6 Effective Belly Flat Drink : தொப்பை கரைத்து ஓடவிடவேண்டுமா? இதோ இந்த 6 பானங்கள் மட்டும் போதும்!-6 effective belly flat drink want to melt the belly and run here are just 6 drinks - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  6 Effective Belly Flat Drink : தொப்பை கரைத்து ஓடவிடவேண்டுமா? இதோ இந்த 6 பானங்கள் மட்டும் போதும்!

6 Effective Belly Flat Drink : தொப்பை கரைத்து ஓடவிடவேண்டுமா? இதோ இந்த 6 பானங்கள் மட்டும் போதும்!

Priyadarshini R HT Tamil
Aug 03, 2024 12:36 PM IST

6 Effective Belly Flat Drink : தொப்பை கரைத்து ஓடவிடவேண்டுமா? இதோ இந்த 6 பானங்கள் மட்டும் போதும்!

6 Effective Belly Flat Drink : தொப்பை கரைத்து ஓடவிடவேண்டுமா? இதோ இந்த 6 பானங்கள் மட்டும் போதும்!
6 Effective Belly Flat Drink : தொப்பை கரைத்து ஓடவிடவேண்டுமா? இதோ இந்த 6 பானங்கள் மட்டும் போதும்!

தொப்பைக்கான காரணங்கள்

அதிக கலோரிகள் எடுப்பது,

ஒரு நாளில் குறையவேண்டிய கலோரிகள் குறையாமல் இருப்பது

வயது

மரபு

அதிக கலோரி உணவுகளை எடுத்துக்கொண்டு, அவற்றை கரைக்கும் உடற்பயிற்சிகள் செய்யாதவர்களுக்கு உடல் எடை கூடுகிறது. இதனால் தொப்பை ஏற்படுகிறது.

வயோதிகமும் உங்கள் உடலில் மாற்றத்தை கொண்டுவரும். வயதாகும்போது தசைகளில் அது பாதிப்பை ஏற்படுத்தும். உடற்பயிற்சி செய்யாதவர்கள், விரைவில் தசைகளால் பாதிக்கப்படுகிறார்கள். இது அவர்கள் ஆரோக்கியமாக உடல் எடையை பராமரிக்க விடாமல் செய்கிறது. வயிற்றுப்பகுதியில் அதிகளவில் தசைகள் சேர்வதுதான் தொப்பையாக மாறுகிறது.

தொப்பையால் உங்களுக்கு நேரும் ஆபத்துக்கள்

உயர் ரத்த அழுத்தம்

ரத்தத்தில் ஆரோக்கியமற்ற அதிக கொழுப்பு

உறக்கமின்மை

இதய நோய்கள்

சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படுவது

புற்றுநோய்கள்

பக்கவாதம்

ஃபேட்டி லிவர்

மரணம் வரை கொண்டு சென்றுவிடும்.

உங்கள் தொப்பையைக் குறைக்க ஆரோக்கியமான உணவுகளுடன், உடற்பயிற்சியும் கட்டாயம் தேவை. இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில இயற்கை பானங்களும் உங்களுக்கு தொப்பையில் உள்ள கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டதாக இருக்கும். இதையும் நீங்கள் முயற்சி செய்யலாம்.

மழைக்காலத்தில் வெளிப்புறத்தில் உடற்பயிற்சி செய்பவர்களால் அதை சரியாகச் செய்ய முடியாது. எனவே அவர்களின் தொப்பையைக் கரைக்கும் இந்த 6 பானங்களை பருகலாம்.

எலுமிச்சை தண்ணீர்

இளஞ்சூடான தண்ணீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து பருகலாம். இதை தினமும் காலை வெறும் வயிற்றில் பருகினால், இது உங்கள் உடலின் வளர்சிதையை அதிகரித்து, உங்கள் தொப்பையை கரைக்க உங்களுக்கு உறுதுணை புரிகிறது.

மஞ்சள் பால்

பாலில் மஞ்சள் தூள் கலந்து பருகினால், அதில் உள்ள ஆன்டிபாக்டீரியல் குணங்கள், மழைக்காலத்தில் வரும் நோய்கள் மற்றும் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும். மேலும் உங்கள் உடல் எடை மற்றும் கொழுப்புக்களை குறைக்க உதவுகிறது.

இஞ்சி டீ

இஞ்சியில் தெர்மோஜெனிக் உட்பொருட்கள் உள்ளது. இது உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் உங்கள் உடல் தேவையான அளவு கலோரிகளை எரிக்க உதவுகிறது. தண்ணீரில் இஞ்சியை தட்டி சேர்த்து வடிகட்டி தேன் கலந்து பருகவேண்டும்.

மூலிகை தேநீர்

தண்ணீரில் இஞ்சி, புதினா, பட்டை, துளசி, கிராம்பு, ஏலக்காய், மஞ்சள் தூள், மிளகு, சீரகம், சோம்பு என அனைத்தையும் தட்டி சேர்க்கவேண்டும். இதை வடிகட்டி தேநீர் கலந்து பருகினால், சுவையான மூலிகை டீ தயார். இதில் உள்ள மனதை அமைதிப்படுத்தும் திறன் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உடல் எடையைக் குறைக்கவும், தொப்பையில் உள்ள கொழுப்பை கரைக்கவும் உதவுகின்றன.

ப்ளாக் காபி

இதை நீங்கள் மிதமான அளவு எடுத்துக்கொண்டால், அது உங்கள் உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது. இது உங்கள் உடலுக்கு ஆற்றலைத் தருகிறது.

நெல்லிக்காய் சாறு

இதில் கலோரிகள் குறைவு. இது செரிமானத்த அதிகரிக்கிறது மற்றும் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்கிறது.

கிரீன் டீ

ஒரு கப் கிரீன் டீயில் எண்ணற்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. மேலும் இதன் கொழுப்பை கரைக்கும் திறனும், எடையை குறைக்கும் திறனும் இதை பருகுவதை நீங்கள் வழக்கமாக்கிக்கொண்டால் உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தரும். உடலின் எடையையும் குறைக்க உதவும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.