்லது மிதமான உடற்பயிற்சியினை செய்யவேண்டும். இது எடை மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை நிர்வகிக்க உதவும்.
  3. நன்கு சீரான உணவு: நார்ச்சத்து, வைட்டமின்கள், புரதம் போன்றவை நிறைந்த முழு உணவையும் உட்கொள்வது உடலுக்கு அத்தியாவசியச் சத்துகளைப் பெற உதவும். சிறு தானியங்கள், பச்சைக் காய்கறிகள், பழங்கள், தயிர், நட்ஸ் ஆகியவற்றை உணவில் சேர்க்கலாம். சர்க்கரை மற்றும் உப்பு நிறைந்த தின்பண்டங்களை உட்கொள்வதை குறைக்க முயற்சி செய்யுங்கள்.

4. தரமான தூக்கம்: உடல் ஓய்வெடுக்கவும் தன்னைத்தானே மீட்டெடுக்கவும் போதுமான தூக்கம் முக்கியம். 7 மணி முதல் 9 மணிநேர நல்ல தூக்கம் கொண்ட ஒரு நிதானமான வழக்கத்தை வைத்திருப்பது, தரமான தூக்கத்துக்கு உதவும். தரமான தூக்கம் நம் மறுநாள் பணிகளை உற்சாகமாக செய்ய உதவும். 

5. சுய கவனிப்பைப் பயிற்சி செய்யுங்கள்:   நம் உடலின் அடிப்படை நிலைமைகளை அடையாளம் காண, ஒரு மருத்துரால் முழு சுகாதார பரிசோதனைகளைப் பெறுதல் முக்கியமானது. மேலும், உங்கள் உடலை எளிதாக்க தியானம் மற்றும் சுவாசப் பயிற்சிகள் போன்ற பழக்கங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொள்ளுங்கள்.

6. நோன்பு பழக்கத்தை பராமரிக்கவும்: வாரத்திற்கு இரண்டு முறை உண்ணாவிரதம் இருப்பது உடலை நச்சுத்தன்மையில்லாமல் ஆக்கவும், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும். இது எதிர்காலத்தில் ரமலான் நோன்புக்கு சுமூகமாக மாறவும் உதவும்.

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.