Vazhai Ilai Benefits: உடல் நச்சு நீக்கம்..! முகத்தின் சுருக்கங்களை போக்கும் வாழை இலை - வேறு என்ன நன்மைகள் பாருங்க-6 banana leaf benefits for your stomach skin and immunity - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Vazhai Ilai Benefits: உடல் நச்சு நீக்கம்..! முகத்தின் சுருக்கங்களை போக்கும் வாழை இலை - வேறு என்ன நன்மைகள் பாருங்க

Vazhai Ilai Benefits: உடல் நச்சு நீக்கம்..! முகத்தின் சுருக்கங்களை போக்கும் வாழை இலை - வேறு என்ன நன்மைகள் பாருங்க

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 30, 2024 08:25 PM IST

Vazhai Ilai Benefits: முகத்தின் சுருக்கங்களை போக்கும் வாழை இலை க்ரீம், உடல் நச்சு நீக்கம், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், செரிமான ஆரோக்கியம் என பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டதாக உள்ளது.

Vazhai Ilai Benefits: உடல் நச்சு நீக்கம்..! முகத்தின் சுருக்கங்களை போக்கும் வாழை இலை
Vazhai Ilai Benefits: உடல் நச்சு நீக்கம்..! முகத்தின் சுருக்கங்களை போக்கும் வாழை இலை

குறிப்பாக தென்னிந்திய உணவுகளில் வாழை இலை என்பது அத்தியாவசியமானதாகவே உள்ளது. பச்சை நிறத்தில் மென்மையாகவும், பளபளப்பான மேற்பரப்புடனும், தட்டையான மற்றும் நீளமானதாக இருக்கும் வாழை இலைகள் பொதுவாக உணவுகளை சமைப்பதற்குப் மட்டுமல்லாமல், உணவுகளை பாதுகாப்பாக வைப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன.

வாழை இலைகள் சில நேரங்களில் அவற்றின் துடிப்பான நிறம் மற்றும் பெரிய அளவு காரணமாக பாரம்பரிய விழாக்கள் மற்றும் நிகழ்வுகளுக்கான அலங்காரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. மக்கும் தன்மை கொண்ட வாழை பிளாஸ்டிக் பொருள்களின் மாற்றாகவும், சுற்றுச்சூழலுக்கு நட்பாகவும் உள்ளன. வாழை இலையில் பல நன்மைகள் உள்ளன, அவை சமையலுக்கும், உணவுகளை பரிமாறுவதற்கும் மற்றும் அழகு நடைமுறைகளுக்கும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.

வாழை இலையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளும் ஒளிந்துள்ளன. வாழை இலையில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள்

2021ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க கெமிக்கல் இன்ஜினியரிங் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி வாழை செடிகள் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இயற்கையாகவே இடம்பிடித்திருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நோய் தொற்று பாதிப்பு ஏற்படுவதை தடுக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

வாழை இலைகளில் பாலிபினால்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உட்பட பல்வேறு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை ஃப்ரீ ரேடிக்கல்கள் உருவாக்குவதைத் தடுத்து, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கிறது. அதே நேரத்தில் நோய் எதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

நச்சு நீக்கம்

வாழை இலையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு கலவைகள் உடலின் இயற்கையாக ஏற்படும் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது, வீக்கத்தை குறைக்கவும் செய்கின்றன. இதன் மூலம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு பங்களிக்கிறது

செரிமான ஆரோக்கியம்

வாழை இலை சீரான ஜீரணத்துக்கு உதவுகிறது. அவை செரிமான மண்டலத்தை ஆற்றுப்படுத்தி, வீக்கம் மற்றும் அஜீரணம் போன்ற இரைப்பை குடல் பிரச்னைகளை அகற்ற உதவுகிறது. இலையில் இருக்கும் இயற்கையான சேர்மங்கள் உணவு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் போது, ​​குறிப்பாக சமைக்கும் போது உணவுகளில் சுற்றப்படும் போது, ​​சிறந்த செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை ஊக்குவிக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்

அழற்சி எதிர்ப்பு விளைவுகள்

வாழை இலையில் உள்ள கலவைகள், உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. வாழை இலைகளை உங்கள் உணவில் சேர்ப்பதன் மூலமோ அல்லது பாரம்பரிய வைத்தியங்களில் அவற்றைப் பயன்படுத்துவதன் மூலமோ, வீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், மூட்டு ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் உதவும் என கூறப்படுகிறது

சருமத்துக்கு நல்லது

வாழை இலைகளில் புரதம் மற்றும் வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் வைட்டமின் சி மற்றும் ஏ இருக்கிறது. வைட்டமின் சி, கொலாஜன் உற்பத்திக்கு முக்கியமானது, இது தோல் நெகிழ்ச்சியை ஆதரிக்கிறது. சுருக்கங்களின் தோற்றத்தை குறைக்கிறது.

வாழை இலை சாறு கொண்ட கிரீம் சுருக்கங்களைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.உங்களுக்கு எரிச்சலூட்டும் சருமம் இருந்தால், இந்த இலைகளின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உதவிகரமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.